28.கவிஞர் கண்ணதானுக்கு உதவி

இதை போல் பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஒரு சமயத்தில் குடும்ப சூழ்நிலையில் மிகவும் சிரமப்பட்டார். யாரிடம் உதவிகேட்டால் கிடைக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது அவருக்கு வேண்டிய ஒருவர் நம்ம மாதிரி ஆள்களுக்கு உதவி செய்ய கரங்கள் கொண்ட வள்ளல் ஒருவர் பரங்கிமலையில் இருக்கிறார். அவரிடம் உங்கள் குறைகளை சொல்லுங்கள் அவர் உதவி செய்வார். இதை கேட்ட கண்ணதாசன் அவர்கள், அய்யய்யோ வேண்டவே, வேண்டாம் அவரை நான் மிகவும் ஏசி பேசியுள்ளேன். நான் அவரிடம் போகமாட்டேன் என்று அவர் சொல்ல, இவர் சொல்கிறார், மக்கள் திலகம் அவர்கள் பெரிய வள்ளல் குணம் படைத்தவர், மறப்போம் மன்னிப்போம் என்ற குணம் உள்ளவர் அவரை தவிர உங்களுக்கு வேறு ஆளும் இல்லை எனவே எதையும் யோசிக்காமல் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில்விழுவோம் என்ற எண்ணத்தோடு போய் பாருங்கள் என்று அவர் சொல்லி முடித்துவிட்டார்.

இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பலவிதமான யோசனைக்குப் பிறகு ஒரு நாள் மக்கள் திலகம் அவர்களை சந்தித்து தன்னுடைய நிலமைகளை சொன்னார். அதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் சரி, உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். இதை கேட்ட கவிஞருக்கு ஒன்றும் புரியாமல் சற்று நேரம் திகைத்து போய் மவுனமாக இருந்துவிட்டார். ஏன் யோசிக்கிறீங்க என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கேட்க அவர் ரொம்பவும் தாழந்த குரலில் எனக்கு தற்போது இவ்வளவு பணம் இருந்தால் என் சிரமங்களை ஓரளவுக்கு முடித்துகொள்வேன் மன்னிக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார். இதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் எதையும் யோசிக்காமல் சரி நீங்க போங்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவரும் அரை குறை மனதோடு வீட்டிற்கு சென்று விட்டார். அடுத்த நாள் மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய மேனேஜர் குஞ்சப்பன் என்பவரை அழைத்து இந்த பணத்தை கண்ணதாசன் அவர்களிடம் நேரில் கொடுத்து விட்டு வாருங்கள் என்று சொல்ல அதன்படி அவரும் பணத்துடன் கண்ணதாசன் அவர்களை சந்தித்து பையில் இருந்து ஒரு பணம் பொட்டலத்தை எடுத்து இதை சின்னவர் உங்களிடத்தில் கொடுத்து வரசொன்னார் என்று பணத்தை கொடுக்க அவர் திகைத்து போய் அந்த பணம் பொட்டலத்தை அதே இடத்தில் பிரித்து பார்க்கிறார். பார்த்த உடனே, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று யோசித்த வண்ணத்தில் பணத்தை பெற்று கொண்டு குஞ்சப்பன் அவர்களுக்கு நன்றியை சொல்லி அனுப்பி விட்டு உடனடியாக மக்கள் திலகம் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அங்கு சென்று, மக்கள் திலகம் அவர்களைப் பார்த்து இரு கரங்களையும் பிடித்து கண்ணில் வைத்து கொண்டு தேம்பி ஆழ ஆரம்பித்துவிட்டார். தான் கேட்ட தொகையைவிட 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுத்துள்ளதை சொல்லி கொண்டே நான் இவ்வளவு தொகை தான் கேட்டேன். ஆனால் நீங்கள் மேற்கொண்டு அதிகமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளீர்களே நானும் என் குடும்பமும் என்றென்றும் கடமை பட்டவர்களாக இருப்போம் நீங்கள் எப்போதும், எந்த குறையும் இல்லாமல் இது போன்ற விஷயத்தில் வள்ளலாக வாழ வேண்டும் என்று கடவுளை வணங்குகிறேன் என்று சொன்னார்.

2 comments on “28.கவிஞர் கண்ணதானுக்கு உதவி

 1. chandru சொல்கிறார்:

  avar tamilnattukku arasar.

  ivar kavignargalukkellam arasar.

  avar nadippaalum,kolgaiyalum makkalai vendraar.

  ivar padalgalalum,kavithaiyaalum elloraiyum

  vendrar.avargal iruvarukkum thangalukku

  nigar thaangalethan enbathil entha vithamana

  santhegamum illai enbathu mattum unmai.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s