16.மீண்டும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது

தன் மகன்களுக்கு எப்படியாவது படத்தில் நடிக்க சீக்கீரமாக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து அந்த அம்மன் கோயிலுக்கு மகன்களுக்கு தெரியாமல் சென்று பூஜை செய்து வருகிறார். இப்படி இருக்கிற காலகட்டத்தில் இருவருக்கும் சில படங்களில் நடிக்க சிறு சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. தன்னுடைய விடா முயற்சியால் இம்மாதிரி வாய்ப்புக்கள் கிடைப்பதில் குறைவு ஒன்றும் இல்லை ஆனாலும் அவர் மனதிற்குள் நாம் எப்போது கதாநாயகனாக நடிக்க போகிறோம் என்ற ஏக்கம் இருந்து கொண்டு இருந்தது. இப்படியொரு காலகட்டத்தில் ஒரு சிலருடைய முக்கிய சிபாரிசின்படி டைரக்டர் A.S.A. சாமி பட தயாரிப்பாளர் சோமசுந்தரம் இவர்கள் இருவரும் இணைந்து ராஜகுமாரி என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்க எல்லா ஏற்பாடுகளையும் முடித்து கொண்டு கதாநாயகன் தேர்வு நடத்தப்பட்டது. அப்பொழுது எம்.ஜி.ஆர் அவர்களும் இந்த தேர்வில் கலந்துகொண்டார். தேர்வை டைரக்டர் A.S.A. சாமி அவர்கள் மிக கவனமாக தெளிவாக நடத்தினார். இதில் எம்.ஜி.ஆர் ஆள் வாட்டசாட்டம், அழகு, நிறம் மற்றும் பயிற்சிகள் இலைகள் எல்லாமே சரியாக இருந்தது. உடனே எம்.ஜி.ஆரிடம் ஏதும் சொல்லாமல் உன் வீட்டு விலாசத்தை கொடுத்து செல் நாங்கள் உன் வீட்டிற்கு தகவல் அனுப்புகிறோம் என்று சொல்லி எம்.ஜி.ஆரை அனுப்பி வைத்தார்கள். எம்.ஜி.ஆர் மன திருப்தி இல்லாமல் வீட்டிற்கு சென்றவர் அம்மாவிடமும், அண்ணனிடமும் நான் கதாநாயகனாக நடிக்க தேர்வு ஒரு கம்பெனியில் நடந்தது என்ற விவரத்தை சொல்கிறார். இதை கேட்ட அம்மாவுக்கும் அண்ணனுக்கும் மகிழ்ச்சி அடைந்து மகனே நீ கவலைப்படாதே இந்த தேர்வில் நீதான் வெற்றி அடைவாய் என்று அம்மா சொல்கிறார். (இது சுருக்கம்)

மறு நாள் தொடர்ந்து வேலை தேடும்படலம் தொடர்கிறது. ஒரு வார காலத்தில் மேற்படி டைரக்டர் A.S.A. சாமி அவர்கள் எம்.ஜி.ஆரை அழைத்து வரும்படி ஒரு ஆளை அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் வீட்டில் வேறு ஒரு படப்பிடிப்புக்கு சென்று உள்ளார் அம்மா அந்த ஆளிடம் மகன் வந்தால் அனுப்பி வைக்கிறேன் நேரம் (மதியம்)

எம்.ஜி.ஆர் இரவு வீட்டிற்கு வருகிறார். மகன் எப்போது வருவான் எனற் காத்துக்கொண்டு இருந்த தாய் ஏண்டா மகனே இவ்வளவு நேரம் உடனே மகன் சொல்கிறார் நான் ஊர் சுற்றி கொண்டா வருகிறேன். எனக்கு கிடைத்த ஒரு சின்ன வாய்ப்பு நடித்து முடித்தவுடன் நேராக வீட்டிற்கு வருகிற஧ன் என்று சொல்லி பாத்ரூமூக்கு சென்று குளித்து விட்டு வந்தவுடன் சாப்பாடு தயார். மகன் சாப்பாடு சாப்பிடும்போது டைரக்டர் A.S.A. சாமி ஆள் அனுப்பி வைத்த விவரத்தை சொல்கிறார். அப்படியாமா மறுநாள் காலையில் கம்பெனிக்கு செல்கிறார். டைரக்டர் சாமி இவரை பார்த்தவுடன் நேத்திக்கே வரசொன்னேன் ஏன் வரவில்லை என்று கேட்கிறார்.

உடனே எம்.ஜி.ஆர் அய்யா நான் வேறு ஒரு படத்தில் சூட்டிங்க முடித்து வீட்ற்கு போக இரவு 9 மணி ஆகியது. அதனால் தான் நான் இப்போது வந்தேன் என்றவுடன் டைரக்டர் சரி பராவாயில்லை. உன்னை எங்கள் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யபோகிறோம். நாளைக்கு நல்ல நாள் உனது அண்ணன் சக்கரபாணியையும் அழைத்துகொண்டு வந்து ஒப்பந்ததாளில் கையெழுத்து போடனும் என்று சொல்லி அனுப்புகிறார். இதை கேட்டவுடன் எம்.ஜி.ஆர் வேறு எங்கையும் செல்லாமல் நேராக வீட்டிற்கு வந்து விடுகிறார். இதற்கு இடையில் தன் இளைய மகனுக்கு அந்த கம்பெனியில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று சொல்லி அம்மன் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கி தன் இளைய மகனுக்காக காத்து கொண்டு இருக்கிறார். இளைய மகன் எம்.ஜி.ஆர் அவர்கள் சந்தோசத்தோடு வீட்டிற்கு வருகிறார். இடை இடையே சிறு தோல்விகள் சந்தித்த எம்.ஜி.ஆர் இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்து கொள்ளமல், ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து போட, மறுநாள் அன்று வெள்ளிகிழமை காலையில் எழுந்து மகன் இருவரும் கம்பெனிக்கு புறப்படும்போது அம்மனுடைய குங்குமம் நெற்றியில் இட்டு ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைக்கிறார். குங்குமம், பொட்டோ ட சென்ற இருவரையும் டைரக்டர் கம்பெனி முதலாளி பார்த்து வாங்க வாங்க நாங்கள் உங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

அன்று காலை நல்ல நேரம் 9-10 1/2 நேரம் என்றும் இந்த நேரத்தில் தான் எடுக்கப் போகும் படத்தின் பெயர் “ராஜகுமாரி” இந்த படத்தின் தொடக்க விழா பூஜை நடைபெறுகிறது. இதில் நடிக்கும் கதாநாயகன், கதாநாயகி சக நடிகர்களும், சக தொழிலாளர்களும் அங்கு கூடி இருக்கிறார்கள். இந்த பூஜையில் விசேஷமாக வினாயகர் படம், சரஸ்வதி லட்சுமி படம் ஒரு அம்மன் படம் ராஜராஜேஸ்வரி படம் வைக்கப்பட்டு இருந்ததை எம்.ஜி.ஆர் மிக கவனமாக கவனித்தார். படத்தின் பெயர் ராஜகுமாரி (இது ஒரு சுருக்கம்)

பூஜை முடிந்தவுடன் கதாநாயகன் எம்.ஜி.ஆரிடம் ஒப்பந்த கடிதத்தில் கையெழுத்து இடும்படி சொன்னார்கள். உடனே அண்ணன் சக்கரபாணி அந்த ஒப்பந்தத்தைப்படித்து காண்பிக்க சொன்னார். அதில் இந்த படம் சூட்டிங் முடியும் வரையில் நான் வேறு எந்த படத்திற்கும் நடிக்க ஒப்பந்தம் செய்துகொள்ள மாட்டேன் நீங்கள் சூட்டிங்குக்கு அழைக்கும் போது எல்லாம் வரவேண்டும். உங்களுக்கு சம்பளம் பிறகு நிர்ணயிக்கப்படும். இப்பொழுது முன் தொகையாக ரூ. 1001/- தருகிறோம். இது தான் ஒப்பந்தப்பத்திரம். அண்ணனும் தம்பியும் ஒருவருக்கு ஒருவர் முகத்தை பார்த்துக்கொள்கிறார்கள். உடனே அண்ணன் தம்பிக்கு முகத்தினால் கையெழுத்துபோட சைகை காண்பிக்கிறார். தம்பி கையெழுத்துபோடுகிறார். அண்ணனும் சாட்சி கையெழுத்து போடுகிறார். உடனே முதலாளியையும், டைரக்டர் A.S. சாமியும் ரூ. 1001/- முன்தொகையாக கொடுத்தார்கள். எம்.ஜி.ஆர் அதை பெற்றுக்கொண்டார். பிறகு சூட்டிங் தேதிகளை நாளைக்கு சொல்கிறோம் அடுத்து ரூபாய் 1001/- பெற்றுக்கொண்டு நேராக வீட்டிற்கு சென்று அம்மாவை பார்த்து காலில் விழுந்து வணங்கி அம்மாவிடம் முதன் முதலாக கதாநாயகனாக நடிப்பில் நடிக்க முன்தொகையாக ரூபாய் 1001/- கிடைத்ததை நினைத்து அந்த அம்மனை நினைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் அன்னை. அடுத்து, மறுநாள் ஒப்பந்தப்படி கம்பெனிக்கு செல்கிறார். அங்கு டைரக்டர் சாமியும் கம்பெனி முதலாளியும் எம்.ஜி.ஆரிடம் தான் இந்த படத்தில் நடிக்க போகும் கதாபாத்திரத்தையும் தன்னுடன் நடிக்கும் கதாநாயகி மாலதி என்ற ஒரு பெண் நடிக்க இருக்கிறார் அவள் தான் ராஜகுமாரி இத்துடன் டி.எஸ். பாலையா, எம்.என். நம்பியார் என்று விவரத்தை சொல்லுகிறார்கள். கதாநாயகி மாலதி தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர் (தாய்மொழி) டி.எஸ். பாலையா, எம்.என். நம்பியார், நாராயணபிள்ளை போன்றவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆரை விட நடிப்பில் அனுபவத்தில் மூத்தவர்கள் இந்த விவரங்களை தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய வயசுக்கு மீறிய திறமைகளை காட்டி, திறமைகளுடன் நடிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிட்டது. 1946ல் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. 1936 சதிலீலாவதி முதல் படம். 10 ஆண்டுகள் கழித்து இவருக்கு கதாநாயகன் வேடம் கிடைத்தது. இதற்கு இடையில் சிறு சிறு வேடங்களின் 14 படங்களில்நடித்து உள்ளார். சிறு வயதில்நாடகத்தில் நடித்து கைதட்டலும் பாராட்களையும் பெற்று பிறகு 14 சினிமா படங்களின் நடித்து அனுபவங்களை வைத்து கொண்ட இவருக்கு கொடுத்த கதாபாத்திரங்களில் சிரமம் இல்லாமல் தங்கு தடை இல்லாமல், நடிக்க முடிந்தது. இந்த படத்தில் இவர் ஒரு நாட்டின் ராஜகுமாரன். கதாநாயகியும் ஒரு நாட்டின் இளவரசி இந்த இளவரசியை வில்லன்கள் ஒரு சமயத்தில் கடத்தி செல்கிறார்கள். இதை எதிர்பாராமல் பார்த்த ராஜகுமாரன் எம்.ஜி.ஆர் வில்லன்களுடன் குதிரையில் போராடும்போது டி.எஸ். பாலையாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் கத்தி சண்டை ஏற்படுகிறது. இந்த கத்தி சண்டையின் படபிடிப்பின் போது டைரக்டர் இந்த காட்சியை மிக தெளிவாக படப்பிடிப்பை படம் எடுக்கிறார். இதில் இயற்கையானவை எம்.ஜி.ஆர். அவர்களிடம் வாள்வீச்சு திறமை இயற்கையாகவே உள்ளது. மிக வேகமாகவும் உள்ளது என்பதை கவனித்த டைரக்டர் மிக மகிழ்ச்சி அடைகிறார். இந்த சண்டை காட்சி மிக அருமையாக அமைந்து உள்ளது என்பதை பட தயாரிப்பாளர்கள் எல்லோரும் பாராட்டுகிறார்கள். படம் 1947 வெளியிடப்படுகிறது. இந்த படம் வெளிவந்த பிறகு அடுத்து அடுத்து பல படங்களில் இவர் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தங்கள் ஏற்பட்டது. இவர் எத்தனை படங்களில் எப்படி எப்படியெல்லாம் நடித்து பாராட்டுகளை பெற்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

ஒரு படத்திற்கு படம் நடிப்பு வித்தியாசங்கள் கதாபாத்திரங்கள், மிக வித்தியாசமாகவும், தத்துவமாகவும் அவருக்கும் அதை மாதிரி இவர் நடிக்கும் பாடல்களிலும் மிக கருத்து உள்ளதாக இருக்கும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே நடித்து வந்த இவர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இவர் நடிக்கும்படங்கள் எல்லாம் ஒரு புரட்சிகரமாகவே இருக்கும். அது தான் புரட்சி நடிகர், ஆரம்பத்தில் சதிலீலாவதியில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்த இவர், நியாயம், நீதி நேர்மையோடு பல குற்றவாளிகளை பிடித்து தண்டிக்ககூடிய வேடம் போலீஸ் அதிகாரி அதே போல் கடைசிபடம் 1978ல் “மதுரை மீட்டசுந்தர பாண்டிய”னாக நடித்தார். மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் படம் 1978 வெளியிடப்பட்டது. (இது ஒரு மிக சுருக்கமாக எழுதப்பட்ட விஷயம்) இதற்கு முன்னால் உள்ள விஷயங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.

அடுத்து 1936ல் சினிமாவில் நடிக்க தொடங்கியவர், 1940ல் அரசியலில் காங்கிரசில் ஈடுபடுகிறார். வெளிபடியாக இல்லாமல் தன் முன்னேற்றத்தை கருதி அரசியலில் முன்னேற்றத்திற்குத் தடை ஏற்படுமோ என்று கருதி வெளிப்படியாக ஈடுபடுவதில்லை. 1948க்கு பிறகு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு சற்று அரசியலில் வெளி ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் அப்போது காமராஜர் மிக உயர்ந்து நின்றார். அவருடைய கொள்கையை பின்பற்றி அப்போது எம்.ஜி.ஆர் அவர்கள் அரசியலில் ஈடுபாடு வைத்து கொண்டார். இதற்கு இடையில் சினிமா துறை, நாடக துறை என்று பல ஊர்களுக்கு செல்லும் போது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி இவர்களை பற்றி மிக தெளிவாக தெரிந்து கொண்டார். மேலும் கலைஞர் கருணாநிதியும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் ஒரு காலகட்டத்தில் கோவையில் சந்தித்துக் கொண்டார்கள். படத்தில் நடிக்க எம்.ஜி.ஆரும் கதை வசனம் எழுத கருணாநிதியும் இணைந்து இருந்தார்கள். எங்கு சென்றாலும் ஒன்றாக போவார்கள். சிறந்த நண்பர்களாக இருந்தார்கள் ஆனால் கருணாநிதி அவர்கள் திராவிட கழகத்தின் கொள்கையை அடிக்கடி பேசுவார். நாடகம், சினிமாவுக்கு கதை வசனம் எழுதுவதில் திறமைசாலி என்று நினைத்தேன். ஆனால், அதை விட அரசியலில் மிக திறமை உள்ளவர் போல் தெரிகிறதே என்றுதும் கலைஞர் உடனே எம்.ஜி.ஆர் நீங்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினால், பிற்காலத்தில் நீங்களும் ஒரு பெரிய மனிதர் ஆகலாம். இதை நினைத்து எம்.ஜி.ஆர் ஒரு அலட்சிய சிரிப்பு சிரிக்கிறார். அதோடு அவருடைய மனதிற்குள் இவருடன் அரசியல் பேச கூடாது என்று நினைக்கிறார். சேலத்தில் ஒரு லாட்ஜில் ஒரு காலத்தில் தங்கி இருக்கும் போது பேசி கொண்ட விஷயம் பிறகு இந்த அரசியல் விஷயம் எம்.ஜி.ஆர் மனதில் மிக ஆழமாக பதிந்து விட்டது. அடிக்கடி யாருடன் அரசியல் பேச கூடாது என்று நினைத்தாரோ பிறகு அவருடன் அரசியலை பற்றி திராவிட கழகம் கொள்கைகளை பற்றி கேட்கும் போது காங்கிரசுக்கும் தி.க. கொள்கைக்கும் மிக வித்தியாசங்கள் இருந்தன. இது நாள் அளவில் எம்.ஜி.ஆர் மனதில் கொஞ்ச கொஞ்சமாக பதிந்தது. அதே நேரத்தில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் மனவேற்பாடு ஏற்பட்டு அண்ணா அவர்கள் தனியாக திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்தார். அதன் பிறகு தான் 1953ல் முழுக்க முழுக்க அண்ணாவின் கொள்கைகளை அலசி எடுத்தார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அண்ணாவுடைய முன்னிலையில் 1954 தி.மு.க கட்சியில் சேர்ந்தார். இது எம்.ஜி.ஆர் அவர்களுடைய அரசியல் சரித்திரம். இதன் பிறகு எம்.ஜி.ஆர் அவர்கள் அரசியலில் எப்படி என்பதை உலக மக்களுக்கும் தெரிந்த விஷயம்.

1936ல் வெள்ளையர் ஆட்சி காலத்தில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த எம்.ஜி.ஆர் அவர்கள், மிக துடிப்போடு அரசியலில் போயிருந்தார். வெள்ளையர் ஆட்சி காலத்திலிருந்து காந்தி அடியார் அவர்களுடைய கொள்கைகளை கற்று கொண்ட இவர், அண்ணாவின் கொள்கைகளை தன் மனதில் பதிந்து கொண்டவர். அதன்படி முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடவும் இவர் கலை துறையில் இருந்து கொண்டே நாட்டின் பொதுமக்களுக்கு சேவை செய்யவும் சட்டமன்ற உறுப்பினராகவும் எம்.எல்.ஏ பரங்கிமலைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக நின்று ஜெயிக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிற்க அண்ணா அவர்கள் வாய்ப்புக் கொடுத்தார்கள். அதற்கு இடையில் பிரபல நடிகர் எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று கொண்டு வரும் காலத்தில் தமிழ்நாட்டில் (ஜனவரி 12, 1967ல் சுடப்பட்டார்) இந்தச் சமயத்தில் தமிழகத்தில் காங்கிரசுக்கும், திமுகவிற்கும் மிக பெரிய அளவில் போர்களம் போல் பிரச்சாரங்கள் நடக்கிறது.

இந்த பிரசார காலத்தில், மகாபாரதத்தில் அந்தண்ணன்னை போல் தமிழ்நாட்டிற்கு பிரசாரத்தில் செல்லவேண்டிய எம்.ஜி.ஆர் அவர்கள் ஆஸ்பத்திரியில் துப்பாக்கியில் சுடப்பட்டு காயத்தோடு படுத்து இருக்கிறார். தர்மயுத்தத்தில் தர்மராகிய அண்ணா அவர்கள் காங்கிரஸ் இடத்தில் இருந்து தமிழ்நாட்டை கைப்பற்றுகிறார். பரங்கிமலையில் வேட்பாளராக எம்.ஜி.ஆர் அவர்களை நிறுத்தி, காலம் காலமாக பரங்கிமலை தொகுதி காங்கிரசாரின் கோட்டையாக இருந்து வந்தது. 1967 ஆம் ஆண்டு பரங்கி மலை தொகுதியை எம்.ஜி.ஆர் அவர்கள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் பரங்கி மலை தொகுதியை கைப்பற்றினார்கள். அந்த நேரம் எம்.ஜி.ஆர் அவர்கள் எம்.ஆர். ராதாவால் சுடபட்டு சென்னை மத்திய அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த தமிழ்நாட்டில் உள்ள எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் பொங்கி எழுந்தனர். பெரும் போர் படை போல் சென்னை பரங்கிமலை தொகுதிக்கு வந்து வீடுவீடாக சென்று 25 மைல் சுற்றுவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில் சென்று எம்.ஜி.ஆர் அவர்கள் ஓட்டு அளிக்கும்படி இரு கரம் கூப்பி வணங்கி ஓட்டு சேகரித்தார்கள். எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற தொண்டர்கள். 1936ல் தமிழக சினிமா துறையில் நுழைந்த எம்.ஜி.ஆர் 1954வது வருடத்தில் அரசியலில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அண்ணாவின் தலைமையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். இது அவருடைய வாழ்க்கை வரலாற்றில் ஒரு பகுதி. இது சுருக்கம்.

அவர் நடித்த ஒவ்வொரு படங்களிலும் இடையிலேயும் ஏற்பட்ட சிரமங்களை சமாளித்து கொண்டு தாம் இம்மாதிரி மென்மேலும் சினிமா தொழிலில் உயர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தன் விடா முயற்சிகளை ஈடுபாடு கொண்டு வருங்காலத்தில் தன் சகோதரர் சக்கரபாணி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க சத்தியதாய் அவர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். கேரளாவிலேயே பாலகாட்டிற்கு அடுத்து உள்ள வடவனூர் என்ற கிராமத்தில் பெண் பார்த்து சக்கரபாணி அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் இவர்கள் முன் குடி இருந்த வால்டாக்ஸ் ரோட்டிற்கும் சுபாஸ் சந்திரபோஸ் சாலைக்கும் கூடும் இடத்தில் ஒரு சாதாரண வீட்டில்இருந்து சக்கரபாணி அவர்களுக்கு கல்யாணம் முடிந்த பிறகு சற்று பெரிய வீட்டில் வால்டாக்ஸ் ரோட்டில் முதலியார் அவர்களின் வீட்டில் குடி போகிறார்கள். முதலில் மூவராக வசித்தவர்கள் திருமணம் ஆன பிறகு நான்கு பேர்களாக ஆகிவிட்டார்கள். முதல் முதலாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி கால்நடையாகவே சென்று சினிமா கம்பெனிகளுக்கு ஒரு வேலை சாப்பிட்டும் சாப்பிடாமலேயும் ஸ்டூடியோக்களுக்கு சென்று வந்து கொண்டு இருந்தார்கள். பிறகு ஒரு காலகட்டத்தில் ரிக்ஷாக்களிலும், குதிரை வண்டிகளிலும் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் அதிகமாக பெரிய ரோட்களில் டிராம் என்ற வண்டி போகும் இப்படி இவைகளில் எல்லாம் சென்று வந்தவர்கள். பிறகு டாக்சி கார்களில் அல்லது கம்பெனிகாரர்களில் போய்வருவார்கள். இவர்கள் ஸ்டூடியோ இருக்கும் வடபழனி சினிமா கம்பெனிகள் இருக்கும் ராயபேட்டை, மாம்பலம், இந்த மாதிரி இடங்களில் குடி இருக்காமல் சென்னை ஜார்ஜ் டவுனில் ஏன் குடி இருந்தார்கள் வால்டாக்ஸ் ரோட்டில் ஒற்றவாடை என்ற நாடக தியேட்டர் பழமையான தியேட்டர். இது சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு பக்கத்தில் அமைந்து உள்ளது. அந்த கால கட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நாடாககொட்டகை (தியேட்டர்) என்பது இந்த ஒற்றவாடை தியேட்டர் மட்டும்தான் நகரத்தில் உள்ளவர்கள் நாடகம் பார்க்க வேண்டுமென்றால் இங்குதான் வரவேண்டும். சென்னை நகரத்தின் முதன்மையான இடம் எம்.ஜி.ஆருக்கு மிக பழகி போன இடம் அவருக்கு மிக பிடித்தமான இடம்.

அதனால்தான் அப்பகுதியில் குடியிருந்தார்கள் அதோடு சத்தியதாய் அவர்களுக்கு அந்த இடத்தில் உள்ள அம்மன்மீது அதிக பக்தி கொண்டிருந்தார். ஆனால், சத்தியதாய் அவர்களுக்கு அந்த இடத்தை விட்டு போக மனம் இல்லை. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அவர் கதாநாயகனாக நடித்து முதல் படம்வெளிவந்த பிறகு அடுத்து கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வர கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. இனிமேல் இவர் எந்த படத்தில் துணை நடிகனாக நடிக்க முடியாது. இந்த காலகட்டத்தில் ஒரு பெரிய புராண படத்தில் ஒரு பிரபல இந்தி டைரக்டர் இயக்க கூடிய அந்த படத்திற்கு இவர் கதாநாயகனாக நடிக்க பல தேர்வுகள் அதாவது கத்தி சண்டை, குதிரை சவாரி, சண்டை காட்சிகள் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க திறமை, நல்ல அழகு, உடல் அமைப்பு, முக அழகு உடல் நிறம் இவைகள் அனைத்தும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிக பொருத்தமாக இருந்தது. இது பட முதலாளிக்கும், பட இயக்குநருக்கும் எம்.ஜி.ஆரை மிக பிடித்துவிட்டது. இந்த ஒப்பந்தம் செய்து முன் பணம் கொடுக்கப்பட்டு, படபிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் சமயத்தில் சொந்த குரலில் பாடி நடிக்ககூடிய ஒருவர் இருந்தால் நல்லா இருக்கும் என்ற ஒரு எண்ணம் பட தயாரிப்பாளருக்கு தோன்றுகிறது.

இதை மனதில் வைத்துக்கொண்டு பி.யு. சின்னப்பாவை போடலாம் என்று பட முதலாளி இயக்குநரிடம் சொல்லுகிறார். இதை ஏற்று கொள்வதா டைரக்டர், ‘எம்.ஜி.ஆர்’ தான் இந்த படத்திற்கு மிக பொருத்தமானவர் என்று நறுக்கு என்று சொல்லிவிட்டார். ஏற்கனவே இந்த இந்தி டைரக்டர் நத்லால் அவர்கள் மிக சுறுசுறுப்பானவர் முன் கோபக்ககாரர் அவர் தேர்ந்து எடுத்த எந்த காரியத்தையும் விட்டு கொடுக்காதவர். இவர் நாராயணன் கம்பெனியில் இந்த முதல் படத்திற்கு டைரக்டராக அமைக்கப்பட்டார். இயக்குனருடைய முழு முயற்சியின் காரணமாக எம்.ஜி.ஆர் அவர்கள் கதாநாயகனாக நடித்தார். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் நடிக்கிறார் (இது சுருக்கம்) வாசகர்களுக்கு எம்.ஜி.ஆர் அவர்கள் நாடகம், சினிமா அரசியல் இவைகள் எல்லாம் இவைகளிலிருந்து இவர் எப்படி எப்படி வந்தார் என்பதை நான் சொல்லவேண்டியது இல்லை. அடுத்து அவருடைய குடும்ப வாழ்க்கை வரலாறுக்குச் செல்வோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s