23.தாய்க்குக் கோயில்

ராமாபுரம் தோட்டத்தில் தன் தாய்க்கு கோயில்கட்டினார். மக்கள்திலகம் வெளியே போகும் போது தினம்தோறும் தன் தாயை வணங்கிவிட்டு தான்செல்வார்.
இதே போல், ராயபேட்டையில் தன் தாய் வீட்டிலும் ஒரு பெரிய தாயின் படம், “சத்யா ஸ்டூடியோ”விலும் அவருடைய அலுவலகத்திலும் தாயின் படம் மாம்பலம் அலுவலகத்திலும் தாயின் படம். தாயே தெய்வம் என்று தினந்தோறும் பூஜித்து வந்தார் மக்கள் திலகம். மக்கள் சேவையே என் சேவை. நான் முதல் மந்திரியாக இருந்தாலும் மக்கள் சேவகன். மக்கள் வாழ்வே என் வாழ்வு இது எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக ஆன பிறகு, அவர் சொன்ன வார்த்தைகளும், எண்ணமும் இது தான்.

தன் தாய் இறந்த பிறகு தன் அண்ணன் சக்கரபாணி அவர்களை தாயாக நினைத்து எந்த விஷயமாக இருந்தாலும் கலந்து பேசாமல் செய்ய மாட்டார். இதில் அவர்கள் இருவரும் அண்ணன் தம்பியும் சொந்தத்தில் ஆரம்பித்த நாடக கம்பெனிக்கும் சினிமா கம்பெனிக்கும், முழு பொறுப்பையும் தன் அண்ணணிடமே கொடுத்து இருந்தார். அவருக்கு துணையாக இருந்து எல்லா பொறுப்புகளையும் கணக்கு, வழக்குகளையும் கவனிக்கும்படி ஆர். எம். வீரப்பன் அவர்களை நியமித்தார். தான் முதல் அமைச்சராக ஆன பிறகும் கூட தன் அண்ணனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து கொண்டே இருந்தார். இதே போல் சக்கரபாணி அவர்களும் தன் உடன் பிறந்த தம்பி மனம் நோகாமல் நடந்து கொள்வார். தம்பி தன்னிடம் பேசும்போதெல்லாம் மிக கவனமாக தம்பிக்கு ஏற்றமாதிரி பதில்களை சொல்வார். திரு. சக்கரபாணி அவர்கள் தன்னுடன் பிறந்த மூத்தவர்கள் சகோதரிகளையும், சகோதரனையும், தன் தந்தையுடைய புகழ்களையும் தன் தாய் அவர்களுக்கு பிறகு தன்னையும் தன் உடன் பிறந்த தம்பியையும், வளர்க்க எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை நினைக்காத நேரமும்இல்லை. இதை பற்றி தனக்கு வேண்டிய முக்கியஸ்தர்களிடம் பேசாமல் இருப்பதும் இல்லை. தன்னையும் மனைவி மக்களையும் எந்த குறைகளும் இல்லாமல் எனது தம்பி ராமச்சந்திரன் பார்த்து கொள்கிறான் என்ற பெருமையை வெளியே பேசாமலும் இருப்பதும் இல்லை. தன் தம்பி ராமச்சந்திரன் சிறுபிள்ளையாக இருக்கும் போது ரொம்பவும் சுறுசுறுப்பாகவும், சட்டித்தனமாகவும் இருப்பான். அவன் செய்யும் குறும்புகளை அம்மா ஒருவரால் தான் அவனை அடக்க முடியும். அப்படிப்பட்ட என் தம்பியுடன் நாடகம், சினிமா, அரசியல், இப்படி அவனுடன் நான் சேர்ந்து வாழ்ந்த காலங்களை நினைத்து ஆச்சரியப்படுவேன். அவன் பிரபலமாக வாழ்கின்ற இந்த காலத்தில் பெரிய சாது போலவும், ஞானிகள் போலவும் பெரும் அரசியல் தலைவர் போலவும் அவன் பேசுவதும் அவன் நடந்து கொள்ளும் விதமும் ஒரு பெரிய உயர்ந்த மாமனிதனாக ஆகிவிட்டான் என்பதை நினைத்து பூரிப்பு அடைகிறேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s