10.தினமும் பனங்கள்ளை சாப்பிட வேண்டும்


இது வரையிலும் எம்.ஜி.ஆருக்கு தன் உடம்பு என்ன செய்கிறது, எதற்தாக தனக்கு மருந்து கொடுக்கின்றார்கள். அதுவும் ஒரு மாத காலத்திற்கு என்று நினைத்து கொண்டு இருக்கிறார், ஆறுமுக நாடார் நேராக கல் இறக்கும்தோப்புக்கு செல்கிறார். அங்கு முக்கியமான ஒரு நபரை அழைத்து தினமும் காலையில் 7 மணிக்கு ஒரு மரத்து பணமரத்து கள் ஒரு முட்டியோடு (சிறிய மண் குடுவை) பனங்கள்ளை, சத்தியபாமா அவர்கள் வீட்டில் இது மருந்துக்காக மிக கவனமாக எச்சரிக்கையாக எடுத்து சென்று கொடுக்கவேண்டும். அதன்படி மறுநாள் காலையில் 7 மணிக்கு ஒரு மண் குடுவையுடன் சத்தியபாமா வீட்டில் கதவை தட்டி அம்மாவை அழைத்து அம்மா தோப்புக்கார அய்யா அவர்கள் இதை தங்களிடம் கொடுக்க சொல்லி இருக்கிறார். இது போல் தினமும் காலை 7 மணிக்கு கொண்டு வருவேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். அடுத்து குடுவையில் கொண்டு வந்த பனங்கள்ளை சுத்தமாக ஒரு துணியில் வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்து கொண்டு காலையில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும்போது தன் மகனை அழைத்து ராமச்சந்திரா வைத்தியற் கொடுத்து அனுப்பிய மருந்த ரெடி. இதை உடனடியாக வந்து சாப்பிட்டு விடு தன்மகனை அழைக்கிறார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் முகபாவம் கசப்பு அடைந்து போய் வேண்டா வெறுப்போடு, இதை வாங்கி குடித்த எம்.ஜி.ஆர் சற்று நேரத்தில் என்ன இனிப்பாக இருக்கிறதே இது என்ன மருந்து என்று தாயிடம் கேட்கிறார்.

உடனே தாய், நீ சாப்பிடுவது மருந்து அது இனிப்பா இருக்கா கசப்பா இருக்கா என்று கேட்க கூடாது. கொடுத்ததை குடித்து விடவேண்டும். இதே போல் தினம் 7 மணிக்கு குடிக்க வேண்டும். இதை கேட்ட MGR அவர்கள் அம்மா சொல்லை தட்டாமல் பயபக்தியோடு நடந்து கொள்ளுபவர். ஒரு நாள் காலையில் உடற்பயிற்சிக்கு செல்லாமல் வீட்டு வாசலிலே வெளியே நின்று கொண்டு மருந்து எடுத்து கொண்டு வரும் நபரை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார் மருந்து கொண்டு வரும் அவரும் ஒரு துணி பையில் ஒரு சிறிய மண் குடுவையில் நிறைந்த பனை மரத்து கள்ளை கொண்டு வருகிறார். இதை MGR அவர்கள் அம்மா உள்ளே வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் இதை என்னிடம் கொடுங்கள் கொடுத்து விடுகிறேன் என்று கேட்டு வாங்கி கொண்டார், குடுவையே பிரித்து பார்க்கிறார். அந்த குடுவையில் உள்ள கல்லில் தேன் ஈக்கள் செத்து மிதப்பதோடு நூங்கு நொறையோடு இருப்பதை பார்க்கிறார். இது என்னவாக இருக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும்போது, வீட்டில் உள்ளிருந்துகள் குடுவை இன்னும் வரவில்லையே என்று நினைத்து கொண்டு வெளியே வருகிறார்கள் சத்தியபாமா அம்மா அவர்கள். கள் குடுவை MGR கையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியோடு மண் குடுவையை கையில் வாங்கி கொள்கிறார். உடனே MGR அம்மாவை பார்த்து அம்மா இது என்ன இதிலே பூச்சி புழுவும் பொங்கும் நுறையாக இருக்கிறதே இது என்ன என்று அம்மாவிடம் சற்று கோபத்தோடு கேட்கிறார். உடனே அம்மா! ராமசந்திரா இது உனக்கு தேவையில்லை, நான் இதை சுத்தம் செய்து கொண்டு வருகிறேன். நீ குடித்துவிட வேண்டும் என்று அம்மா சொன்னவுடன் அவர் குடித்து விட்டார்.

இருந்தாலும் MGRக்கு குடிப்பதற்கு சுவையாக இருக்கிறது. அன்னைக்கு குடுவையைப் பார்க்கும்போது பூச்சி புழுவும்இ பொங்கும் நுறையாக இருந்தது இது என்ன மருந்து என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணத்தோடு MGR அவர்கள் இந்த பிரச்சனையை விட்டு விட்டு ஒரு நாளைந்து நாள் கழித்து அந்தகல் குடுவை கொண்டு வரும் நபரிடம் ஐயா, இந்த மருந்து குடிப்பதற்கு நல்ல சுவையாக இருக்கிறது. முன்னைவிட என் உடம்பு நல்ல தெம்பாக, வலுவாக இருக்கின்றது. இது என்ன மருந்து எங்கே இருந்து எடுத்து வருகிறீர்கள். பொங்கும் நுறையாக இருக்கிறது என்று அவரிடம் அன்போடு கேட்கின்றார். உடனே கள் குடுவையை கொண்டு வந்தவர் இந்த கள்ளுடைய விவரத்தையும் மகிமையையும் விவரமாக சொல்லி விடுகிறார். இதை அறிந்து கொண்ட MGR அடுத்து ஒரு இரண்டு நாளில் மதிய நேரத்தில் சாப்பாட்டு நேரத்தில் தன் தாயிடம் அம்மா எனக்கு கொடுத்து வருகிறீர்களே அதற்கு பெயர் என்ன என்று அம்மாவிடம் கேட்கிறார். அம்மா நீங்கள் சொன்னால்தான் மருந்தை சாப்பிடுவேன் என்று அடம்பிடிக்கிறார். ராமசந்திரா இதற்கு பெயர் பனங்கல் வைத்திய முறைபடி இதை வைத்தியர் ஆறுமுக நாடார் ஏற்பாட்டில் நான் உனக்கு தினமும் நான் கொடுக்கின்றேன் என்று சொல்கிறார். இதை கேட்ட MGR சற்று யோசிக்கிறார். கம்பெனியில் வேலை செய்கின்ற வாத்தியார்கள் மற்றும் பெரிய ஆட்கள் கள் குடிப்பதை பற்றி பேசி கொண்டு இருப்பதை MGR சில நேரங்களில் கேட்டு இருக்கிறார்.

அந்த கள்ளுதானே இது என்ற முடிவோடு தன் தாயிடம் அம்மா நீ இதை மருந்து என்று நினைக்கிறாய். அம்மா இது மருந்து அல்ல இது போதை பொருள் இதை இப்போ குடிப்பவர்கள் நாளடைவில் ஒரு பெரிய குடிகாரனாக ஆகிவிடுவார்கள். இப்படிப்பட்ட பொருளை எனக்கு கொடுத்து என்னை ஒரு குடிகாரனாக்கி விடாதே நாளையிலிருந்து குடிக்கமாட்டேன் என்று கடுமையாக சற்று கோபத்தோடு சொல்கிறார். உடனே சற்றும் தயங்காமல் அம்மா படபடவென்று மகனே என்ற பொருள் நாம் எப்படி எடுத்து கொள்கிறோம் என்பது நமது மனநிலையை பொருத்தது. நீ சொல்வது போல் மற்றவர்களுக்கு போதை பொருளாக இருக்கலாம், ஆனால் இது உனக்கு மருந்து, எனவே நீ இதை மருந்தாக நினைத்து 30 நாட்களுக்கு குடித்தாக வேண்டும். இது மாதிரி குடிபொருள்களையோ, போதை பொருள்களையோ, குடிப்பர்களை என் வீட்டுக்குள் கூட நுழையவிடமாட்டேன் இதை மிக கண்டிப்பாக சொல்கிறார். இது உங்களுக்கும் தான் என்று சொன்னவுடனே இதை கேட்ட MGR அவர்கள் தாயின் அறிவுரைகளை கேட்டு மெளனமாக இருந்து விட்டார். அதோடு சத்திய தாய் சில அறிவுரைகளை கூறினார்க்ள. கம்பெனியில் உடல்நிலை வளர்ச்சிக்காக பனங்கல் வாங்கி கொடுத்தார்கள் என்று அண்ணன் சக்கரபாணி உள்பட யாருக்கும் தெரியகூடாது. அதற்கு பதிலாக ஏதோ கசாயம் கொடுத்தார்க்ள என்றுதான் நீ சொல்ல வேண்டும். இப்படி ஒரு மாதத்திற்குள் ஓர் அளவு உடல் சற்று, உடல் வளர்ச்சியடைந்து இருந்தது. ஒரு மாதம் ஆகிவிட்டது, நான் வரும்போது இருந்த உடல் நிலை எனக்கே கொஞ்ச நல்லா வந்து இருக்கிற மாதிரி தெரியுது, நல்லா பசிக்குது நல்லா சாப்பிடுகிறேன். கம்பெனிக்கு சென்ற பிறகு கம்பெனியில் எல்லோருக்கும் கொடுக்கும் உணவைதான் உண்ணமுடியும் எனக்கு என்று தனியாக கேட்க முடியாது.

மேலும், காலையிலேயே உடற்பயிற்சி, சண்டை பயிற்சி, மாலையில் நடன பயிற்சி, நடிப்பு பயிற்சி இப்படி எனக்கு தினமும் பயிற்சிகள் இருக்கும் இந்த மாதிரி பயிற்சி எடுத்து கொள்ளும் காலத்திலே உடல் சற்று மெலியலாம் அதை பார்த்துவிட்டு மகனை சரியாக சாப்பிடுவது இல்லையா என்று கேட்க கூடாது. அம்மா எனக்கு உடல் பெரியதாக இருக்க வேண்டும் என்று ஆசையில்லை. அதற்கு பதிலாக உடல் வளர்ச்சியை மன வளர்ச்சி, திடம் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, நான் தொழிலில் மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும், அதோடு அண்ணனும் தொழிலில் வளர்ச்சி அடையவேண்டும் என்பது என்னுடைய நோக்கம், என்று சொல்லி முடித்தவுடனே சத்தியதாய் தன்மகனை கட்டி பிடித்து, உச்சி முகர்ந்து மிக ஆனந்தப்படுகிறார். மகனே உங்கள் தொழிலில் மேலும் மேலும் உயரவேண்டும் எந்த குறையும் இல்லாமல் வளர்ச்சி அடையவேண்டும் என்று கடவுளை நான் வணங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி மகனை கம்பெனிக்கு அனுப்பி வைக்கிறார்கள். கம்பெனி சென்ற MGRரை பார்த்து எல்லோரும் இப்போது உன் உடல்நிலை நல்லா இருக்கு, ஓரளவு உன் உடம்பு நன்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று சொல்லி அண்ணன் சக்கரபாணி உள்பட எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள்.

அவர்களிடம் விடைபெற்று கம்பெனி முதலாளியைப் பார்த்து வணங்குகிறார். என்னாடா ராமசந்திரா மருந்துகளை எல்லாம் ஒழுங்காக சாப்பிட்டியா இப்போ உன் உடம்பு எப்படி இருக்கு என்று கேட்கி஢றார். உடனே MGR ஐயா எங்க அம்மா கொடுத்த மருந்துகளையும், உணவுகளையும் ஒழுங்காக சாப்பிட்டேன், இப்போ என் உடம்பு எப்படி இருக்குது நீங்கள் சொல்லுங்கள், இதை கேட்ட முதலாளி இவன் அழகன் மட்டுமல்ல, மிக அறிவிலும் கூட என்று நினைத்து கொண்டு ராமசந்திரா நீ முன்னைவிட நல்லாதான் இருக்கிறாய் என்று கம்பெனி முதலாளி வாழ்த்துகிறார். பிறகு MGR அவர்கள் தொடர்ந்து தன் பணிகள் எந்த குறைகளும் ஏற்படகூடாது என்ற எண்ணத்துடன், அடுத்து நமக்கு என்ற வேஷத்தில் நடிப்பு பாத்திரம் கி஢டைக்கும் அதில் நாம் எப்படி புகழ் அடைய வேண்டும் என்று நினைத்து கொண்டு தன் பணிகளை தொடர்கிறார். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற எண்ணத்துடன் கம்பெனியில் பல நாடகங்களில் நடித்து கொண்டு இருக்கும்போது ஒரு நாள் தனக்கும் அண்ணன் சக்கரபாணிக்கும் சரியான சம்பளம் போடவில்லை. ஏதோ அப்போ அப்போ அம்மாவிக்கு அனுப்பி வைப்பதற்கு பணம் கொடுக்கிறார்கள் தனக்கு சம்பளம் நிர்ணயிக்கவில்லையே என்பதை பற்றி யோசிக்கிறார்கள்.

நாடக கம்பெனியில் சேர்ந்து கிட்டத்தட்ட 3 ஆண்டு காலம் பணியாற்றியும் நமக்கு சம்பளம் நிர்ணயிக்கவில்லையே என்று நினைத்து கவலைபடுகிறார்கள். இவர்கள் இருவரும் நாடக கம்பெனியில் பயிற்சி கற்றுக் கொள்ளும்போது முக்கிய நாடக நடிகர்கள் P.U. சின்னப்பா, காளி.என். ரத்தினம், மற்றும் பல முக்கிய நடிகர்கள், நாடக வாத்தியர் T.S. பாலையா, M.கந்தசாமிபிள்ளை, MGR, சக்கரபாணிக்கும் நாடக பயிற்சியாளராக இந்த நாடக கம்பெனியில், MGRக்கும் MGCக்கும் தினம் பல பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. அந்த கால கட்டத்தில் MGRக்கு சண்டை பயிற்சி மிக கடுமையாக இருக்கும், MGR மிக சுறு சுறுப்பாகவும் கற்றுக் கொண்டார். கம்பெனியின் முதலாளி பெயர் சச்சிதானம் பிள்ளைக்கு MGR இவ்வளவு சிறிய வயதில் புத்தி கூர்மையுடன் பயிற்சிகளை இவ்வளவு பெரிய அறிவுள்ளவனாக இருக்கிறானே என்று பெருமை அடைந்தார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s