22.ஜானகி அம்மையாரின் சபதம்

அன்று மதியம் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். கல்யாணத்திற்கு பிறகு, வி.என். ஜானகி அவர்கள் இனிமேல் சினிமாவில் நடிப்பதில்லை நான் உங்கள் மனைவி, வீட்டோ ட இருந்து விடுகிறேன் என்று எம்.ஜி.ஆர் அவர்களிடம் சபதம் எடுத்து கொண்ட வி.என். ஜானகி அவர்கள் கடைசிவரை அப்படியே வாழ்ந்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் வாழ்ந்த காலங்கள் 40 ஆண்டுகள். 1957 முதல் 1987 வரை. பிறகு, 1958ல் சத்தியதாய் இறந்துவிட்டார். எம்.ஜி.ஆர். அவர்களும் வி.என். ஜானகி அவர்களும் தினமும் தாய் வீட்டிற்கு வந்து சதானந்தவதி அவர்களின் உடல் நலத்தைப் பார்த்து செல்வார்கள். இந்த கால கட்டத்தில் “எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்” என்ற பெயரில் எம்.ஜி.ஆர் அவர்கள் சொந்தமாக “நாடோ டி மன்னன்” என்ற பெயர் வைத்து பிரமாண்டமான முறையில் ஒரு படத்தை தயாரித்தார். அந்த படத்தை அவரே டைரக்ட் செய்தார். படம் சூட்டிங் முடிந்து வெளியிடப்பட்டது அந்த படம் பெரிய வெற்றியை கொடுத்தது. இதற்கு முன் “எம்.ஜி.ஆர். நாடக மன்றம்” என்ற பெயரில் சில நாடகங்கள் சொந்தமாக நடத்தினார். திரு. எம்.ஜி.ஆர். அவர்களுடைய லட்சியமும் சத்தியதாயுடைய தெய்வ வேண்டுதலும் வீண் போகாமல் கொஞ்சம் நிறைவேறியது.

தன்னுடைய கடும் உழைப்பும் தன் அண்ணனுடைய உழைப்பும் தாயுடைய சிக்கன செலவும், அதாவது சிக்கனம் முக்கியம். சேமிப்பு அவசியம் என்ற சொல்படி எல்லாமே வெற்றிகரமாக நடந்தது. சொந்தத்தில் வீடு சொந்தத்தில் கார், சொந்தத்தில் நாடக கம்பெனி, சொந்தத்தில் ஸ்டூடியோ, சொந்தத்தில் சினிமா படம் தயாரிப்பு, சொந்ததில் கல்யாண மண்டபம், சொந்தத்தில் ஒரு சிறிய மார்க்கெட், சொந்தத்தில் ஸ்கூல், சென்னை நகருக்கு வெளியே ஒரு தோட்டத்தில் ஒரு சிறிய பங்களா, ஆடு, மாடு, கோழி, குருவிகள், பழமரங்கள், பண்ணையில் வேலை செய்ய பலவேலை ஆட்கள் உணவு உன்னும் நேரத்தில் தன்னை காண வீட்டுக்கு வந்து இருப்பவர்களுக்கு எல்லாம் உணவு தனக்கு வேண்டிய அளவிற்கு சம்பாத்தியம் எம்.ஜி.ஆர். அவர்கள் எப்படி வாழனும் என்று நினைத்தாரோ அதே போல் வாழ்ந்தார், நினைத்ததை முடித்தவர். மக்கள் திலகம் தன் தாயுடைய கனவுகளை எல்லாம் நிறைவேற்றிய மகன் எம்.ஜி.ஆர். ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். திரு. மக்கள் திலகம் அவர்களுக்கு தாய்க்குப் பின் தாரம் இந்த சொல் எம்.ஜி.ஆருக்கு மிக பொருத்தமாய் இருந்தது. நோயால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்த சதானந்தவதி 1962ல் இறந்து போனார். பிறகு, இரண்டு மாதம் கழித்து சென்னை நகருக்கு வெளியே ராமாபுரம் என்ற இடத்தில் ஒரு தோட்டத்தில் புதிதாக கட்டியிருந்த வீட்டிற்கு தன்னுடைய மூன்றாவது மனைவி வி.என். ஜானகியுடன் சென்று வாழ்ந்தார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s