27.கலைவாணர் என்.எஸ்.கே.

திரு. என்.எஸ்.கே. அவர்களுடைய இரண்டாவது மனைவி டி.ஏ. மதுரம் அவர்கள் சென்னையில் என்.எஸ்.கே. மறைவுக்கு பிறகு ஒரு காலகட்டத்தில் மிகவும் சிரமப்பட்டார். அவருக்கு தன் மனைவி ஜானகி அம்மாள் வழியாக அப்ப அப்ப வேண்டிய உதவிகளை செய்து வந்தார் இறக்கும் வரையில்.

அடுத்து, எம்.கே. தியாகராஜ பாகவதர் மறைவுக்கு பிறகு திருச்சியில் உள்ள அவரது குடும்பத்திற்கு அவர்களுடைய வீட்டிற்கு சென்று உதவி செய்து உள்ளார்.

அடுத்து பி.யு. சின்னப்பா அவர்களுடைய குடும்பம் புதுக்கோட்டையில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் புதுக்கோட்டைக்குச் சென்று உதவி செய்து உள்ளார். மக்கள்திலகம் அவர்கள் பொதுவாகவே பழைய நடிகர்களுக்கு, தனக்கு உதவி வேண்டும் என்று கேட்டால் உடனே, அவர்களுக்கு தகுந்தாற் போல் பல உதவி செய்வார். ஆனால், அவர்கள் குடி பழக்கம் உள்ளவர்களாக இருக்கக் கூடாது. இது போல கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் மறைந்த பிறகு அவரைப் போலவே நாகர்கோயிலை சேர்ந்தவர் சந்திரபாபு, இவர் சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபல நடிகரானவர், இவர் சொந்த குரலில் பாடி நடிப்பவர், சில படங்களில் மக்கள் திலகத்துடன் கூடசேர்ந்து நடித்து உள்ளார். இவர் பிரபலம் ஆனவர். ஆனால், இவரிடம் குடிபழக்கம் உண்டு. இதனால் உடல் நல குறைவு ஏற்பட்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இந்த சமயத்தில் மிகவும் சிரமப்பட்டார். இதை அறிந்த மக்கள் திலகம் அவர்கள் அவரை தன் வீட்டுக்கு அழைத்து பண உதவி செய்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s