11.முதன் முதலில் பேசிய வசனம்

இந்த பயிற்சிகளை தனக்கு சொல்லி தரும் வாத்தியார்களிடம் MGR மிகவும் பயபக்தியாக இருப்பார், இவைகளில் MGRக்கு நடனம் கற்று கொள்வதில் சற்று கடினமாக இருந்தது. அந்த காலத்தில் நாடகங்களில் ஆண்கள் தான் பெண் வேடம் போட வேண்டும். ஆகவே நாடகத்தில் நடிக்க வசனம் பேச பாட தெரியனும். MGRக்கு பாட்டும் நடனமும் சரியாக வரவில்லை நடன ஆசிரியர் ஸ்ரீராமுலு என்பவர் மிக கோபக்காரர் இவரிடம் நடனம் கற்றுக் கொள்ளும்போது அடியும் வாங்குவாராம் எப்படியோ மிக சிரமப்பட்டு நடனத்தை கற்று கொண்டார். இந்த நடன கலை பிற்காலத்தில் சினிமாவுக்கு ரொம்ப உதவியாக இருந்தது. MGR சிறு சிறு வேடங்கள்தான் கம்பெனியில் கிடைத்தது, இந்த கம்பெனியில் ஏற்கனவே எல்லா வேடங்களுக்கும் ஆண்கள் உள்ளனர். கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் நடிகர்களுக்கு சாப்பாடு தங்கும் இடம், உடை, சம்பளம், இவைகள் அதிகமாக இருக்கும். இப்படி முக்கிய வேடங்களில் நடிப்பவர்கள் மற்ற சக நடிகர்களுடன் அதிகமாக பேசமாட்டார்கள். இப்படிபட்ட பெரிய நடிகர்களுடன் நல்லா பேசவேண்டும் என்ற ஆசை MGRக்கு உண்டு. என்ன செய்வது MGR சின்னபையன் கம்பெனிக்கு புதுசு ஆயினும் அந்த ஆசையை அவர் விடவில்லை. அதோடுதான் நாமும் இவர்களைபோல் நடித்து பெரிய அளவில் புகழ் பெறவேண்டும் அப்போதுதான் நாம் அம்மாவுக்கு அதிகமாக பணம் அனுப்பமுடியும் என்ற எண்ணமும் உண்டு. அவர் நடித்த முதல் நாடகம் “மகாபாரதம்” முதல் நாடக மேடையில் நடிக்க வாய்ப்பு கிடைத்த ஆண்டு 1924. MGRக்கு முதல் வசனம் அய்யயோ பாம்பு காப்பாற்றுங்கள் என்று பலமுறை அலறி அடித்துக்கொண்டு ஓடும்போது அர்சுணன் மீது மோதி கீழே விழுந்து விட்டார் தவறுதளாக, ஆனால் அது பொது மக்களிடம் இருந்து பெரிய அளவில் கை தட்டல் கிடைத்தது.

MGRக்கு எதிர்பாராமல் இப்படியொரு கைதட்டல் கிடைத்தது. அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால் மற்ற நடிகர்களுக்கு இந்த சின்னபையன் ராமசந்திரனுக்கு முதல் நாடகம் முதல் நாளிலேயே இப்படி ஒரு கை தட்டலா என்று ஒரே ஆச்சரியம் ஏற்பட்டது. இப்படியாக பல நாடகங்களில், பல சிரமமான காட்சிகளில்நடித்து வந்தார். MGRக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இந்த கம்பெனியில் P.U. சின்னபா, காளி.என், ரத்தினம் இவர்களுடன் மிக சிரமபட்டு MGR தொடர்பு வைத்துக் கொண்டார். அவர்களும் MGR மீது அன்பாக இருந்தார்கள். நாடகமும் பல ஊர்களுக்கு சென்று கொண்டு இருந்தது. கோயம்பத்தூரில் நாடகம் அமைக்கப்பட்டு நடந்து கொண்டு இருக்கும் சமயத்தில், ஒரு நாள் MGR, P.U. சின்னப்பாவிடம் தன் விருப்பத்தை சொன்னார், சின்னப்பாவும் MGRக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகட்டும் பிறகு சினிமாவில் நடிக்கலாம் என்று சொல்லி நாடகத்திலேயே நடித்து நல்ல தேர்ச்சி பெறு என்று சொல்லிவிட்டார்.

ஒரு நாள் தசவதாரம் நாடகம் இதில் P.U. சின்னப்பாவுக்கு தொண்டை சரியில்லை, உடல்நிலை சரியில்லை, அவருக்கு பதிலாக MGRரை அந்த வேடத்தில் போட்டு பரதனாக நடிக்க சொன்னார் முதலாளி, MGRக்கு மிகபெரிய சங்கடமாக ஆகிவிட்டது. காரணம் அது பெரிய சீன் எப்படியோ தைரியத்துடன் மேக்கப் முடித்து MGR அவர்கள் மேடைக்கு வந்தார். அன்று இந்த நாடகத்தை பார்க்க கிட்டப்பா வந்து முன் வரிசையில் அமர்ந்து இருந்தார். இதை MGR பார்த்துவிட்டார். MGRக்கு ஒரே சந்தோஷம் ஒரு பிரபல நடிகர் நம்ப நாடகத்தை பார்க்க வந்து இருக்கிறார், அதுவும் நாம் இந்த சின்னப்பாவுக்கு பதிலாக இந்த பையன் நடிக்கிறானே என்று ஆச்சரியப்பட்டார். அன்று MGR முடிந்தவரை சிரமப்பட்டு நல்லாவே நடித்து விட்டார். MGR நடித்த சீன் இடைவேளையோடு முடிந்துவிட்டது. கம்பெனியில் மற்ற நடிகர்களும், முதலாளியும் ஆழுசு P.U. சின்னப்பாவை போல் எதுவும் குறையும் இல்லாமல் வசனம் பேசி நடித்து விட்டான் என்று சந்தோஷப்பட்டார்கள். நாடக இடைவேளையில் கிட்டப்பா மேடை கொட்டைக்குள் வந்து காளி.என். ரத்தினத்தை அழைத்து எங்கே P.U. சின்னப்பா என்று கேட்டார். அவருக்கு தொண்டை கட்டி போச்சு அதனாலே அவர் வரவில்லை என்று சொன்னார்கள். அடுத்து கிட்டப்பா உள்ள வந்ததை அறிந்த MGR மிகவும் பதட்டம் அடைந்துவிட்டார்.

தன்னை பற்றி எதுவும் குறை சொல்ல வந்து இருப்பாரோ என்று நினைத்து கிட்டப்பா காளியிடம் P.U. சின்னப்பாவுக்கு பதிலாக நடித்த பையன் யார், பெயர் என்ன என்று கேட்டார், காளி இவன் பெயர் ராமசந்திரன் நல்ல பையன், நல்ல குணம் உள்ளவன், அறிவாளி கொடுத்த வேளையை சரியாக செய்வான் என்றார் காளி உடனே கிட்டப்பா MGRரை பார்த்து, கிட்ட வரும்படி அழைத்தார் MGR தயங்கினார். உடனே காளி அடவாப்பா அண்ணன் கூப்பிடுராங்க வந்து அண்ணன் கிட்ட ஆசிர்வாதம் பெற்றுக்கொள் என்று சொன்னதும் MGR ஆனந்த கண்ணீருடன் கிட்டப்பாவின் காலை தொட்டு வணங்கினார். கிட்டப்பாவும் MGRரை கட்டி தழுவி முதுகில்தட்டிக் கொடுத்தார். வளரும் பயிர் முளையிலேயே தெரியும் நீ நல்லா முன்னுக்கு வருவாய் என்று வாழ்த்தி சென்றார். இப்படியாக ஊர் ஊராக சென்று நாடகங்களை நடத்தி வந்த அந்த கம்பெனிக்கு வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்து. இதில் சிங்கப்பூர் மலேசியா, ரங்கூன், பர்மா போன்ற ஊர்களுக்கு சென்று நாடக கம்பெனி நல்ல பெயரை எடுத்தது, முதலில் பர்மா தமிழ்ர்கள் சார்பில் நாடக கம்பெனியை அழைக்கப்பட்டது. அதில் பெரிய நடிகர்களோடு MGRருக்கும், சக்கரபாணிக்கும் பர்மாவுக்கு செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு நாள் நாடக கம்பெனி சென்னைக்கு வந்து கப்பல் வழியாக பர்மாவுக்கு புறப்பட்டார்கள். கப்பலில் MGR அவர்களுக்கு தாயாரை விட்டு விட்டு வெளிநாடு செல்கின்றோமே இனி எப்போ தமிழ்நாட்டிற்கு திரும்புவோம் எப்போ நம் தாயை பார்ப்போம் என்ற பெரும் கவலை அண்ணனிடம் இதை சொல்லி அழ ஆரம்பித்துவிட்டார். அண்ணனும் மற்ற நடிகர்களும் MGRரை சமாதானப்படுத்தினார்கள். கப்பலில் 3வது நாள் MGRக்கு குமட்டல், வாந்தி, ஏற்பட்டது, மிகவும் சிரமப்பட்டார். இது முதலாளிக்கும் மற்ற பெரிய நடிகர்களுக்கும் தெரிந்தது கம்பெனியில் நிர்வாக பொறுப்பில் உள்ள கந்தசாமியின் மகன் M.K. ராதா அவர்களும் MGRக்கு மாத்திரை மருந்துகளை கொடுத்து சமாதானப்படுதினார்கள்.

முதன் முதல் கப்பலில் பயணம் செய்பவர்களுக்கு இப்படிதான் சில கோளாறுகள் வரும் என்று சொல்லி சென்றார்கள். கப்பல் பர்மா ரங்கோன் சென்று அடைய 7 நாட்கள் ஆச்சு, பர்மா ரங்கோன் சென்று அடைந்ததும் இவர்களை வரவேற்று அழைத்து சென்று ஒரு பெரிய பள்ளிகூடத்தில் தங்க வைத்து எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் ரங்கோன் தமிழ் சங்க தலைவர். ரங்கோன் பர்மா தமிழர்களின் வரவேற்யும், உபசரிப்பும் MGR அவர்களுக்கு இதை எல்லாம் பார்த்து மிக சந்தோஷமும் ஆனந்தமும் அடைந்தார். பர்மா ரங்கோனில் 15 நாட்கள் மிக சிறப்பாக நாடகம் நடந்தது. 15 நாட்கள் இதில் MGR நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு மிகவும் வரவேற்பும் கை தட்டலும் கிடைத்தது. மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. சில சமயங்களில் ஆங்கிலம் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது சக்கரபாணி சொல்லி பேச சொல்லுவார்கள். அவர் ஏற்கனவே ஆங்கிலம் நன்கு கற்று கொண்டவர் இந்த விசயத்தில் சக்கரபாணிக்கு கம்பெனியில் நல்ல மதிப்பும் இருந்தது. 15 நாள் கழித்து சென்னைக்கு திரும்புகின்ற நேரத்தில் எல்லோருக்கும் வெளிநாடு நாடகங்களை மிக சிறப்பாக முடித்து வெற்றி நடைபோட்டு கொண்டு தாய்நாட்டிற்கு போகிறோமே என்ற மகிழ்ச்சியோடு கப்பலில் வாந்தி, மயக்கம், கவலைஇன்றி சந்தோஷமாக சென்னை வந்து சேருகிறார்கள். சென்னையிலிருந்து தாயை சந்திக்க கும்பகோணம் சென்று தாயை சந்தித்து பர்மா ரங்கோனில் தனக்கு கிடைத்த மரியாதையை பர்மா தமிழர்களின் வாழ்த்துக்கள், ரங்கோனில் கிடைத்த அதிக சம்பளம் இவை அனைத்தும் சொல்லி இருவருடைய சம்பளத்தையும் அம்மாவிடம் கொடுத்து அம்மாவின் காலில் வழிந்து ஆசிர்வாதம் பெற்றார்கள்.

வெளிநாடு சென்று வந்த மகன்களை கண்ட அந்த தாய் அளவற்ற அளவிற்கு ஆனந்தம் அடைந்தார். அப்போது MGRக்கு 14 வயது ஆகிவிட்டது பிறகு தொடர்ந்து பாய்ஸ் கம்பெனியிலே இருக்க வேண்டியதாகியது.

MGR அவர்களும் P.U. சின்னப்பாவும், காளியும் மிக மிக உதவியாக நாடக கம்பெனியில் இருந்தார்கள். அண்ணன், தம்பி இருவருக்கும் சினிமாவில் நடிக்க ஆசை எப்படியும் இந்த கம்பெனியில் இருந்து வெளியே போக வேண்டும். அப்போதுதான் நாம் முன்னுக்கு வரமுடியும் என்ற முடிவுக்கு வந்த MGR, அவர்களும் சக்கரபாணி அவர்களும் இந்த யோசனையை, P.U. சின்னப்பாவிடம் சொன்னார்கள்.

P.U.C. கம்பெனியை விட்டு ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் சக்கரபாணிக்கு மட்டும் எல்லா விபரங்களையும் சொல்லிவிட்டு, பெட்டி, சில உடைகளை மட்டும் விட்டுவிட்டு பணம் நகைகள் மற்றும் சில பொருள்களோடு வெளியேறி விட்டார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s