பாடல்களை எவ்வளவு அழகாக எழுதிவிட்டாலும் கேட்பவர்கள் காதில் இனிமையாக இருக்கும் படியும் உள்ளக் கிளர்ச்சியும் உணர்ச்சிப் பெருக்கும் தோன்றும் வகையிலும் இசையை அமைத்துக் கொடுப்பது சாதாரணமானதல்ல. கதையில் எந்தப் பாத்திரம் அந்தப் பாடலைப் பாடுகிறது, அந்தப் பாத்திரத்தின் மனநிலை என்ன, என்பதையெல்லாம் அறிந்து, தான் அந்தப் பாத்திரமாகவே மாறிப் பாடலுக்கு இசை அமைப்பது மிகக் கடினமான வேலைகளில் ஒன்றாகும்.
அப்படிப்பட்ட பொறுப்பில் திரு.என்.எஸ்.பாலகிருஷ்ணன் அவர்கள் முதலில் ஈடுபட்டார்கள் . தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் இசை அமைத்த மூன்று பாடல்கள்தான் படத்தில் இடம் பெற்றன. ?செந்தமிழே வணக்கம்? ஒன்று ;மற்றொன்று ?சம்மதமா? ; இன்னொன்று ?பாடுபட்டாத் தன்னாலே?; இம்மூன்றும் நல்ல முறையில் இசை அமைக்கப்பட்டிருக்கின்றன. அவருடைய அனுபவத்துக்கும் திறமைக்கும் இது சிறந்த ஒரு எடுத்துக் காட்டு என்றால் தவறாகாது.
மற்ற எல்லாப் பாடல்களுக்கும், பின்னணி இசைப் பதிவுக்கும் திரு. எஸ்.எம்.சுப்பையா அவர்கள் பொறுப்பேற்றார்கள். அவரும் சீர்திருத்த நோக்கமும் முற்போக்குத் தன்மையும் கொண்டவராதலால் எங்களுக்கிடையில் அதிக அளவு ஒற்றுமை இருந்தது, அதனால் நான் எந்தக் காட்சியைப் பற்றியும் பாத்திரத்தின் நிலையைப் பற்றியும் விளக்கிக் கூறினாலும் உடனடியாக அதை உணர்ந்து, தானே பாத்திரமாக மாறி இசையமைத்துக் கொடுப்பார்.
இதனால்தான் கதை, வசனம்,நடிப்பு இவைகளின் சரியான அமைப்புக்குப் பாடலும் ஒத்துழைத்த நிலை உண்டாயிற்று.
இத்தகைய முறையில் அவர் இசையமைத்ததால் தான் ஒவ்வொரு காட்சியிலும் , பேச்சு/ பாடல் இல்லாத மௌனக் காட்சிகளிலும் கூடக் காட்சியை விட்டு அகல முடியாத நிலையில் மக்களின் கவனத்தை ஈர்த்துக் கொள்ளக் கதையால் முடிந்தது, இப்படிப்பட்ட உழைப்பை ஈந்து கதையோடும் பாத்திரங்களோடும் நிகழ்ச்சிகளோடும் ஒன்றுபட்டுப் பணியாற்றிய அவருடைய திறமையைப் பற்றிக் கேட்பவர்களுக்கு, நாடோடி மன்னன் படத்திலுள்ள ஒவ்வொரு காட்சியும் பதில் சொல்லுகிறது என்று சொன்னால் மிகையாகாது.
<strong>நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் -</strong>
முழுமையான வழிகாட்டிக்கு செல்ல <a href=”http://lordmgr.wordpress.com/2010/06/30/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c/” target=”_blank”>இங்கு </a>சொடுக்கவும்.




Pingback: நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் « எம்.ஜி.ஆர்