42.மக்கள் திலகம் நிறுவனத்தில் ஆர்.எம்.வீ.

ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்து கொண்டு இருக்கும் போது, நாம் இந்த மாதிரி சொந்தத்தில் நாடகங்கள் நடத்தனும். பிறகு, சினிமாவில் நடித்து கொண்டு இருக்கும் போது, நாம் சொந்தத்தில் படம் எடுக்கனும். சொந்தத்தில் வீடு கட்டணும், சொந்தமாக ஒரு ஸ்டுடியோ வாங்கனும் என்றெல்லாம் நினைத்தார். அவர் நினைத்தது எல்லாம் நடந்தது. இதில் முதலில் 1953ல் சொந்த நாடக கம்பெனி “எம்.ஜி.ஆர் நாடக மன்றம்”, ஆரம்பிக்கப்பட்டது. பிறகு அதே 1953ல் “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற பெயரில் சினிமா கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது. இந்த இரண்டு ஸ்தாபனத்திற்கம் திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்களை நிர்வாக பொருப்பாளராக நியமித்தார். ஆர்.எம்.வீ. அவர்கள் இந்த ஸ்தாபனத்தில் 1953ல் இருந்து முழுப்பொறுப்புடன் நிர்வாகித்து கவனித்து வந்தார். மக்கள் திலகம் அவர்கள் ஆர்.எம்.வீ அவர்களிடம் சிலமுக்கியமான விஷயங்களை கலந்து பேசுவதில் தவறுவதில்லை. ஆர்.எம்.வீ. அவர்கள் கம்பெனி வரவு செலவுகளை மிக திறமையுடன் கவனித்து மக்கள் திலகம் மனதில் இடம்பிடித்தார். ஆர்.எம்.வீ. அவர்கள் சுமார் 10 ஆண்டுகாலம், “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்” நிறுவனத்தில் பொறுப்பாளராக இருந்தார். இவருக்கு சம்பளம் 500 ரூபாய். சில சமயங்களில் மக்கள் திலகம் அவர்களிடமும் திரு. சக்கரபாணி அவர்களிடம் கணக்கு கேட்பார். இந்த கணக்கு விஷயத்தில் ஆர்.எம்.வீ. அவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டார். இவர் நாடகம், சினிமா, அரசியலில் மிகவும் அனுபவமுள்ளவர். இவர் ஒரு சமயம் மக்கள் திலகம் அவர்களிடம் 1963ல் நான் சொந்தத்தில் ஒரு படம் எடுக்கனும் அதில் நீங்களே நடிக்கனும். அந்த படத்திற்கு எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளனுமென்று வேண்டிக்கொண்டார். இதைகேட்ட மக்கள் திலகம் அவர்கள் உடனே சம்மதம் சொல்லிவிட்டார்.

பயந்து பயந்து கேட்ட ஆர்.எம்.வீ. அவர்களுக்கு, உடனே சம்மதம் கிடைத்ததை நினைத்து அளவற்ற ஆனந்தப்பட்டு அவருக்கு வேண்டியர்களிடமெல்லாம் இந்த விஷயத்தை சொல்லி ஒரு மாதத்தில் “சத்யா மூவிஸ்” என்ற பெயரில் சினிமா பட கம்பெனி தயாராகிவிட்டது. இந்த அலுவலகத்தை திறந்து வைக்க மக்கள் திலகத்தை அழைத்தார். அதன்படி அலுவலகத்தில் 1963ல் விளக்கு ஏற்றி வைத்து முதல் படத்திற்கு பூஜையும் நடந்தது. படத்தின் பெயர் “தெய்வத்தாய்”, நியாயம், சத்தியம், கடமை இவைகளை கொள்கை உள்ள ஆர்.எம்.வீ. அவர்களுக்கு இந்த படம் ஒரு சவாலாக இருந்தது. தமிழ் சினிமா துறையில் ஆர்.எம்.வீ. அவர்கள் முழுக்க முழுக்க மக்கள் திலகம் அவர்களுடைய கொள்கையை பின்பற்றுபவர். நல்லவர், இவரை நம்பி இந்த படத்தை தயாரிக்கிறேன். இது நிச்சயமாக எனக்கு வெற்றியையும், நல்ல முன்னேற்றமும் கிடைக்கும் என்று மனதிடத்துடன் அந்த படத்தை “சத்யா மூவிஸ்” தயாரித்தது. ஆர்.எம்.வீ. வெளியிட்டார். அந்த படம் 100 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. தொடர்ந்து மேலும் ஐந்து வெற்றி படங்களை தயாரித்தார். ஆனாலும் தொடர்ந்து மக்கள் திலகம் அவர்களிடமே பொறுப்பில் இருந்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s