12.நாடக கம்பெனி சென்னை விஜயம்

பாய்ஸ் நாடக கம்பெனி சென்னைக்கு வந்து தேசம்காக்கும் என்ற நாடகத்தை ஆரம்பித்து (நடத்த) ஏற்பாடு செய்தது. நடிகர்கள் தேர்வு நடந்தது. இந்த நாடகம் காந்தியவாதி, சுதந்திர போராட்ட கதை பெரிய நாடகம் 1930ல் இதில் நடிக்க MGR, MGCக்கும் முக்கிய வேடங்கள் கொடுக்கப்பட்டது. நாடகம் நடத்த அன்றைய வெள்ளையர் ஆட்சி காலத்தில் போலீஸ் தடை விதித்தது. தடையை மீறி நாடகம் நடத்தப்பட்டது. போலீஸ் தடியடி நடத்தியது. இந்த செய்தி சென்னை நகரில் மற்றும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பெரிய பரபரப்பை உண்டாக்கியது தேசபக்தி என்றதும் இந்த நாடகத்திற்கு பொதுமக்கள், காங்கிரஸ்காரர்களும் பெரும் அளவில் ஆதரவு ஏற்பட்டது. இந்த நாடகத்தில் MGRக்கு தேசபக்தர் ஒரு சாமியார் வேசம். 17 வயது பையன் சாமியார் வேசத்தில் நடிக்கிறான் என்றதும் மக்கள் திலகம் அவர்களுக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டு கிடைத்தது. இந்த நாடகம் சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஒற்றவாடை என்ற நாடகக் கொட்டகையில் நடந்தது.

17 வயது பையன் பழுத்தபழம் போல் சாமியார் வேடத்தில் MGR மிக சிறப்பாக நடித்து இருந்தார். இந்த நாடக கம்பெனி பல ஊர்களுக்கு சென்று கடைசியாக சென்னைக்கு வந்தது. இதில் இந்த நாடகத்தில் அரசியல் காங்கிரஸ் இருந்தது. MGR 17 வயதில் அரசியலில் (காங்கிரஸில்) சுபாஷ்சந்திரபோஸ் பக்தன் ஆகிவிட்டார். இந்த நிலையில் சென்னையில் எப்படியும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஆர்வம் ஏற்பட்டு விடவே அம்மா அண்ணன் இவர்களிடம் தெரியபடுத்தினார். அவர்களும் சினிமாவில் நடிக்க எப்படி சான்ஸ் கிடைக்கும் யாரை போய் பார்த்து, எப்படி பார்ப்பது நமக்கு சினிமா ஆசை வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் எம்.ஜி.ஆர். சினிமா மோகத்தை விடவில்லை. சென்னை வால்டாக்ஸ்ரோடு நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் ரோடு சந்திப்பில் பழைய நண்பர் உதவியுடன் ஒரு சிறிய வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்து கொண்டு சென்னையில் ஏற்கனவே தங்கி இருந்து சினிமாவில் நடிக்கும் நாடக கம்பெனி முதலாளி கந்தசாமியும் P.U. சின்னப்பா, M.K. ராதா போன்றவர்களிடம் தினமும் அவரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தார். 18வது வயதில் நல்ல உடல் கட்டு, கதர் வேட்டி, ஜிப்பா, சாப்பாடு இவைகளைப்பற்றி கவலைபடுவதில்லை, உடை மிக சுத்தமாக இருக்கணும், உள்ளமும் சுத்தமாக இருக்கணும் என்று நினைத்து கொண்டு காலையும் மாலையும் அவர்களை சென்று பார்த்து வந்தார்.

மேலும், இந்திய சுதந்திர போராட்டம் மிகவும் வலுவாக இருந்தது மகாத்மா காந்தியின் தலைமையில் இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் ஆங்கிலேயேருடைய முதல் யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. இந்த மாதிரி விஷயங்களை அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள், தானும் ஏன் அரசியலில் ஈடுபடகூடாது. நம் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக பலர் பல விதமான போராட்டங்களை நடத்தித் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் நாம் ஏன் காந்தியவாதியாக இருக்கக்கூடாது என்று நினைத்து இவரை ஒரு கதர் ஜிப்பா ஒரு கதர் பைஜாம்மா யாருக்கும் தெரியாமல் வாங்கி தைத்து போட்டு கொண்டார்.

எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு நாள் கம்பெனி முதலாளியைப் பார்த்து இத்தனை வருடங்களாக எனக்கும் என் அண்ணனுக்கும் நாடகங்களில் நடிக்க எங்களுக்கு பல விஷயங்களை கற்று கொடுத்து எங்களுக்கு பல வேஷங்களை கொடுத்து நடிக்க வைத்து நாடகத்தில் எங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்படி எங்களை ஒரு நல்ல நாடக நடிகனாக வளர்த்துவிட்ட உங்களை நாங்கள் எங்கள் உயிர் உள்ளவரை என்றென்றும் மறக்க மாட்டோ ம். ஐயா நானும் என் அண்ணனும் சினிமாவில் நடிக்க ஆசைபடுகிறோம். எங்களை ஆசிர்வாதம் செய்து அனுப்புங்கள் என்று சொன்னவுடன், கம்பெனி முதலாளி இதற்கு ஏதும் பதில் சொல்லமுடியாமல் சற்று மெளவுனமாக இருந்தார். உடனே எம்.ஜி.ஆர். அவர்கள் காலில் விழுந்து, என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள். கோபம் இல்லாமல் என்னை சந்தோஷமாக அனுப்பி வையுங்கள் என்று சொன்னதும் இந்த சொல்லை கேட்ட முதலாளி பதில் ஏதும் சொல்ல முடியாமல் எம்.ஜி.ஆரின் தோள்பட்டையும் தட்டிகொடுத்து நீ, சினிமாவில் சேர்ந்து முன்னேற்றம் அடைய வாழ்த்துகிறேன். இந்த செய்தியை கேட்ட எம்.ஜி.ஆர் மிகுந்த மன மகிழ்ச்சியோடு தன் பெட்டிகளை எடுத்துகொண்டு தன்னுடைய சக நடிகர்களிடம் பிரியாவிடை சொல்லி ஆனந்த கண்ணீரோடு வெளியே வரும்போது அந்த இடத்தில் கம்பெனி முதலாளி நின்று கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். உடனே, முதலாளி எம்.ஜி.ஆரிடம் வந்து கைபிடித்து எம்.ஜி.ஆரிடம் ரூ. 100/- பணத்தை கொடுத்து வழி அனுப்பிவைக்கிறார்.

அடுத்த நாள் சென்னையில் இருக்கும் பி.யு. சின்னப்பா, எம். கே. ராதா இவர்களைப் பார்க்க செல்கிறார். அப்போது என்னடா ராமசந்திரா, ஏதோ வேசத்தில் வந்திருக்கே ஏதாவது சினிமாவில் நடித்துவிட்டு வருகிறாயா என்று ஆச்சரியத்தோடும், சிரிப்போடும் கேட்கிறார்கள். உடனே எம்.ஜி.ஆர் அது எல்லாம் ஒன்றும் இல்லை நானாகவே ஒரு உடையை மாட்டிகொண்டேன் வேண்டாம் என்று சொன்னால் நான் கழற்றிவிடுகிறேன். ஐய்யயோ வேண்டாம் உடை உனக்கு மிக பிரமாதம்மா இருக்கு நீ ஒரு காந்தியவாதி மாதிரி இருக்கிறே. ஆனால் உத்திராட்ச கொட்டையும் நெற்றியில் விபூதியும் தான் பொருத்தமில்லாமல் இருக்கு என்று சொல்லுகின்றார்கள். இதை கேட்ட எம்ஜிஆர் சற்று மனவருத்தத்தோடு பதில் சொல்லுகிறார், இந்த உடையையும், உத்திராட்சகொட்டையும் நேற்றுதான் அணிந்தேன். இதை அணிந்ததிலிருந்து எனக்கு ஏதோ ஒரு பெரிய மனமகிழ்ச்சி உண்டாகிறது. ஆனால் எனக்கு சினிமாவில் நடிப்பு சான்ஸ் கிடைக்கும் வரையில் இந்த உத்திராட்சகொட்டை வெளியில் தெரியாமல் சட்டைக்குள் போட்டு கொள்கிறேன் என்று சொல்லுகிறார். அதற்கு அவர்கள் ராமசந்திரா நாங்கள் இப்படி சொல்லிவிட்டோ மே என்று வருத்தப்படக்கூடாது என்று சொல்லி முடிக்கிறார்கள்.

பிறகு, மறுநாள் கும்பகோணத்திலிருக்கும் அம்மாவுக்கு நீங்கள் அண்ணனை அழைத்துக் கொண்டு சென்னைக்கு தாமதப்படாமல் உடனே வாருங்கள் என்று கடிதம் எழுதுகிறார். அதோடு நாராயணனுக்கும் கடிதம் எழுதுகிறார். அம்மாவையும் அண்ணனையும் சென்னைக்கு அனுப்பி வையுங்கள் நான் தனியாக ரூம் எடுத்து ஒட்டலில் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் என்று கடிதம் எழுதுகிறார். நான் சினிமாவில் சேர்ந்தவுடன் தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என்று கடிதம் எழுதுகிறார். எம்.ஜி.ஆர் சலிப்பு இல்லாமல் சாப்பாட்டை பற்றி கவலைபடுவதில்லை, உடையை மட்டும் வெள்ளையாக வைத்து கொண்டு தினமும் காலை நீட்டா உடை உடுத்திக் கொண்டு சினிமா கம்பெனிகளுக்கும் நாடக வாத்தியார் கந்தசாமி முதலியார் வீட்டிற்கும் சென்று விடுவார். இப்படியே மாதங்கள் பல கடந்தன இவரது நிலைமை நன்கு புரிந்து கந்தசாமி முதலியார். ராமசந்திரனுடைய திறமைக்கும் நல்ல அழகுக்கும், கட்டான உடலமைப்புக்கும் இவை அனைத்தையும் நன்கு அறிந்த கந்தசாமி முதலியார், எம்.ஜி.ஆருக்கு எப்படியாவது சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தரவேண்டும் என்று ஒவ்வொரு சினிமா கம்பெனிக்கும் சென்று முயற்சி செய்தார் வாத்தியார் கந்தசாமி முதலியாரின் முயற்சி வீண் போகவில்லை. ஒரே வாரத்தில் ஒரு சினிமா கம்பெனியில் “சதிலீலாவதி” என்ற படத்தில் நடிக்க 1936ல் வாய்ப்பு கிடைத்தது. வேசம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சம்பளம் ரூ. 100/- அப்பொழுது எம்.ஜி.ஆருக்கு வயது 19 இதற்கு இடையில் கும்பகோணத்தில் இருக்கும் அன்னையும், சக்கரபாணியும் சென்னைக்கு வந்து வால்டாக்ஸ் ரோட்டில் ஒரு சிறிய வீட்டில் இருந்தார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s