45.மக்கள் திலகம் விரும்பிக்கொண்டாடும் விழா

மக்கள் திலகம் மிக விரும்பி கொண்டாடும் விழாக்களில் ஒன்று தைப்பொங்கல் அன்று காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து 7 மணிக்கு குளித்து புத்தாடை உடுத்தி சூரிய நமஸ்காரம் செய்து, வீட்டு மாடியில் இருந்து கீழே உள்ள ஹாலுக்கு வந்து விடுவார். பொங்கல் வாழ்த்து சொல்ல வந்து இருப்பவர்களையும் பார்ப்பார். பிறகு, சாப்பாடு ஹாலில் பந்தி பாய் விறிக்கப்பட்டு தலைவாழை இலைபோட்டு நெய் மணக்கும் சர்க்கரை பொங்கலும், உளுந்து வடையும், மல்லிகைப்பூ இட்லியும், சட்டினியும், சாம்பாரும் இருக்கும். வள்ளல் வந்து இருப்பவர்களுடன் சமமாக அமர்ந்து சாப்பிடுவார். ஸ்பெசலாக ஐயர்கள் சமையலுக்கு வந்து இருப்பார்கள். அன்று ராமாபுரம் தோட்டத்தில் வேலை செய்து இருப்பவர்களுக்கு வேஷ்டி சட்டையும், புடவைகளையும் அதோடு, பணமும் இவர்கள் மாடிக்கு வரவழைத்து ஜானகி அம்மையார் கொடுப்பார்கள்.

அன்று தோட்டத்தில் திருவிழா போல் இருக்கும் அடுத்து சித்திரை தமிழ் வருடப்பிறப்பு அன்று மாடியில் அவருடைய ரூமில் பல தட்டுக்களில் நவதானியங்கள், தேங்காய் பழம் வகைகள் புதுவேஷ்டி சட்டை, புடவை நிறைய நகைகள் ஒரு ரூபாய் நாணயங்கள் இவைகள் எல்லாம் தாம்பூலத்தில் வைக்கப்பட்டு இருக்கும். வருடப்பிறப்பு காலை படுக்கையில் இருந்து எழுந்த உடன் தாம்புலத்தில் வைக்கப்பட்டுள்ள பொருள்களைத் தொட்டு கும்பிட்ட பிறகு, தான் மற்ற வேலைகள். அன்று காலை 8 மணிக்கு எல்லாம் கீழே ஹாலுக்கு வந்து விடுவார் இதற்குள்ளாக தோட்டத்தில் வேலை செய்பவர்கள் “சத்யா ஸ்டுடியோ”, “மாம்பலம் ஆபிஸ்” தலைமைக் கழகம் கட்சி ஆபிஸ் இவர்கள் எல்லாம் முன் கூட்டியே மாடிக்கு சென்று விடுவார்கள். காரணம் நாம் முதல்லே முதல் ஆளாக ஆசிர்வாதம் பெற்று விடனும் என்ற ஆர்வம். அதேபோல் வள்ளல் அவர்கள் ஆசிர்வதித்து பணம் கொடுப்பார். ரூ.100/- அன்றைக்கு வள்ளலைப் பார்க்க வந்து இருப்பவர்கள் எல்லோருக்கும் பணம் கொடுப்பார். அன்று காலை 10 மணி வரை இந்த திருவிழா நடக்கும் அதற்கு பிறகு சூட்டிங்குக்கு போய்விடுவார். அங்கு எந்த ஸ்டூடியோவில் எந்த இடத்தில் படப்பிடிப்பு நடக்குமோ அந்த இடத்தில் அது சமயம் படப்பிடிப்புக்கு உள்ள சக தொழிலாளர்கள் விபரம் தெரிந்தவர்கள் அன்று அண்ணே, தமிழ் புத்தாண்டு “எங்களை வாழ்த்துங்கள்” என்று வந்து நிற்பவர்களுக்கெல்லாம் வாழ்த்தி பணம் கொடுப்பார். அன்று மதிய சாப்பாடு படப்பிடிப்பு நிலையத்திற்கே தோட்டத்தில் இருந்து வந்து விடும். எப்போதும் அசைவ சாப்பாடு வரும். ஆனால், தை பொங்கல் தமிழ் வருடப்பிறப்பு மற்றும் வெள்ளிகிழமை சைவ சாப்பாடு கூட்டு பொறியல், உருளை கிழங்கு மசாலா, அவியல், கீரை ஊறுகாய், அப்பளம், பாயாசம், தயிர், சாம்பார், மோர் குழம்பு, ரசம் இத்தனை வகைகளுடன் 25 பேர்களுக்கு வரும். வாழை இலைபெரியதாக இருக்கும். இந்த விஷயம் வள்ளலுடைய வரலாறில் முக்கியமானது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s