9.ஒரு மாதம் வைத்தியம் செய்ய வேண்டும்

MGRஇந்த நேரத்தில் இவர்கள் குடியிருக்கும் வீட்டுக்காரரும், அவரது மனைவி மக்களும் நாங்கள் இதுவரைக்கும் எம்.ஜி.ஆரை பார்க்கவில்லை என்று சொல்லி பார்க்க வருகின்றார்கள். வீட்டுமுதலாளி பெயர் ஆறுமுக நாடார் இவர் வயதானவர் அந்த ஊரிலேயே நல்லவர் என்று பெயர் உள்ளவர். இவருக்கு பல கள்ளுகடைகள் இருந்தன. சொந்தத்தில் தோப்புகளும் இருந்தன. இவர் ஒரு நாட்டு வைத்தியர். இவர் எம்.ஜி.ஆரை பார்த்து கொண்டே இருந்தவர் உடனே அவரே, அழைத்து கைபிடித்து நாடியை பார்த்தார். உடனே சத்தியதாயை பார்த்து உங்க மகன் ராமச்சந்திரனுக்கு வியாதி ஏதும் இல்லை. உஷ்ணம் அதிகமாக இருக்கிறது. அதனாலே குடல்புண், குடல் பூச்சி ஏற்பட்டு உடம்பு சரியில்லாமல் இருக்கிறான். இதை குணப்படுத்தி விடலாம். நீங்கள் கவலைபடாதீர்கள் இதற்கு மருந்து கொடுத்து சரி செய்யலாம் என்று சொல்லி விட்டு பிறகு சத்தியபாமா அம்மாவை தனியாக அழைத்து அம்மா நாளை முதல்வைத்தியம் ஆரம்பிக்க வேண்டும். எப்படியாவது கம்பெனி முதலாளியிடம் சொல்லி 1 மாதம் லீவு வாங்கனும், இது எல்லாம் ரெடி செய்து கொண்டு என்னிடம் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்கள். இந்த விஷயத்தை சத்தியதாய் எம்.ஜி.ஆரிடம் சொல்லுகிறார். எம்.ஜி.ஆர் அதை கேட்டு நான் நல்லாதான் இருக்கேன். என்னை எதற்காக தொந்தரவு செய்கின்றீர்கள் என்று சொல்லி வருத்தப்படுகிறார். எனக்கு 1 மாதம் லீவு எல்லாம் கிடைக்காது வேண்டாம். விட்டுறும்மா என்று சொல்லி இவர்கள் இருவரும் கம்பெனிக்கு சென்று விடுகிறார்கள்.

சத்தியபாமா அம்மா அவர்கள் கம்பெனிக்கு சென்று நாராயணனை சந்தித்து அவர்களிடம்தன் மகன் எம்.ஜி.ஆர் உடல்நிலையைப் பற்றி சொல்லுகிறார்கள். எல்லாவற்றையும் கேட்ட நாராயணன் நீங்கள் இருங்க முதலாளியே பார்த்து பேசலாம் என்று நாராயணன் சொல்லுகீறார். அதன்படி கம்பெனி முதலாளியிடம் சென்று ராமச்சந்திரன், சக்கரபாணி தாயார் வந்து இருக்கிறார். ராமச்சந்திரனின் உடல் நிலையை பற்றி தங்களிடம் பேச வேண்டும் என்று அதன்படி கம்பெனி முதலாளியிடம் சத்தியபாமா அம்மா அவர்களை அழைத்து சென்று பேச வைக்கிறார். முதலாளியை பார்த்த சத்தியபாமா அவர்கள் பயபக்தியோடு வணக்கத்துடன் தன்னுடைய இளைய மகனை பற்றி சுருக்கமாக, விவரமாக சொல்லுகின்றார். எல்லாவற்றையும் கேட்டு கம்பெனி முதலாளி சற்று யோசிக்கிறார்.

பிறகு, சத்தியபாமா அம்மாவை பார்த்து, அம்மா நீங்க சொல்கிறபடி ராமச்சந்திரன் அவனுக்க உள்ள வேகமான செயலுக்கும், விவேகமான அறிவுக்கும் அழகுக்கும் அவனுக்கு தகுந்த உடம்பு இல்லையே என்பதை இப்போது தான் நான் யோசிக்கிறேன். நீங்கள் சொல்லுகிறபடி இந்த ஒரு மாதத்தில் ராமச்சந்திரனுடைய உடல் ஆரோக்கியத்தை சரியா கொண்டு வரலாம் என்றால், உடனே ராமச்சந்திரனிடம் சொல்லி உங்களிடம் அனுப்பி வைக்கிறேன். அம்மா, பெற்ற தாய் நான் எப்படியும் என் பிள்ளைகள் நல்லா இருக்கனும் என்று நினைத்து செயல்களின் நான் ஈடுபடும்போது கடவுளுடைய கிருபையும் உங்களை போன்ற பெரிய மனிதர்களுடைய ஆசிர்வாதமும், உதவியும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். உடனே கம்பெனி முதலாளி உள்ளே சென்று சக்கரபாணியையும், ராமச்சந்திரனையும் அழைத்து வர சொல்லுகிறார். அழைத்து வரச் சொன்னதும், முதலாளி ஏன் அழைக்கின்றார் நாம் என்ன தவறு செய்தோம் என்று யோசித்து கொண்டு இருவரும் முதலாளியிடம் வருகின்றார்கள். அந்த இடத்தில் தன்னுடைய தாயை இருவரும் பார்க்கின்றார்கள். பார்த்து அம்மா எதற்கு கம்பெனிக்கு வந்து இருக்கிறார்கள்.

முதலாளியை பார்த்து கொண்டு அந்த நேரத்தில் பையன்கள் தாயாரை பார்க்காமல் கை கட்டி கொண்டு நிற்கிறார்கள். முதலாளி பிறகு இருவரையும் பார்த்து கொண்டு ராமசந்திரா உனக்கு உடல் மிகவும் மெலிந்த உள்ளது. இன்னும் கொஞ்சம் உடல் பொருத்தால் நல்லா இருக்கும். உன் அழகுக்கும். உன் திறமைக்கும் உன் புத்தி கூர்மைக்கும் உடல் பொருத்து இருப்பது நல்லது. அதனாலே நீ இப்போ உங்க அம்மா கூடபோய் இருந்து 1 மாதத்திற்கு நீ உன் உடல்நிலையை சரிபார்த்துக்கொண்டு வா, அதோடு காலையில் உன் வழிபடி எப்போதும் எடுக்கும் என் உடல் பயிற்சியை செய்ய தவறிவிடாதே இடையிலே உனக்கு முடிந்தவரையில் கம்பெனிக்கு வந்து போகலாம் என்பதை கூறி தாயார் அவர்கள் வசம் அனுப்பி வைக்கிறார். இதை எல்லாம் பார்த்து கொண்ட இருந்த சக்கரபாணி அவருக்கு மனதில் தம்பி எப்படியாவது நல்ல குணமாகி வரவேண்டும் என்று ஆண்டவனை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டு வெளியே சென்று தாயாருடன் வழி அனுப்பி வைக்கிறார்.

போகின்ற வழியிலே தன் தாயை பார்த்து என்னம்மா இதெல்லாம் நான் ஒரு மாதம் வீட்டில் வந்து என்னுடைய உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தேவையா, நம் குடும்பம் இருக்கும் நிலவரம் என்ன வீட்டுக்குப் போய் சென்ற பிறகு மறுநாள் காலையில் அந்த வீட்டிற்கு சொந்தக்காரர் ஆன ஆறுமுகம்நாடார் சத்தியபாமா வீட்டிற்கு வந்து ராமச்சந்திரனை அழைத்து நாடி பார்க்கின்றார். நாடி பார்த்த பிறகு எதுவும் சொல்லாமல் நாளை காலையில் 7 மணிக்கு அம்மா நான் உங்களிடம் சொன்னபடி அந்த மருந்தை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி முடிந்தவரை 1/2 லிட்டருக்கு குறையாமல் கொடுக்க வேண்டும். மருந்து கொடுத்த பிறகு கண்டிப்பாக ஒரு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது. நடக்கலாம், ஓடலாம், பசி எடுத்தால் நல்ல உணவுகளை கொடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s