2.பத்து வயதில் கணக்கு கேட்டார்!

எம்.ஜி.ஆர் அவர்கள் பள்ளிக்கூடத்தில் மூன்றாவது வகுப்பு படித்து கொண்டு இருக்கும் காலத்தில் ஒரு நாள் அந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு தண்ணீர் குடிக்க ஒரு மண்பாணையில் தண்ணீரும், பக்கத்தில் ஒரு அலுமினிய டம்பளரும் வைத்து இருப்பார்கள். தினமும் காலையில் பள்ளிக்கூடத்துக்கு வருகிற பிள்ளைகள் வரிசை பிரகாரம் இந்த மண்பானை சுத்தமாக கழுவி தண்ணீர் கொண்டு வந்து வைக்கவேண்டும். இதுமுறை. இந்த பள்ளிகூடத்தின் விதிமுறை

இப்படி இருக்கும் போது ஒரு நாள் தண்ணீர் கொண்டு வரபோகும்போது பானை உடைந்து விடுகிறது. இதற்கு மறு பானை வாங்கி தண்ணீர் வைக்க வேண்டும். ஆனால் இதற்கு காசு யார் கொடுப்பது என்ற விஷயத்தில் வாத்தியார் தலையிட்டு பிள்ளைகளிடம் ஆளுக்கு 1/4 அணா போட்டு பானையை வாங்கி வரவேண்டும் என்று வாத்தியார் சொல்லிவிட்டார். இப்போது வருடம் “1925” 1/4 அணா என்பது இந்த காலத்தில் 100 பைசா கொண்டது ஒரு ரூபாய். அந்த காலத்தில் 16 அணா கொண்டது ஒரு ரூபாய். இந்த ஒரு ரூபாயை வசூல் செய்து கொண்டு அருகாமையில் உள்ள சந்தைக்கு (மார்க்கெட்) சட்டாம்பிள்ளையும் மூன்று மாணவர்களும் பானை வாங்க செல்கிறார்கள். அதில் ஒருவர் எம்.ஜி.ஆர் பானை 3/4 ரூபாய்க்கு வாங்கியது போக மீதி 1/4 ரூபாய் சட்டாம்பிள்ளை கைவசம் உள்ளது. இந்த பானையை வாங்கி எம்.ஜி.ஆரிடமும் இன்னொரு பையனிடமும் கொடுத்து நீங்கள் முன்னால் போங்கள் நாங்கள் பின்னால் வருகிறோம் என்று சொல்லி அனுப்பிவிட்டு சட்டாம்பிள்ளையும் மற்றொரு பையனும் மீதி 1/4 ரூபாயிற்கு பொறி உருண்டையும், முறுக்கும் வாங்கி சாப்பிட்டு கொண்டு வருவதை முன் சென்ற எம்.ஜி.ஆரும் மற்றொரு பையனும் மறைவான ஒரு இடத்தில் நின்று அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று பார்க்கின்றார்கள்.

அந்த நேரத்தில் பின்வரும் சட்டாம்பிள்ளையும் சாப்பிட்டு வருவதை பார்த்து மீதம் உள்ள காசுக்கு இவர்கள் நமக்கு கொடுக்காமல் வாங்கி சாப்பிட்டு கொண்டு வருகிறார்கள் என்று எம்.ஜி.ஆரும் நண்பரும் பேசி கொண்டு வருகிறார்கள். அங்கு சட்டாம்பிள்ளையும் கூட வந்த சட்டாம்பிள்ளை நண்பனை பார்த்து எம்.ஜி.ஆர் கேட்கிறார் பானை வாங்கி விட்டு மீதம் உள்ள காசுக்கு நீங்கள் ரெண்டு பேரும் பொறி உருண்டையும் முறுக்கும் வாங்கி சாப்பிட்டு கொண்ட வருகிறீர்களே பானை வாங்கியது போக மீதம் உள்ள காசு எவ்வளவு என்று கேட்டு இருவருக்கும் வாதம் நடக்கிறது. அப்போது நீ யார்டா என்று சட்டாம்பிள்ளை வாய் வித்தியாசமாக தகாத வார்த்தைகளை பேசும் போது எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்து சட்டாம்பிள்ளையை அடிக்கின்றார். இதை அறிந்த மற்ற பிள்ளைகள் எல்லோரும் கூக்குரல் போட்டு கொண்டு வாத்தியாரிடம் சென்று இந்த சம்பவத்தை சொல்லுகிறார்கள். உடனே வாத்தியார் வந்து இருவரையும் சமாதனப்படுத்தி நாளை தலைமை வாத்தியாரிடம் சொல்லி ராமச்சந்திரன் நடந்த சம்பவத்தை முழுமையாக சொல்கிறார். இதை கேட்ட தலைமையாசிரியர் சட்டாம்பிள்ளையிடம் கேட்ட போது சரியான பதில்களை சொல்ல முடியவில்லை. அதனால், அந்த நேரத்திலிருந்து சட்டாம்பிள்ளைக்கு பதிலாக எம்.ஜி.ஆரை சட்டாம்பிள்ளையாக தலைமை ஆசிரியர் நியமித்தார். முதல் நாள் பானைக்காக கணக்கு கேட்டு பள்ளிக் கூட வாசலில் சண்டை போட் கொண்டு இருக்கும் போது பள்ளிக்கூட பையன்கள் எம்.ஜி.ஆர் அண்ணன் சக்கரபாணி அவரிடம் தகவல் சொல்லி அழைத்து வருகின்றார்கள். அப்போது சக்கரபாணி வந்து ஏன் சண்டை போடுகிறாய் என்று சொல்லி தம்பியை கண்டிக்கிறார். அண்ணா உங்களுக்கு ஒன்றும் தெரியாது நான் அப்புறம் சொல்கிறேன் என்ற சொல்லிவிட்டார். பிறகு பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் அண்ணன் சக்கரபாணி அவர்கள் சண்டை நடந்த விபரத்தை பற்றி கேட்கிறார். அண்ணனிடம் தம்பி நடந்த விபரத்தை சொல்லி முடிக்கிறார். உடனே சக்கரபாணி சொல்லுவதும் சரிதாண்டா. நீ சட்டாம்பிள்ளையை அடித்துவிட்டே. நாளைக்கு நம்மல பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே அனுப்பிவிடுவார்கள் நாம் என்ன பன்றது இதை அறிந்தால் அம்மாவின் மனநிலமை எப்படி இருக்கும் என்று சொல்லி தம்பியை கோபப்படுகிறார். உடனே எம்.ஜி.ஆர் அண்ணே தயவு செய்து அம்மாவிடம் சொல்லாதீங்க. நாளை என்ன நடக்கும் என்று பார்ப்போம் என்று சொல்லி அண்ணனை சமாதப்படுத்துகிறார் எம்.ஜி.ஆர்.

அதன்படி மறுநாள் பள்ளிக்கூடத்துக்கே சட்டாம்பிள்ளையாகிவிட்டார். இதை அறிந்து சக்கரபாணி ஆனந்தப்படுகிறார். அன்று வீட்டுக்கு திரும்பும்போது தம்பி நேற்றுக்கு நடந்த விஷயத்தை பற்றி நான் இரவில் நினைத்து என்க்கு தூக்கம் வரவில்லை. இந்த விசயத்தை உடனே அம்மாவிடம் சொல்லப்போகிறேன் இந்த நல்ல செய்தியை என்று தம்பியிடம் சொல்லுகிறார். உடனே எம்.ஜி.ஆர் அண்ணே எதுவானாலும் நம்ம இருவரோடு இருக்கட்டும். அம்மா இதை நம்பமாட்டார்கள். ஏன், எதற்கு என்று துருவி துருவி கேட்பார்கள்.

நடந்த சம்பவத்தை சொல்லி விடுவீர்கள் அது அம்மாவுக்கு தவறாகத்தான் தோந்றும் இது இப்போ நமக்கு தேவையா,

இதை போல் இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறேன். பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்தில் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் லீவுநாள் அன்று காலையில் இவர்களுடைய உடைகளை எல்லாம்எடுத்து கொண்டு காவேரி ஆற்றுக்கு சென்று உடைகளை துவைத்து குளித்து வருவது வழக்கம்.

2 comments on “2.பத்து வயதில் கணக்கு கேட்டார்!

  1. rajeshjothi சொல்கிறார்:

    oru maaperum arasiyal methaiyai patriya oru mulumayaana vaalkai varalaatru pathivinai thodangiyatharku enadu vaalthukkal…ivai anaithu pdf koppaga tharamirakka vagai seithaal innum sirappaga irukkum…nandrigal pala
    http://rajeshjothi.wordpress.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s