21.வி.என். ஜானகி அம்மா வரலாறு

வி.என். ஜானகி அம்மா அவர்கள் சொந்த ஊர் கேரளா பாலக்காட்டுக்கு அடுத்து உள்ள வைக்கம் என்ற ஊர். இவர் பிரபல கர்நாடக பாடல் அசிரியர் பாபநாசம் அவருடைய தம்பி ராஜகோபால் ஐயருடைய மகள் தான் வி.என். ஜானகி அம்மா அவர்கள். வைக்கத்தில் பிறந்தவராக இருந்தாலும் படித்தது, நடனம் கற்றக்கொண்டது எல்லாம் சென்னைதான். இவருடன் பிறந்தது ஒரு ஆண் அவர் பெயர் நாராயணன். இவர்கள் சென்னை மைலாப்பூர் கேசவப் பெருமாள் கோயிலுக்கு அருகில் வசித்தார்கள். இவர்கள் பக்கா பிராமின் வி.என். ஜானகி அவர்கள், பிரபல டைரக்டர் K. சுப்பிரமணி, நடிகை S.D. சுப்புலட்சுமி அவர்கள் நடத்தி வந்த நாடக குழுவில் நடித்து வந்தார். பிறகு டைரக்டர் K. சுப்பிரமணி வழியாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த முதல் படம் “ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி” இந்த படத்தில் கதாநாயகியாக ரொம்ப பிரமாதமாக நடித்துள்ளார். அந்த படத்தில் இவர் ஆயிரம் தலைகளை வெட்டி குவிக்கும் காட்சி மயிர் சிலிர்க்க வைக்கும் அந்த படம். எம்.ஜி.ஆர். அவர்களுடன் கதாநாயகியாக நடிக்க சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் மோகினி 1948ல் வெளிவந்தது. அதை அடுத்து மருதநாட்டு இளவரசி, நாம் போன்ற படங்கள் இவர்கள் நடித்த படங்கள். இந்த கால கட்டத்தில் இல்லற வாழ்க்கையே நமக்கு இனிமேல் ௾ல்லை தான் உண்டு தன் தொழில் உண்டு உழைப்பே உயர்வு என்ற ஏணியில் ஏறிக்கொண்டு இருக்கும் போது ஒரு பெரிய சறுக்கல் அதாவது எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மூன்றாவது கல்யாணம் நடக்க இயற்கை அழைக்கிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் மூன்று படங்களில் ஜானகி அம்மாள் நடித்து உள்ளார்கள்.

இதற்கு இடையில் எம்.ஜி.ஆர். மீது அன்பு கொண்டார். (காதல்) இதை அறிந்த எம்.ஜி.ஆர் அவர்கள் அன்புக்கு அடிமையானார். ஆனால் காதல் என்பது சினிமாவில் மட்டும் (நடிப்பில்) என்னுடைய சொந்த வாழ்க்கையில் இல்லை. என் தாய் உடனே எனக்கு கேரளாவில் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். நான் அந்த பெண்ணுடன் ஒரு வருடம் தான் வாழ்ந்தேன். பிறகு ஒரு வருடம் கழித்து எனக்கு கட்டாயமாக இரண்டாவது கல்யாணம் நடந்தது. அந்த பெண்ணோடு நான் ஒரு வருடம் தான் நல்ல சந்தோஷமாக வாழமுடிந்தது.

பிறகு அந்த பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அது சரி ஆகாமல் தொடர்ந்து உடல் நலக்குறைவாகவே இருக்குது. இந்த மாதிரியான சூழ்நிலையில் உள்ள என்னிடம் என்னை நீங்கள் விரும்புவது எப்படி சரியாகும், தயவு செய்து இது வேண்டாம் நாம் இருவரும் நண்பர்களாக ௾ருப்போம் தொடர்ந்து படங்களில் நடிப்போம் என்று எம்.ஜி.ஆர். அவர்கள் மிக விளக்கமாக சொன்னார். இருந்தாலும் தன்னுடைய குடும்ப நிலைகளை விபரமாக சொன்னார். வி.என். ஜானகி அவர்கள் பெண் என்றால் பேயின் மனம் இறங்கும் என்பது போல் எல்லாவற்றையும் யோசித்த எம்.ஜி.ஆர் அவர்கள் இந்த விஷயத்தில் மிக கவனமாக செயல்பட்டார். ஒரு பக்கம் தன் தாய், மறு பக்கம் தன் மனைவி, மேலும் மனைவி உயிருடன் இருக்கும் போதே வேறு ஒரு பெண்ணை காதலிப்பதோ, கல்யாணம் செய்து கொள்வதோ சட்டப்படி குற்றம் என்பதை எம்.ஜி.ஆர். அவர்கள் நன்கு அறிவார். அவர் நாடகம், சினிமா, குடும்ப வாழ்க்கையில் மிகவும் அனுபவம் பெற்றவர். எதையும் யோசிக்காமல் செய்யமாட்டார். அப்படிபட்ட இவருக்கு வி.என். ஜானகி அம்மா விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டு விட்டது. வி.என். ஜானகி அம்மாவிடமும், சதானந்தவதியிடமும் பேசுவது, சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலிலேயே விழுந்து விடுவோமே என்று மிகவும் மனதை தைரியப்படுத்தி கொண்டு ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் முதலில் தன் மனைவியை பார்த்து விட்டுத்தான் மற்ற வேலைகளை செய்வது வழக்கமாக நடக்கிற விஷயம். இப்போ தன் மனைவியிடமே நேரடியாக இதை பற்றி பேசி விடலாம் என்ற எண்ணத்துடன் தன் மனைவியிடம் வி.என். ஜானிகி அவர்களைப் பற்றி முழுவிவரத்தையும் சுருக்கமாக சொல்லிவிட்டு பிறகு காதல் கல்யாண விஷயத்தையும் கடகடவென்று சொல்லிவிட்டு தன் மனைவியின் கையை பிடித்து கொண்டார். இந்த விஷயத்தில் மனைவியின் சம்மதம் இருந்தால் போதும். பிறகு மற்றவர்களுடைய சம்மதத்தை பெற்று விடலாம். தன் கணவர் தன்னிடம் பேசியதை கேட்டு கொண்டு இருந்த சதானந்தவதி அவர்களின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

இதை பார்த்த எம்.ஜி.ஆர். உடனே கண்ணீரை துடைத்து விட்டு கொண்டே தன் மனைவியிடம் உனக்கு இது பிடிக்காவிட்டால் விட்டு விடு அழாதே உன்னுடைய சம்மதம் இல்லாமல் இனி மேல் அந்த பெண்ணிடம் பேச கூட மாட்டேன். கவலைபடாதே இந்த விஷயத்தை அம்மாவிடம் கூடநான் சொல்லவில்லை நீ நல்லா யோசித்து உன் முடிவை மெதுவாக சொல் அவசரம் இல்லை என்று சொல்லிவிட்டு அவருடைய அறைக்குள் போய்விட்டார். இவர் சென்ற பிறகு தன்னுடைய கணவருடைய நிலமையைப் பற்றியும் அவருடைய வேண்டுகோளைப் பற்றியும் நினைத்து இந்த விஷயத்தை அடுத்த நாள் தன் மாமியார் இடமும் எம்.ஜி.சி. அவர்களிடமும் இந்த விஷயத்தை பற்றி பேசினார். இந்த செய்தியைக்கேட்ட இந்த இருவருக்கும் அதிர்ச்சி அடைந்து போனார்கள். பிறகு சதானந்தவதி சத்தியதாயிடமும் எம்.ஜி.சி அவர்களிடமும் தன் கணவர்விருப்பப்படி அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளட்டும், எனக்கு என் கணவருடைய மன நலம் தான் முக்கியம் அவருடைய மனம் நோகக்கூடாது. என்னுடைய உடல் இனிமேல் நலம்பெற்று நான் எழுந்து மீண்டும் என்னுடைய பொறுப்புகளை சேவைகளை அவருக்கு செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே தயவு செய்து அவரிடம் எந்த வித மறுப்பும் சொல்லாமல் கேள்விகள் கேட்காமல் அவரிடம் நீங்களே உங்களுடைய சம்மத்தை சொல்லுங்கள். அவர் மனம் புன்படாமல் நல்ல சந்தோஷமாக இருப்பது தான் நமக்கு முக்கியம் என்று சொல்லிக்கொண்டு சத்தியதாயுடைய கையை பிடித்து கண்ணீர் விட்டார். இந்து அகராதிப்படி கணவன் தன் மனைவியிடம் நான் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளபோகிறேன் என்று சம்மதம் கேட்டதும் இல்லை. மனைவி கணவருக்கு சரி செய்து கொள்ளுங்கள் என்று சொன்னதில்லை. எந்த சூழ்நிலையிலும் தன் கணவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் வைப்பாட்டியோ 2வது பெண்டாட்டி வைத்து கொள்ள நல்லமனத்துடன் சம்மதிக்க மாட்டார்கள்.

ஆனால் சதானந்தவதி அவர்கள் தன் கணவர் தன்னிடம் நான் திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டதை நினைத்து பூரிப்பு அடைந்து போனார். தன் மனைவி ஒரு படுக்கை நோயாளி என்று நினைக்காமல் பாசத்தோடும் பற்றோடும் கேட்டாரே இவர் வேறு திருமணம் செய்து கொண்ட பிறகு நம் மீது வைத்துள்ள அன்பும், பாசமும், பற்றும் போய்விடுமோ என்று நினைத்து எதுவானாலும் சரி அவர் நல்லா இருந்தால் போதும். நாம் சாகும் வரை அவருடைய முகத்தை பார்க்கும் பாக்கியம் கிடைத்தால் போதும். இந்த விஷயத்தில் சத்தியத்தாயும் எம்.ஜி.சி. அவர்களும் எந்த வித மறுப்பும் சொல்லவில்லை. அப்படி இப்படினு எப்படியோ 1957ல் எம்.ஜி.ஆர் அவர்களும், வி.என். ஜானகி அம்மா அவர்களும் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். பிறகு ராயப்பேட்டையிலேயே ஒரு தனி வீடு பார்த்து குடித்தனம் அமைத்தார். திருமணம் செய்து கொண்ட உடனே வி.என். ஜானகி அவர்களை சதானந்தவதிக்கு அறிமுகப்படுத்தினார். உடனே வி.என். ஜானகி அவர்கள் சதானந்தவதி அவர்களுடைய காலை தொட்டு வணங்கி விட்டு அக்கா நான் உங்களுடைய உடன் பிறவா தங்கை என்னை உங்கள் தங்கை போல் நினைத்து கொள்ளுங்கள் எனக்கு இப்போ என் உடன் பிறந்த தம்பியைத் தவிர வேறு யாரும் இல்லை. இதை கேட்ட சதானந்தவதி அவர்கள் வி.என். ஜானகி அவர்களுடைய கையைப்பிடித்து கொண்டு நான் இருக்கிறேன் கவலைபடாதே என்றார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s