5.குழப்பத்தில் ஆழ்ந்த சத்திய தாய்

MGRஇதை கேட்ட சத்தியபாமா அவர்களுக்கு மிக குழப்பமாகி விட்டது. மகன்களுடைய வளர்ச்சி முக்கியமா, தன்னுடன் வீட்டில் வந்து தங்கி செல்வது முக்கியமா என்ற குழப்பத்தில் உள்ள போது மீண்டும் நாராயணனை சந்தித்து விபரத்தை சொல்லி இதற்கு என்ன வழி என்று கேட்கும்போது வாரத்தில் நாடகங்கள் இல்லாத நாட்களில் ஒரு நாள் அல்லது இரு நாள் என்னுடன் என் பிள்ளைகள் வந்து தங்கி செல்ல வழி வகுத்து கொடுங்கள் என்று நாராயணனிடம் அவர் மிக அன்போடு கேட்கிறார். அதன்படி நாராயணன் அவர்களும் முதலாளியை சந்தித்து இந்த விவரத்தை தெரிவிக்கிறார். இந்த விஷயத்தை கேட்ட முதலாளி இந்த இரு பையன்களும் நமக்கு முக்கியமாக நாடகத்திற்கு வேண்டும் என்ற நினைப்போடு இந்த பையன்களுக்கு ஒரு சலுகை, நாடகங்கள் இல்லா காலத்திலும் பயிற்சிகள் இல்லாத நாட்களிலும் ஒரு, இரு நாட்களுக்கு தங்கி வரலாம் என்று கம்பெனி முதலாளி சொல்கி஢றார். இதுவே பெரிய தெய்வ வாக்காகக் கொண்டு சத்தியபாமா அவர்களிடம் விவரத்தை சொல்கிறார் திரு. நாராயணன் அவர்கள், அதன்படி MGRக்கும் சக்கரபாணி அவர்களுக்கும் நாடகங்கள் இல்லாத நாட்களில் லீவு நாட்களில் அம்மாவுடன் தங்கியிருந்து கம்பெனி முதலாளி அனுமதித்தை அறிந்து இருவரும் ஆனந்தம் அடைகிறார்கள். அதன் படி அந்த நாட்களில் இருவரும் ஓரிரு நாட்களில் தங்கி இருந்து தன் அம்மா கையினால் சாப்பாடு சாப்பிடுவதை நினைத்து பூரிப்பு அடைகின்றார்கள். அதே நேரத்தில் சத்தியபாமா அவர்கள் தன் இளைய மகன் சாப்பாட்டை மிக குறைத்து சாப்பிடுவதையும் மிக மெலிந்து இருப்பதையும் கவனிக்கிறார்.

என்ன மகனே மிகவும் மெலிந்து இருக்கிறாய் சாப்பாடும் சரியாக சாப்பிடவில்லை என்று கேட்கிறார். உடனே செல்ல மகன் MGR அவர்கள் மிகதுடிப் போடு செல்லத்தோடு அம்மாவோட கண்ணத்தை வருடி அம்மா நான் மெலிந்து போனால் நான் என்ன செய்ய முடியும். நான் என்னால் முடிந்த வரைதான் சாப்பிடமுடியும் முன்போல் இப்போது எல்லாம் சாப்பிடமுடியவில்லை அம்மா. அதை கேட்ட தான் மகனை தொட்டு தழுவி மேலும் கீழுமாக பார்க்கிறார். அடுத்த நாள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தன் இளைய மகனுடைய உடல் மெலிவை பற்றியும், உணவு குறைவாக உன்னுவதை பற்றியும், இதற்கு ஏதாவது வைத்தியம் உண்டா என்று கேட்கிறார். இதற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அதில் ஒருவர் பெரியதாக வைத்தியம் செய்ய வேண்டாம் நான் சொல்வது போல் சீரகம், கொஞ்சம் வெந்தயம், தண்ணீர், போட்டு நன்றாக சுடவைத்து அதோடு மேலும் கொஞ்சம் பச்சை தண்ணியை கலந்து ஒரு சொம்பில் குடிப்பது போல் ஊற்றி வைத்து அந்த தண்ணீரை குடிக்க சொல்லு, அதோடு வாரத்திற்கு இரண்டு நாட்கள் பாவாக்காய் சமைத்து கொடு வயிற்றுக்குள் பூச்சி இருந்தால் செத்துவிடும். அப்புறம் அவனுக்கு முடிந்த வரைக்கும் பால், பழங்கள் ஏதாவது கொடுத்து வா இதோடு சேர்த்து முடிந்தால் ஒரு கோழி முட்டை கொடு என்று ஒரு வயதான பாட்டி சொல்லுகிறார். இந்த நிலையில் கம்பெனியில் நாடகம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து நாடகத்தில் நடிப்பவர்கள் அத்தனை பேரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அடுத்து நாடகத்தில் நடிக்கிற முக்கியமானவர்கள் நடனம் பயிற்சியும், சண்டை பயிற்சியும் பாட்டு பயிற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டும் இதற்காக கம்பனெ஢ தனித்தனியாக வாத்தியர்களை நியமித்து உள்ளர்கள். இப்படி இருக்கும்போது MGRக்கும் சக்கரபாணியும் அம்மாவுடன் இருந்தால் எப்படி என்று நாராயணன் அவர்கள் கேட்டு சத்தியபாமா அவர்களிடம் சொல்லி மீண்டும் ஒரு வார காலத்தில் அழைத்து சொல்கிறார். மீண்டும் தொடர்ந்து எல்லா வேலைகளும் நடந்து வருகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s