14.பம்பாய் சென்றார் எம்.ஜி.ஆர்

அம்மாவும் சற்றும் யோசிக்காமல் மகனே நான் பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். நீ புறப்படுவதற்கு தயாராகு என்று சொல்லிவிட்டு அடுத்த நிமிடம் சக்கரபாணியை அழைத்து மகனே நீ சென்று கேசவன் அவர்களிடம் ராமசந்திரனை எப்போ அனுப்ப வேண்டும் என்று கேட்டறிந்து வா என்று சொல்லி அனுப்பிவிட்ட பிறகு சத்தியதாய் அவர்கள் தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கின்றது என்று பார்த்து அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். கேசவன் அவர்களை சந்திக்க போன சக்கரபாணி அவர்கள் நாளை காலையில் ராமசந்திரனை பெட்டியோடு என் வீட்டிற்கு அனுப்பி வைக்கவும் என்று சக்கரபாணி அவர்களிடம் கேசவன் சொல்கிறார். அதன்படி மறுநாள் காலையில் சக்கரபாணி தம்பியை அழைத்துக் கொண்டு கேசவன் வீட்டிற்கு செல்கிறார். சென்ற உடன் நமக்கு மதியம் தான் பம்பாய்க்கு ரயில் அதனால் நீங்கள் இங்கேயே இருங்கள் என்று சொன்னார். அதன்படி அவர்களும் அங்கு தங்கி இருந்து மதியம் ரயிலுக்கு சென்று பம்பாய் ரயிலில் தம்பியை வழி அனுப்பிவிட்டு சக்கரபாணி வீட்டிற்கு வந்து, தம்பியை பாம்பேக்கு வழி அனுப்பிவிட்டு வருகிறேன் என்று அம்மாவிடம் சொல்லுகிறார். அன்று முழுவதும் அம்மா அவர்கள் சற்று மனவருத்தத்துடன் இருப்பதை கண்டு அம்மா என்ன ஒரு மாதிரியாக இருக்கிறாய் தம்பி நடித்த முதல் படம் ஜெ ஜெ என்று ஓடி கொண்டு இருக்கிறது. 2வது படத்தில் நடிக்க தம்பி வட இந்தியாவுக்கு செல்கிறான். அதை நினைத்து நீங்க ஏன் வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறீர்கள். அடுத்த நாள் சக்கரபாணி தனக்கு சினிமா தொழிலை தேடி கம்பெனிகளுக்கு செல்கிறார். அந்த நேரத்தில் “சதிலீலாவதி” டைரக்டர் எல்லீஸ் டங்கனை பார்க்கிறார். டங்கன் யோசிக்கிறார் அப்போது ஐயா நான் ராமசந்திரன் அண்ணன் My name is சக்கரபாணி என்று சரளமாக அடுத்து பேச வேண்டிய வார்த்தைகளை ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார்.

அவரும் சக்கரபாணியை அடிக்கடி நீ என்னை வந்து பார்த்து செல் சக்கரபாணி அவர்கள் ஒரு வெள்ளைக்காரர் சினிமா பட டைரக்டர் அவரிடம் இவர் எப்படி சரளமாக ஆங்கிலத்தில் பேச முடிந்தது? தன் தகப்பனார் கோபாலன் அவர்கள் நன்றாக ஆங்கிலம் படித்தவர் பெரும்பாலும் இவர் கண்டியில் ஆங்கிலத்தில்தான் பேசுவார் (ஆங்கில ஆட்கிக்காலம்) சில சமயங்களில் கோபாலன் அவர்கள் தன் மூத்த குழந்தைகளுக்கு ஆங்கிலம் படங்களை சொல்லி கொடுப்பார். அப்போது சக்ரபாணி அவர்கள் சிறு குழந்தையாக இருந்தாலும் அவருக்கு வயது 4 அவரும் மற்ற குழந்தை அண்ணன், அக்காவுடன் அமர்ந்து ஆங்கில உச்சரிப்புகளை கவனிப்பார் அதோடு மட்டுமல்லாமல் தன்னுடன் சகோதர சகோதரிகளிடம் அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவர்கள். அப்போது எனக்கு ஆங்கிலம் சொல்லி கொடுங்கல் என்று கேட்பாராம் இப்படி சக்கரபாணி ஆங்கிலத்தின் மேல் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அதுதான் இப்போது பயன் அளித்தது. பாம்பேக்கு வந்து பட முதலாளியை சந்தித்து எம்.ஜி.ஆருக்கு ஏதாவது ஒரு நல்ல சான்ஸ் கொடுங்கள் என்று சொல்லுகிறார். பட முதலாளியும், டைரக்டரும் எம்ஜிஆரை ஏற இறங்க பார்க்கிறார்கள் அந்த சமயம் எம்ஜிஆர் அவர்கள் ஜிப்பா, பைஜாமா அணிந்து இந்தி நடிகர் போல் நல்ல வாட்ட சாட்டமாக நிற்பதை கண்டு எம்ஜிஆரிடம் உனக்கு என்ன என்ன தொழில் தெரியும் என்று கேட்கிறார். உடனே எம்ஜிஆர் கடகட என தனக்கு தெரிந்த நடிப்புகளையெல்லாம் வரிசையாக சொல்கிறார்.

இதை கேட்ட அந்த இருவரும் எம்ஜிஆருக்கு அருகாமையில் நின்று கொண்டு இருந்த கேசவனை பார்க்கிறார்கள் இதை புரிந்து கொண்ட கேசவன் அவர்கள் பார்க்கும் பார்வைக்கு அர்த்தம் புரிந்து கொண்டு பையன் ஏற்கனவே நாடக கம்பெனியில் எல்லா நடிப்பிலும் தேர்ச்சி பெற்றவன் என்று சொல்லுகிறார். ஓ, அப்படியா சரி, பையன் ஒரு லாட்ஜியில் தங்க வையுங்கள். சாப்பாடு, லாட்ஜ் வாடகை எல்லாம் கம்பெனி கொடுத்துவிடும். பிறகு இந்த படத்தில் பையனுக்கு என்ன வேசம் கொடுக்கலாம் என்பதை பார்த்து முடிவு எடுக்கலாம். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு வயது 20 ஆகிறது. நேரத்துக்கு நன்றாக சாப்பிட்டுவிட்டு லாட்ஜில் தங்கி இருக்கிறார். அதிகாலையில் எழுந்து எப்போதும் செய்வது போல் உடற்பயிற்சிகளை செய்வதில் தவறுவதில்லை (யோகாசனம்) படபிடிப்பு ஆரம்பமாகி நடந்து கொண்டு இருக்கிறது இடையில் எம்.ஜி.ஆர். டைரக்டர், பட முதலாளி, கேசவன் இவர்களை சந்திப்பதிலும் தவறுவதில்லை. எம்.ஜி.ஆர். இந்த படத்தில் சி.ஐ.டி. ஆபீசராக வேடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தார்கள். பிறகு அந்த வேடம் வேர் ஒருவருக்கு கொடுக்கப்பட்டு விட்டது. பிறகு எம்.ஜி.ஆருக்கு ஜெமீன்தார் வேடம் கொடுக்க முடிவு ஆனது. பிறகு அதுவும் அந்த வேடத்திற்கு T.S. பாலையாதான் மிக பொருத்தமானவர் என்று ஜெமீன்தார் வேடத்தை T.S. பாலையாவுக்கு கொடுத்துவிட்டார்கள். எம்.ஜி.ஆருக்கு இந்த படத்தில் சரியான கதாபாத்திரம் கொடுக்க முடியவில்லை. ஆதலால் கம்பெனி முதலாளி மிக சிரமப்பட்டு எம்.ஜி.ஆரிடம் ரூ. 500/- கொடுத்து ஆறுதல் கூறி அடுத்த படத்தில் கண்டிப்பாக உனக்கு நல்ல கதாபாத்திரம் தருகிறேன் என்று சொல்லி எம்.ஜி.ஆரை கேசவனிடம் சென்னைக்கு அனுப்பிவிட்டு வா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார் படமுதலாளி.

அதன்படி கேசவன் எம்.ஜி.ஆருக்கு சமாதானம் சொல்லி சென்னைக்கு ரயில் மூலமாக அனுப்பி வைக்கிறார். பாம்பேயில் புறப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் சென்னை ரயிலில் இறங்கி காலை வீட்டிற்கு வரும் வழியில் அம்மாவையும், அண்ணணையும் எதிர்பாராமல் பார்க்கிறார் எம்.ஜி.ஆரை பார்த்தவுடன் அம்மாவுக்கும், அண்ணனுக்கும் அதிர்ச்சி ஆகிறது. அம்மா மகனை என்ன திடீர் என்று வந்து விட்டாய், அம்மா எங்க நீங்க போயிட்டு வருகிறீர்கள் என்று அம்மாவிடம் எம்.ஜி.ஆர் கேட்கிறார். அம்மா உடனே நானும் அண்ணனம் கோயிலுக்கு சென்று அன்று வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை அம்மனுக்கு செய்து விட்டு வந்து கொண்டு இருக்கிறோம் நான் வேலை கிடைக்காமல் ஊர் ஊராக அலைந்து கொண்டு இருக்கிறேன். இந்த சமயத்தில் நீங்கள் தேவையில்லாமல் அனாவசிய செலவுகள் செய்து கொண்டு இருக்கிறீர்கள் சிறப்பு பூஜை என்றும் தெய்வம் என்று அனாவசிய செலவு செய்தால் அந்த கல்லா எனக்கு வேலை வாங்கி தரப்போகிறது கோபமாக ரோட்டில் நடந்து கொண்டே அம்மாவிடம் சற்ற கோபமாக பேசுகிறார். அம்மா மகனை வீட்டில் சென்று பேசி கொள்ளலாம் என்று மூவரும் வீட்டிற்கு வருகிறார்கள் முதலில் நீ குளித்து விட்டு வா, மெதுவாக உட்கார்ந்து பேசலாம் என்று அன்போடு சொல்கிறார்.

அவரும் அதன்படி குளித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு அம்மாவிடமும் அண்ணனிடமும் தானாகவே பாம்பேயில் நடந்த சம்பவங்களை சொல்கிறார். அதன் பிறகு உள்ளே என்று பெட்டியை திறந்து அவர்கள் கொடுத்த ரூபாய் 500/- வழியில் சாப்பிட்டு செலவு பேக மீதியை அம்மாவிடம் கொடுக்கிறார். அடுத்த நாள் மீண்டும் சென்னையில் உள்ள சினிமா கம்பெனிகளுக்கு ஸ்டுடியோக்களுக்கு வேலை தேடி நடக்கிறார் (இது ஒரு சுருக்கம்)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s