1. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய தகப்பனார் வழி பூர்வீகம்

மக்கள் திலகம் அவர்களுடைய தந்தை கோபாலன் அவர்களுடைய தந்தை பாட்டனார் உடைய பாரம்பரியம் கோவை மாவட்டத்தில் காங்கேயம் என்ற ஊருக்கு அடுத்து உள்ள புத்து஡ர் என்ற கிராமம். அதில் ஒரு சிறிய ஜமீன் போல் ஒரு மிராசுதாரர் ஆகவும் வாழ்ந்து உள்ளார்கள். இவர்கள் வாழும் காலத்தில் கோவை மாவட்டத்திற்கு பெயர் “கொங்கு நாடு” என்று சொல்லப்பட்டதாம். அவர்களுடைய ஜாதி கொங்கு வெள்ளாளர் என்று சொல்லப்படுகிறது.

இந்த கொங்கு நாட்டில் இருந்து அந்த காலத்தில் கோபாலன் அவருடைய தாய் தந்தை கேரளா பாலக்காடு வடவனூருக்கு வந்து குடியேறிவிட்டதாக தெரிகிறது. எப்படி கோவை மாவட்டம் என்பது என்னுடைய ஆய்வில் தெரிகிறது. எப்படி இருந்தாலும் கோபாலன் அவர்களுடைய பாரம்பரியம் தமிழ்நாடு கோவை மாவட்டம் என்பது என்னுடைய ஆய்வில் தெரிகிறது. இப்போது என்னுடைய ஆய்வில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய பாரம்பரியம் தமிழ்நாடு தான் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. இப்போது நமக்கு எம்.ஜி.ஆர் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தான் முக்கியம். பூர்விகம் தமிழ்நாடு இவர் பிறந்தது ஈழத்தமிழ்நாடு இலங்கை கண்டி. இவர் படித்தது வளர்ந்தது பிறகு வேலைக்கு சென்றது. செந்தமிழ்நாடு கும்பகோணம் ஆரம்பம் இவருடைய அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்காக்கள் கேரளா நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நமக்கு எம்.ஜி.ஆர் அவர்கள் தான் கணக்கு. இவருடைய வரலாறு எப்படி என்பதைதான் நாம் அறிய விரும்புகிறோம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நான் ஒரு தமிழன் என்பதை பல முறை சொல்லி இருக்கிறார்.

இது மக்கள் திலகம் அவர்களுடைய தாத்தா, பாட்டி அவர்களுடைய வரலாறு ஆகும். அந்த வரலாறுக்கு உட்பட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் தந்தை கோபாலன் அவர்கள் கேராளாவிற்கு எந்த சூழ்நிலையில் எந்த வருடத்தில் கேரளா வந்தார்கள் என்பது ஒரு பக்கம். கோவையிலிருந்து சுமார் 30, 40 மைல் தொலைவில் உள்ள பாலக்காடு என்ற பெரும் நகரத்திற்கு அடுத்து உள்ள 20 மைலில் உள்ள வடவனு஡ர் என்ற ஊரில் மருதூர் என்ற இடத்தில் வசித்து வந்த கோபாலன் அவர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சத்தியபாமா அவருடைய ஊர் குழல் அந்தம். வடவனூருக்கு அடுத்து உள்ள குழல் அந்தம் கோபாலன் அவர்கள் பட்ட படிப்பு வரை படித்து உள்ளவர். எந்த விஷயத்திலும் கோபப்படமாட்டார். மனிதாபிமானத்தோடு நடந்து கொள்பவர். இவர்கள் வடவனூரில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தது இதில் இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளது. இதில் நான்காவது குழந்தைதான் சக்கரபாணி இந்த குழந்தைகளுடன் கோபாலன் சத்தியபாமா அவர்கள் வடவனூரில் வாழ்ந்து இருந்த காலத்தில் கோபாலன் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் சொத்து விஷயத்தில் தகராறுகள் ஏற்பட்டு அது ரொம்ப பெரிய விஷயமாக பெரிய தகராறுகள் பெரிய அளவில் உண்டாகும் சமயத்தில் கோபாலன் அவர்கள் தர்ம நியாயம் அற்றவர்களுடன் நாம் சேர்ந்து வாழ்வதா என்ற எண்ணத்தோடு இலங்கையில் கண்டியில் உள்ள தன் நண்பர்களுக்கு தன்னுடைய குடும்ப சூழ்நிலையை எழுதுகிறார். அவர்களும் அதை படித்து புரிந்து கொண்டு உங்களுக்கு அங்கு வாழ பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இங்கு எப்போது வருகிறீர்கள் (கண்டி) புறப்பட்டு வரவும். வரும் போது தெரியப்படுத்திவிட்டு வரவும் என்று கடிதம் எழுதினார்கள். அந்த கடிதம் கிடைத்த உடனே கோபாலன் அவர்கள் மிக ரகசியமாக இந்த விஷயத்தை வைத்து கொண்டு இலங்கை புறப்படும் ஏற்பாடுகளை செய்கிறார்.

MGRகோபாலன் அவர்கள் பாலகாட்டில் ஒரு சில வருடங்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட முனிசிப்பு கோர்ட்டில் துணை நீதிபதியாக பணியாற்றி வரும் காலத்தில் வடவனூரை சேர்ந்த ஒரு வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உறவினர்கள் வற்புறுத்தினார்கள். அதை ஏற்றுக்கொள்ளாத துணை நீதிபதி உங்க்ள் பக்கத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை. எனவே உங்களுக்கு நான் உதவ முடியாது என்று சொன்னதில் ஏற்பட்ட எதிர்ப்பும் அந்த ஊரில் கோபாலன் அவர்களுக்கு உண்டு. அதன் படி 1913ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நான்கு குழந்தைகளையும், தன் மனைவியையும் அழைத்துகொண்டு இலங்கைக் செல்கிறார். இலங்கை கண்டிக்கு சென்றவுடன் ராமுபிள்ளை வேலுபிள்ளை இருவரும் கோபாலன் அவர்கள் குடும்பத்தினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். பிறகு இலங்கையில் கண்டி என்பது ஒரு பெரிய நகரம் அங்கு 100க்கு 50 சதவிதம் பேர்கள் தமிழர்கள். இதே போல் இலங்கையில் பல இடங்களில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் நாடுதான் ஈழநாடு இலங்கை மறுபெயர் ஈழநாடு என்று சொல்லப்படுகிறது. இது உலகம் அறிந்த விஷயம்.

இந்த காலகட்டத்தில் ஈழ தமிழர்கள் வாழும் கண்டியில் பிறக்கிறார் எம்.ஜி.ஆர் அவர்கள் 1917ல் செவ்வாய் கிழமை காலை 11.36க்கு பிறக்கிறார். 5வது குழந்தையாக தாய் தந்தையர் எல்லோரும் சேர்ந்து ராமச்சந்திரா என்று பெயர் வைக்கிறார்கள். அவரை அழைக்கும் போது நான்கு அண்ணன்கள் அக்காமார்கள் ராமச்சந்திரா என்று அழைத்து கொஞ்சி விளையாடும் போதும் அதை பார்த்து கோபால் சத்தியபாமா அவர்கள் ரசிப்பார்கள். நான்காவது குழந்தையாக சக்கரபாணிக்கும் எம்.ஜிண.ஆருக்கும் 4 வயது வித்தியாசம் என்று சொல்லப்படுகிறது. எம்.ஜிண.ஆருக்கு 3 வயது ஆகும் போது அவர் ஓர் அளவுக்கு ஓடி, ஆடி விளையாடுவதும் அப்பா கோபாலன் அவர்கள் வீட்டிற்கு வந்தவுடனே அவரை கட்டி பிடித்து கொஞ்சுவாராம்.

இந்த காலகட்டத்தில் கோபாலன் அவர்களுக்கு ஒரு கல்லூரியில் பேராசியராக வேலை கிடைத்தது. அதில் இருந்த சில வருடங்கள் கழித்து கண்டியின் மாவட்ட நீதி மன்றம் ஆங்கிலத்தில் முனிசிப் போர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நான்கு குழந்தைகளுடன் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் கோபாலன் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. கோபாலன் அவர்கள் மாரடைப்பால் 1920ம் ஆண்டு இறந்து விடுகிறார். பிறகு சத்திய தாய் தன் கணவர் இறந்த துயரத்திலே மூழ்கி விடுகிறார். ராமுபிள்ளை, வேலுபிள்ளை அவர்கள் ஆறுதல் சொல்லி செல்கிறார்கள். அதன் பிறகு தன் கணவரை இழந்த சத்தியபாமா அவர்கள் தன் கணவர் வேலை பார்த்த காலத்தில் வாங்க பட்ட சொந்த வீடு சேர்த்து வைத்து இருந்த பணம், நகைகள் இவைகளை எல்லாம் செலவுக்கு வைத்து கொண்டு கண்டியிலே வாழ்கிறார். இந்த காலகட்டத்தில் திடீர் என்று விஷகாய்ச்சல் ஏற்பட்டு தன் இரண்டு பெண்குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இறந்து விடுகிறார்கள்.

MGRஏற்கனவே தன் கணவரை பறிக்கொடுத்து விட்டு துக்கத்தில் இருக்கும் சத்தியபாமா அவர்களுக்கு மேலும் ஒன்றுக்கு பின் ஒன்றாக மூன்று குழந்தைகளும் இறந்ததை நினைத்து அழுது புலம்பும் சமயத்தில் MGR தன் தாயின் கழுத்தை கட்டி பிடித்து அம்மா அழாதே! அம்மா என்று சொல்லுவாராம். ஐந்தாவது குழுந்தையாக நீ பிறந்த பிறகு தான்னடா. பெற்ற அப்பாவையும், உன் கூட பிறந்த 3 பேரும் செத்து போனார்களடா, என்று MGRரை கட்டி பிடித்து அழுவாராம். அவருடைய சேட்டைகள், விளையாட்டுகள் எந்த கவலையும் தெரியாமல் ஓடி, ஆடி மழலை பேச்சு பேசும் போதும் எல்லாம் அந்த தாய் பழைய நினைவுகள் எல்லாம் மறந்து சக்கரபானியையும், ராமச்சந்திரனையும் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய சபதத்தோடு மீண்டும் வேலுபிள்ளை, ராமுபிள்ளை அவர்களின் உதவியை நாடுகிறார்கள். அது சமயம் அவர்கள் இருவரும் அம்மா சத்திய தாயிடம் அண்டி பிழைக்க வந்த இடத்தை விட்டு விட்டு தங்களுடைய சொந்த இடத்திற்கே செல்வது மிக சிறந்தது ஆகும். அது சமயம் சத்திய தாய் சொல்லுகிறார், எனக்கு சொந்த இடம் என்பது கேரளா வடவனூர்தான், அந்த ஊர் வேண்டாம் என்று தான் சபதத்தோடு இங்கு வந்தோம். இப்போ அவர் இல்லாமல் வடவனூருக்கு எப்படி செல்வேன் என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. அது சமயம் தான் கும்பகோணத்தில் இருக்கும் மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் வேலை செய்யும் நாராயணன் என்பவர் இவர் சத்தியபாமா அவர்களுக்கு நெருங்கிய உறவினர் நாராயணனுக்கு சத்திய பாமா அவர்கள் தன் குடும்ப நிலைமைகளை பற்றி விரிவாக கடிதம் போடுகிறார். அதன்படி அவருடைய அழைப்பின் படி நீங்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு கும்பபோணம் வந்து விடுங்கள் என்று சொல்லுகிறார், அதன்படி வேலுபிள்ளை, ராமுபிள்ளை உதவியுடன் சத்தியபாமா குழந்தைகளை அழைத்து கொண்டு கும்பகோணம் வந்து சேருகிறார்கள்.

சத்தியபாமா அவர்கள் நாராயணன் அவர்களுடைய உதவியுடன் கும்பகோணத்தில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் தன்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது ஓரளவுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று திரு. நாராயணன் அவர்களிடம் சத்தியபாமா அவர்கள் சொல்கின்றார். அதன்படி, இந்த இரண்டு பையன்களையும் கும்பகோணத்தில் உள்ள யானை அடி இடத்தில் உள்ள அரசாங்க பள்ளி கூடத்தில் சேர்த்து விட்டார்க்ள. மேலும் பையன்கள் படிப்பதற்கு சிலேட்டு புத்தகங்களையும் வாங்கி கொடுத்து விட்டு பிறகு இந்த பையன்களின் பள்ளி படிப்புக்கு ஆன செலவுகளுக்கும், சாப்பாட்டிற்கும் என்ன செய்வது என்ற பிரச்சனை உண்டாகிறது. இந்த நேரத்தில் சத்தியபாமா அம்மா அவர்கள் மிக மன தைரியத்தோடு நான் எங்கேயாவது வேலை செய்து தன் பிள்ளைகளை காப்பாற்றுவேன் என்று நாராயணனிடம் செல்கிறார். அடுத்து சத்தியபாமா குடி இருக்கும் பகுதியில் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் இந்த அம்மாவினுடைய நிலைமைகளை பார்த்து இந்த அழகான பையன்களுடைய நிலைமைகளை அறிந்தும் சிலர் வேலைக்கு செல்ல உதவி செய்கிறார்கள். MGRஇந்த நிலையில் MGR அவர்களும், சக்கரபானி அவர்களுக்கும் 3வயதுதான் வித்தியாசம். சக்கரபானி, தம்பியை ராமசந்திரா என்று அழைப்பார். பள்ளிகூடம் முடிந்து அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இவர்களுடைய தந்தை பற்றி போதனை சொல்லுவார்கள். சத்தியம், தர்மம். நேர்மை, நீதி பக்தி எல்லாம் நிறைந்தவர் உங்கள் தந்தை, நன்றாக படித்தவர் நீதிபதியாகவம். பேராசிரியராகவும் பணிபுரிந்து பலரிடம் மதிப்பும், மரியாதையும் பெற்றவர் அவர் போல் நீங்களும் நன்கு படித்து வாழ்ந்து காட்ட வேண்டும் இதை கேட்ட இருவரும் தன் தாயிடம் உறுதிமொழி எடுத்து கொள்கிறார்கள். தந்தை சொல்லுக்கு மந்திரம் இல்லை என்பார்கள். ஆனால் இவர்களுக்கு தந்தைகக்கு பதிலாக தாய் சொல்கிறார் மந்திரத்தை. அந்த மந்திரத்தை மனதில் பதிவு செய்து கொண்டவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். தன் தாயினுடைய உழைப்பாள் நாம் மூன்று வேளையும் சாப்பிட்டு கொண்டு பள்ளிக்கூடம் சென்று வருகிறோம் என்ற எண்ணம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மனதுக்குள் நாளுக்கு நாள் வளர தொடங்கியது. இந்த இருவருடைய பள்ளி வாழ்க்கையின் சில சம்பவங்களை இங்கே கூறுகிறேன்.

8 comments on “1. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய தகப்பனார் வழி பூர்வீகம்

 1. Sathik சொல்கிறார்:

  If u haved pdf format in this tobic pls give me the link my email s_b_sha@soon.com

 2. Sathik சொல்கிறார்:

  Thanks Ur Quick responce

 3. balumgc சொல்கிறார்:

  The HIstory u have written about M.G.R it is nice ,but some information are wrong ,M.G.Chakrapani and M.G.R age difference is 6yrs .M.G.C was born in the year 1911,ans satyabamma had only three children not five

  M.G.Chakrapani & M.G.R Grandson
  M.G.C.B.Pradeep

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s