1950க்கு மேல் தமிழ் சினிமா துறையில் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் போட்டி போட்டுகொண்டு நடித்தார்கள். இதே போல் ஒரு காலத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரும், பி.யு. சின்னப்பாவும் சினிமாத்துறையை ஒரு கலக்கு கலக்கினார்கள். இவர்களுக்கு பிறகு, மக்கள் திலகமும், நடிகர் திலகமும் இந்த இரு திலகமும் சேர்ந்து 1954ல் “கூண்டுகிளி” என்ற படத்தில் நடித்தார்கள். அந்த படம் வெளிவந்த பிறகு இரு திலகங்களுடைய ரசிகர்கள் திருப்தி அடையவில்லை. படமும் சரியாக ஓடவில்லை (100 நாள் ஓடவில்லை) அதில் இருந்து இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை. ஒரு தாயின் கையால் உணவு உண்ட இவர்கள் 1954க்கு பிறகு, மக்கள் திலகம் அவர்கள் அண்ணாவுடைய அன்பையும், நடிகர் திலகம் காமராஜர் அவர்களது அன்புக்கு உரியவர்களாக இருந்தார்கள். சினிமாவில் இந்த இருவருக்கும் பெரும் அளவில் மதிப்பு இருந்தது. ரசிகர்களும் மிக அதிக அளவில் உருவானார்கள். தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை இப்படி உலக நாடுகளிலும் ரசிகர் மன்றங்கள் ஏற்பட்டது.
இதே போல் அரசியலில் உயர்ந்து நின்றார்கள். இருவருமே தனது இல்லங்களுக்கு தாய் பெயரை சூட்டினார்கள். இவர்கள் இருவருக்கும் ராசியில் சற்று வேறுபாடு இருந்தது. ஆனால், ரசிகர்கள் ஒற்றுமை இல்லாமல் வளர்ந்து வந்தார்கள். சினிமாவில் இந்த ஒரு திலகங்களுக்கும் திரைக்கதைபடி முடிவில் இறக்கும்படி எம்.ஜி.ஆர். “மதுரை வீரன்” படத்தில் மாறுகால் மாறுகை வெட்டப்பட்டது. கட்டபொம்மன் படத்தில் சிவாஜிக்கு தூக்குமேடை அமைந்து இருந்தது. இதை எப்படி ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று வினவும் போது, படத்தின் கதை அம்சம் இவர்களுடைய நடிப்பு இதுதான் ரசிகர்களுக்கு முக்கியம். கடைசி காட்சியில் தியேட்டருக்குள் இருப்பது இல்லை. எப்படியோ அந்த இரு படமும் மிக அதிக நாள் ஓடி மிக மிக அதிகமான வசூலை கொடுத்தது. இப்படி இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உயர்ந்து வந்தார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் இடை இடையே சிறு சிறு சறுக்ககல்கள் ஏற்பட்டாலும், புகழ்கள் உயர்ந்து கொண்டே வந்தது. உலகம் அறிந்த இவர்கள் அண்ணன் முந்தியும், தம்பி பிந்தியும் இந்த உலகத்தை விட்டு மறைந்து விட்டார்கள். அவர்களின் புகழ்கள் மட்டும் மறையவில்லை இவர்கள் இருவரும் திரைஉலகுக்கு இரண்டு தூண்களாக இருந்தார்கள்.
very good and usful site old is gold
நன்றி நண்பரே!..