13.சதிலீலாவதியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது

சினிமாவில் நடிக்க ஒப்பந்தம் ஆகிறது. இந்த செய்தியை கேட்ட தாயும் அண்ணனும் அளவு கடந்த ஆனந்தம் அடைகிறார்கள். பிறகு, முதல் முதலில் சினிமா கம்பெனி ஒப்பந்தத்துக்கு கூட்டிக்கொண்டு போகிறார்கள். அப்போதுகூட அண்ணனையும் அழைத்துச் செல்கிறார் எம்.ஜி.ஆர். அடுத்து அவருக்கு மேக்கப் நடைகிறது போலீஸ் அதிகாரியாக வேடத்தில் நடிக்க. இது முடிந்து சூட்டிங் நடக்கும் இடத்திற்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு இருந்த பல கம்பெனி முதலாளிகளும், டைரக்டரும் எம்ஜிஆரை பார்த்து மேக்கப் ஓகே என்று சொல்லுகிறார்கள். இந்த படத்துக்கு டைரக்டர் ஒரு வெள்ளைகாரர் அவர் பெயர் எல்லீஸ்டங்கன். எம்.ஜி.ஆர் அவர்கள் டைரக்டர் காலை தொட்டு வணங்குகிறார் பக்கத்தில் நின்ற தன் அண்ணன் பெயரை சொல்லி அறிமுகப்படுத்துகிறார். உடனே டைரக்டர் சக்கரபாணி அவர்களை உற்று கவனிக்கிறார். உடனே டைரக்டர் டங்கன் அவர்கள் சக்கரபாணியை பார்த்து நீ என்ன படித்து இருக்கிறாய் என்று ஆங்கிலத்தில் கேட்கிறார் அதற்கு சற்றம் தயங்காமல் ஆங்கிலத்தில் பதில் சொல்லுகிறார், இதை கேட்ட டைரக்டர் What man you are study only 7th standard. Yes sir, Why, sir I am very poor family இப்படி சக்கரபாணி ஆங்கிலத்தில் சரியாக பதில் சொன்னதால் டைக்ரடர் டங்கன் மனதில் இடம் பெற்றுவிட்டார். டங்கன் இந்த படத்திலே நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தார். இதை அறிந்த சத்தியதாய் அவர்கள் இந்த படம் என்று தியேட்டருக்கு வருமோ என்று ஏங்கி கொண்டு இருந்தார். மேலும் இந்த படத்தில் முக்கிய நடிகர்கள் NSK. T.S. பாலையா, M.K. ராதா. முதல் முதலாக இந்த படத்தில் முன்பணமாக ரூ. 100/- பெற்றுக் கொள்கிறார் எம்.ஜி.ஆர். சதிலீலாவதி 1937 ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆனது. அதற்கு முன் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று எதிர்ப்பார்த்து கொண்டு இருந்த சத்தியபாமா அவர்களும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் ரிலீஸ் ஆன அன்று முதல் காட்சிக்கே தியேட்டருக்கு மகன்களை கூட எதிர்ப்பார்க்காமல் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துக் கொண்டு சென்று படத்தை பார்த்து பூரித்து போனார்கள்.

அடுத்த படம் என்ன செய்வது என்று நினைத்து பெரிய கம்பெனிகளுக்கும் நடிகர்கள் வீட்டிற்கும் சென்று வரும்போது வழியில் முன்னால் அவர்களுடன் நாடகத்தில் நடித்த நண்பர் கேசவன் என்பவரை திடீர் என்று வழியில் சந்திக்கிறார். அந்த நேரத்தில் நான் பாம்பேக்கு போகிறேன். எனக்கு படம் ஒன்று புக் ஆகியிருக்கு நீ வேண்டுமானால் என் கூடவா அந்த படத்தில் உனக்கு சான்ஸ் கிடைக்குமா என்று கேட்டு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னவுடன் தன் வீட்டுக்கு வந்து அம்மாவிடமும் அண்ணனிடமும் இந்த விவரத்தை சொல்கிறார். இதை கேட்ட இருவரும் சென்னையில் சினிமா சான்ஸ் கேட்டு அலைவதை விட கேசவன் அவர்களுடன் நீ பம்பாய்க்கு சென்று வருவதுதான் நல்லது, ஆனால் மகனே பம்பாய்க்கு சென்று ஒரு வாரம் 10 நாட்கள் நடிப்பு சான்ஸ்க்குகாக காத்து கொண்டு இருக்க வேண்டுமே இதற்கு பணம் அதிகம் தேவைப்படுமே என்று சொல்லும்போது உடனே சக்கரபாணி குறுக்கிட்டு அம்மா நானும் தம்பியும் கேசவன் அவர்களை சந்தித்து விவரத்தை பேசி வருகிறோம் என்று சொல்லி கேசவன் அவர்களை சந்திக்க செல்கிறார்கள். அவருடைய வீட்டில் அவரை சந்தித்து பணச் செலவை பற்றி பேசுகிறார்கள். இவர்கள் சொல்வதை கேட்ட கேசவன் அவர்கள் சற்று யோசித்து பிறகு நீங்கள் சொல்வது சரியான விஷயம்தான். ராமசந்திரனுக்கு என் கூட பம்பாய்க்கு வருவதற்கு டிக்கெட்டுக்கு மட்டும் பணம் ஏற்பாடு செய்து கொடுத்து அனுப்புங்கள் மீதி செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்ன உடன் இருவரும் அம்மாவிடம் வந்து இந்த விஷயத்தை சொல்லுகிறார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s