34.திருமணப் பத்திரிகை அடிக்காமல் திருமணம் செய்து கொண்டவர் மக்கள் திலகம்

மக்கள் திலகம் அவர்கள் திருமணங்கள் விஷயங்களில் வித்தியாசமானவராக நடந்து கொள்வார். ஆரம்பத்தில் தான் சினிமா காலத்தில் நடித்து கொண்டு முன்னேற்றம் அடையும் சமயங்களில் படபிடிப்பு நிலையத்தில் (ஸ்டூடியோ) பணியாற்றுபவர்களும் இவருடன் நடிக்கும் சக நடிகர்களும் அவர்களுக்கோ அல்லது அவர்கள் குடும்பத்துக்கோ திருமணம் நடந்தால் படமுதலாளி, இயக்குனர், மற்றும் இது போன்ற முக்கியஸ்தர்களுக்கு திருமண பத்திரிகை கொடுக்கும் போது எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் பத்திரிகை கொடுக்க தவறுவது இல்லை. இந்த மாதிரி கால கட்டத்தில் தனக்கு கொடுத்த பத்திரிக்கையை நன்கு படித்துவிட்டு, அதற்கு தகுந்த மாதிரி இவருடைய வசதிக்கு ஏற்ப பணம் கொடுப்பார். ஆனால் திருமணத்திற்கு போகமாட்டார். இதனுடைய முக்கிய தத்துவம் என்னவாக இருக்கும். சரி இவருக்கு முதல் திருமணம் கேரளாவில் நடக்கும் பொழுது இவர் அப்போது சினிமாவில் நடித்து கொண்டு இருந்தார். திடீர் என்று அவருடைய தாயாரும், அண்ணனும் திருமணத்திற்கு முடிவு செய்துவிட்டதால் இவருடைய திருமணமும் இதே போல் கேரளாவில் நடிந்தது. அடுத்த இரண்டாவது திருமணம் அதுவும் கேரளாவில் எளிமையான முறையில் நடந்தது. மூன்றாவது திருமணம் சென்னையில் இதே போல் எளிமையான முறையில் பதிவு திருமணம் செய்து கொண்டார். ஒரு மனிதனுக்கு திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது போல் ஒரு விஷயம் அவருடைய வாழ்நாளில் முதல் முதலாக நடந்த திருமண விழாவை காண்கிறார். திருமணம் என்பது ரகசியமாக ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் நடப்பது ஒரு காதல் திருமணமாகும். அதுவும் இந்த காலத்தில் மாறிவிட்டது. உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் சூழ வருகை தந்து நடக்கும் திருமண விழாவாகும். ஆனால் இது மக்கள் திலகம் அவருடைய வாழ்க்கையில் ஒன்று இரண்டு, மூன்று என்று திருமணம் அவருக்கு நடந்தது. ஆனால், அது மேலே குறிப்பிட்டது போல் நடைபெறவில்லை. பத்திரிகை அடிக்கவில்லை. பலரை சந்தித்து அழைக்கவும் இல்லை. இது அவருக்கு அவருடைய வரலாற்றில் முக்கிய விஷயமாகும்.

பிறகு, சினிமா துறையில் பிரபலம் அடைந்து இதே போல் அரசியலிலும் பிரபலம் அடைந்தபோது பலர் மக்கள் திலகம் தலைமையில்தான் திருமணம் நடத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு மக்கள் திலகம் அவர்களிடம் சொல்லி அனுமதி பெறுவதற்காக பல நாட்கள் அவர்கள் அலைவதும் உண்டு. இந்த மாதிரி எந்த விஷயத்திலும் ஒதுங்கி இருக்காமல் கலந்து கொள்வதுதான் சரியாகும் இது உன்னுடைய பெயருக்கும் புகழக்கும் மிக உயர்ந்ததாக இருக்கும். இந்த விஷயத்தை ஒரு முக்கியமானவர் மக்கள் திலகம் அவர்களிடம் சொன்னார்கள். அதன்படி மக்கள் திலகம் அவர்களும் இதை பற்றி யோசித்து பார்க்கும் போது நமக்கு இப்படி நடக்கவில்லையே அப்படி என்கிற எண்ணம் மனதில் இருக்காமல், இன்னும்நாம் உயர வேண்டிய நாட்கள் இருக்கிறது. இந்த மாதிரி முடிவுக்கு பிறகு தன் பெயரை பத்திரிகையில் இட்டு தன்முன்னிலையில் திருமணம் நடத்துபவர்கள் அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நன்கு அறிந்த பிறகு, தான் சம்மதத்தை கொடுப்பார். இதில் எப்படிபட்டவர்களாக இருக்கனும் என்ற ஒரு முறை உண்டு மக்கள் திலகம் அவர்களிடம் இதில் விதி முறைகள் என்ன,
1. திருமண குடும்பத்தார் வசதியில் நடுநிலை குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
2. காதல் திருமணமாக இருக்கக்கூடாது.
3. கோயிலில் திருமணம் நடத்தகூடாது.
4. திருமண மண்டபத்தில் ஐயர்களை வைத்து ஓம பூஜை நடத்த கூடாது.
இப்படிபட்ட திருமணங்களுக்கு தவறாமல் சென்று முன்நின்று நடத்தி வைப்பார். அது சமயம் மணமகனுக்கும், மணமகளுக்கும் தனி தனியாக பணம் கொடுத்து வாழ்த்துவார். அடுத்து சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, மிக ஆடம்பரமான முறையில் அதிக பணம் செலவழித்து திருமணம் நடத்துவார்கள் எப்படியாவது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இந்த திருமணத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு பலமுறை அவரே நேரில் சந்தித்து அழைப்பவர்களுடைய திருமணத்திற்கு வேறு வழி இல்லாமல் சென்று மணமக்களை வாழ்த்தி வருவார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s