20.முதன் முதலில் சொந்தமாக வீடு

அந்த வீடுசற்று சிறியதாக இருந்தாலும் வீட்டிற்கும் முன்னும் பின்னும் காலி இடம் இருந்தது. சென்னை நகரில் ராயப்பேட்டை என்பது ஒரு முக்கியமான இடம். மேலும் இந்த வீடு இருக்கும் நல்ல பெரிய ரோடு பெயர் லாயட்ஸ்சாலை இப்போ அவ்வை சண்முகம் சாலை ஐகிளாஸ் ஏரியா இந்த வீட்டின் கதவு எண் 160 கூட்டு எண் 7 எம்.ஜி.ஆர். அவர்களுடைய ராசி நம்பர் 7 நாளடைவில் அந்த வீட்டில் உள்ள காலி இடங்களில் வசதிக்குத் தகுந்தார் போல் கட்டிடங்கள் கட்டி பழைய கட்டிடத்தை புதுப்பித்து, புதுசையும், பழசையும் ஒன்றாக இணைத்து ஒரு பெரிய வீடாக்கி விட்டார்கள். அந்த வீட்டிற்கு “தாய் வீடு” என்று பெயர் வைத்தார் எம்.ஜி.ஆர் பிறகு அந்த வீட்டை ஒரு புதிய வீடாக கட்டியதை அந்த வீட்டை விற்ற அட்வகேட் ராமன் அவர்களிடம் விவரங்களை சொல்லி அந்த வீட்டின் திறப்பு விழாவில் விளக்கேற்றி வைத்து எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொண்டார் எம்.ஜி.ஆர். அதன்படி அட்வகேட் ராமன் அவர்களும் வந்து விளக்கேற்றி வைத்து ஆசிர்வாதம் செய்தார். இதை போல் இன்னும் பல சொத்துக்களை வாங்கிநல்ல பெயரும் புகழுமாக வாழவேண்டும் எம்.ஜி.ஆரை பார்த்து சொல்லிக் கொண்டு இருக்கும் போதே எம்.ஜி.ஆர் அவர்கள் அந்த அட்வகேட் காலை தொட்டு வணங்கினார். அவர் எம்.ஜி.ஆரை தூக்கி தோள்பட்டை தட்டி கொடுத்து வாழ்த்தினார். அவருக்கு அப்போது வயது 60க்கு மேல் இருக்கும். ஒரு வக்கீல் அதிலும் பிராமின் இவர் நம்ம குடும்பத்தில் இவ்வளவு அன்பு பாசம் வைத்து இருக்கிறாதே மகன்களே இவரை என்றும் மறக்கக்கூடாது என்று சத்தியதாய் மிக உணர்ச்சி வசத்தோடு மகன்களிடம் சொன்னார். வருடத்திற்கு வருடம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நல்ல கதை அம்சம் உள்ள படங்கள் அதிகமாக புக்கானது இவர் நடித்த படங்கள் நல்ல வருமானத்தை பட தயாரிப்பாளர்களுக்கு கொடுத்தது.

1950க்கு மேல் இவருடைய வீட்டிற்கு முன் எம்.ஜி.ஆர் அவர்களை பார்க்க காலையிலும் மாலையிலும் ரசிகர்கள் கூட்டமாக வீட்டுக்கு வெளியே ரோட்டில் நின்று கொண்டு இருப்பார்கள். எம்.ஜி.ஆர். அவர்களும் சூட்டிங்குக்கு போகும் போதும் திரும்பி வீட்டிற்கு வரும் போதெல்லாம் ரசிகர்களை பார்க்காமல் போவதில்லை. இதை கண்ட சத்தியதாய் மிகவும் பெருமை அடைந்தார். இந்த நிலை மாதம் வருடம் என்ற முறையில் தமிழ்நாடு எங்கும் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ரசிகர்கள் பெருகிவிட்டார்கள். பிறகு 1954க்கு மேல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தமிழ்நாடு எங்கும் ரசிகர் மன்றங்கள் பெருகிவந்தது. இவர் D.M.K.யில் சேர்ந்த பிறகு சென்னையில் நடிகர்கள் என்.எஸ்.கே, கே.ஆர்.ராமசாமி, டி.வி. நாராயணசாமி, எஸ்.எஸ். ஆர், வளையாபதி, முத்து கிருஷ்ணன் இன்னும் சிலர் ஒரு கூட்டாக அமைந்தார்கள். சிவாஜி, டி.ஆர். மகாலிங்கம் இவர்கள் தனி இவர்கள் வளர, வளர சினிமாவில் இவர்களுக்கு முன் மூத்த கதாநாயகர்கள் கொன்னப்பா, தியாகராஜ, பாகவதர், பி.யு. சின்னப்பா, எம்.கே. ராதா இன்னும் சிலர்கள் இவர்கள் எல்லாம் சினிமாவில் இருந்து விலக ஒருசந்தர்ப்ப சூழ்நிலை ஏற்பட்டது. இதை நான் சுருக்கமாக எழுதி உள்ளேன்.

1960ல் இருந்து 1976 வரை தமிழக மக்களின் இதயங்களிலும், அகில உலக தமிழ் மக்கள் இதயங்களிலும் கொடி கட்டி பறந்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய சினிமா வாழ்க்கையை சற்று சுருக்கமாக முடித்து கொண்டு அடுத்து அவருடைய அரசியல் வாழ்க்கையை பற்றி பார்ப்போம். எம்.ஜி.ஆர். அவர்கள் 1937ல் வெள்ளையர் ஆட்சி காலத்தில் காந்தியுடைய இயக்கத்தில் இணைந்து வெள்ளையனே வெளியேறு, வந்தே மாதரம் மகாத்மாகாந்திக்கு ஜே என்று சொல்லியவர்களில் ஒருவர் மக்கள் திலகமும் ஒருவர். இவருக்கு நாடக கம்பெனி முதலாளிகள் எல்லாமே காந்தி இயக்கம் இதைபோல் சினிமாவுக்கு வந்த பிறகு இங்கேயும் காந்தி இயக்கம். இதில் காந்தி அடிகள் அகிம்சை போராட்டம் செய்பவர். அகிம்சை முறை பிடிக்காமல் சுபாஷ் சந்திரபோஸ் விலகி வீரபோர் என்ற பெயரில் ஒரு அமைப்பை வீர சுபாஷ் போஸ் கொண்டு வந்தார். இந்த இயக்கத்தில் பல இளைஞர்கள் சேர்ந்தார்கள் இதில் மக்கள் திலகமும் ஒருவர்.

1947ல் இந்தியாவை காங்கிரஸ் வெள்ளையர்களிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியது. 1948ல் இருந்து எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழ்நாடு காங்கிரசில் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காமராசர் சிஷ்யனாக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் 1953ல் கலைஞர் கருணாநிதி, டி.வி. நாராயணசாமி இவர்களுடைய தூண்டுதலில் அண்ணா அவர்களுடைய சிஷ்யன் ஆனார். பிறகு எம்.ஜி.ஆர். அவர்களுடைய புரட்சிகரமான அரசியல் வாழ்க்கையை பற்றி தமிழ் மக்களும், அகில உலக தமிழர்களும் எம்.ஜி.ஆர். அவர்களுடைய அரசியல் திறமையை பற்றி எல்லோருக்கும் அறிந்த விஷயமே. எம்ஜிஆர் அவர்கள் சினிமாவில் புரட்சி நடிகர் என்று புகழ்பெற்றார். அரசியலில் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டார். பிறகு 1977 தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். (1967ல் பரங்கிமலை காங்கிரஸ் கோட்டையை பிடித்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் அதிலிருந்து அரசியல் கொடியை தமிழ்நாடு எங்கும் ஏற்றி வந்தவர் 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சென்ட்ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தினத்தன்று மக்கள் திலகம் தேசிய கொடியை ஏற்றினார். இதை தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு வரை இந்த தேசிய கொடியினை 10 ஆண்டு காலமாக சுதந்திர கொடியை ஏற்றி வந்தார் என்பது தமிழக மக்கள் அறிந்த விஷயமே. இந்த 10 ஆண்டு கால கட்டத்தில் தமிழக மக்களுக்கு எப்படி ஒழுங்கு முறையாக ஆட்சி நடத்தினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் முப்பிறவி எடுத்தவர், மூன்று முறை அரசு ஆட்சி சிம்மாசனத்தில் அமர்ந்தவர், மேலும் எம்.ஜி.ஆர் அவர்கள் மூன்று துறைகளில் புகழ் பெற்றவ்ர, சினிமா, அரசியல், அரசாட்சி இதோடு அவருடைய சொந்த வாழ்க்கையில் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். இதில் முப்பிறவி எடுத்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இவைகள் அனைத்தும் தமிழக மக்கள் நன்கு அறிந்ததே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s