40.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடந்து சென்ற இடங்கள் அந்த காலத்தில்

வால்டாக்ஸ் ரோடு to ராயப்பேட்டை, மைலாப்பூர் அடையார் ஸ்டூடியோ, கோடம்பாக்கம் ஸ்டூடியோ கீழ்ப்பாக்கம் ஸ்டூடியோ, மாம்பலம் சினிமா கம்பெனி, மெளவுண்ட் ரோடு ஸ்டூடியோ, (ஜெமினி) இந்த பூமியில் மண் உலகில் நான் ஏன் பிறந்தேன் தந்தை இறந்த பிறகு படிக்க வசதி இல்லை. பசிதீர சாப்பாடு இல்லை, தாய் படும் துயரத்தை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை பத்து வயதில் பட்டினியாய் இருக்க முடியவில்லை. வேலைக்கு போகலாம் என்றால் எனக்கு வேலை தர ஆள் இல்லை. பதினைந்து வயதில் ஒரு மகனும் 10 வயதில் ஒரு மகனும் இருக்கும் போது எங்களைப் பெற்ற தாய் வேலைக்கு செல்வதா அய்யோ நான் என்ன செய்வேன், எங்கே போவேன் என்று அழுது புலம்பிக்கொண்டு இருக்கும்போது எங்கிருந்தோ வந்தார் நாராயணன் என்ற எங்கள் குடும்ப உறவினர். நீங்கள் இருவரும் தயங்கவேண்டாம் என்னுடன் வாருங்கள். உங்கள் இருவருக்கும் நான் வேலை வாங்கி தருகிறேன் என்றார். அப்பவே அவருடன் சென்றோம். நாடகத்தில் நடிகனாய் நடித்தோம். மூன்று வேலை உணவு கிடைத்தது மூன்று ரூபாய் சம்பளமும் கிடைத்தது. இந்த உதவியை செய்த திரு. நாராயணன் அவர்களை எங்கள் உயிர் உள்ளவரையிலும் என்றென்றும் வணங்குவோம் என்றார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர் உள்ளத்தால் மக்களை கவர்ந்தவர் அஷ்டலெட்சுமி அனுக்கிரகம் கொண்டவர்.

மாவீரன் மக்கள் திலகம் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவில் சண்டைக்காட்சி இல்லாமல் நடித்தால், அது உப்பு இல்லாத சாப்பாடு போல, ஆனால், “என் தங்கை” 1952ல் சண்டைக்காட்சியே இல்லாத ஒரு படம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக நடித்தது.

வள்ளல் எம்.ஜி.ஆர். கண்ட கனவு

கடவுளே எனக்கு புகழை கொடு, நல்ல மனதையும் கொடு கடவுளே அப்படியே நல்ல உடலையும் கொடு என்றார். “நாடோ டி மன்னன்” படம் வெற்றி அடைந்தால் மன்னன் இல்லையென்றால் வெறும் நாடோ டிதான் இந்த எண்ணத்தோடு இந்த படத்தை 1957ல் தயாரித்தவர். இந்த படம் வெற்றி அடைந்து அவர் நினைத்தது நடந்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s