47.மக்கள் திலகம் வருடத்திற்கு இரண்டு நாள் மவுனத்துடன் உண்ணாவிரதம் இருப்பார்.

அதாவது ஒன்று 1967 ஜனவரி 12ம் தேதி எம்.ஆர். ராதா மக்கள் திலகம் அவர்களை துப்பாக்கியால் சுட்ட நாள். அன்று காலை 6 மணியிலிருந்து மாலை 6 வரை பேசமாட்டார். சாப்பிடவும்மாட்டார். வெளியே எங்கும் செல்லவும் மாட்டார். அடுத்து 1969 மார்ச் மாதம் அறிஞர் அண்ணா இறந்தார். அன்று காலை சக தோழர்களுடன் அவருடைய சமாதிக்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செய்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவார். அன்றும் உண்ணாவிரதம் மவுன விரதம் தனக்கு அரசியல் ஆசானாக இருந்த அண்ணா நினைவு நாளன்று மக்கள் திலகம் மட்டும் தான் மவுனமாக சாப்பிடாமல் இருப்பார். இப்போ அப்படிப்பட்ட மகான் மறைந்த நாளன்று எவ்வளவோ பேர்கள் அன்று சாப்பிடாமல் மவுனமாக இருக்கிறார்கள். டிசம்பர் 24ந்தேதி அவருடைய நினைவுநாள் அன்று எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு காலை 6 மணிக்கெல்லாம் விளக்கேற்றி சிலைக்கு மாலைபோட்டு அன்று இரவு 9 மணி வரை சாப்பிட மாட்டேன். நான் எவ்வளவோ விசயங்களை மக்கள் திலகம் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். எனக்கு அந்த வள்ளல் பெருமான் தான் ஆசான்.

பெரியவர் எம்.ஜி.சி. சொன்னது

எங்கள் அப்பா மலையாளி அல்ல அவருடைய பூர்வீகம் தமிழ்நாடு கோவை மாவட்டம், காங்கேயம் ஆகும். மன்றாடியார் வகையை சேர்ந்தவர் கோபால மேனன் அல்ல. மருதூர் கோபாலன் தான் அவர் பெயர். இது ரெக்கார்டுபடி உள்ள பெயர் அவர் பாலக்காட்டுக்கு அடுத்து உள் வடவனூர் என்ற ஊரில் பிறந்தவர். அவர் பட்ட படிப்பு படித்தவர் நடுத்தர குடும்பம். தமிழ், ஆங்கிலம் மலையாளம் படித்தவர் சாதுவானவர் தர்மம், சத்தியம், நியாயம், அன்பு, பண்பு உள்ளவர். அவர் பாலக்காட்டில் துணைநீதிபதியாக வேலைபார்த்தவர். பிறகு, இலங்கை கண்டியில் ஆங்கில புரபசராகவும் மேஜிஸ்ட்ரேட் கோர்டில் நீதிபதியாகவும் வேலை பார்த்தவர். என்னையும் எனக்கு முன்பு பிறந்தவர்களையும் நல்லா இங்கிலீஸ் மீடியம். ஆங்கில பள்ளியில் சேர்ந்து படிக்க வைத்தார் எந்த கஷ்டமும் தெரியாமல் வளர்ந்தோம். பிறகு எனது தம்பி ராமச்சந்திரன் 5வது குழந்தையாக பிறந்தான். அவன் எங்களை விட ரொம்ப அழகாக இருப்பான். மிக சுறு சுறுப்பாகவும் இருப்பான். எங்க அப்பா வீட்டில் இருக்கும்போது அவனை தான் தூக்கி வைத்து கொண்டு கொஞ்சுவார். அவனுக்கு அவர்தான் ராமச்சந்திரன் என்று பெயர் வைத்தார். ஆனால், நாங்கள் எல்லோரும் “சந்திரா” என்று கூப்பிடுவோம். நல்ல செழிப்போடு இருந்த எங்கள் குடும்பத்தில் சனீஸ்வரன் நுழைந்து விட்டான். 1919ல் திடீரென்று எங்க அப்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். அப்பாவை இழந்த எங்களுக்கு ரொம்பவும் துயரமாகிவிட்டது. அம்மாவுக்கு அப்பாவுடைய இறப்பு ரொம்பவும் துயரமாகிவிட்டது. அவரையே நினைத்து கொண்டு எங்களை சரிவர கவனிக்கவில்லை. இந்த காலகட்டத்தில் என்னுடன் பிறந்த இரு சகோதர சகோதரியும் விசக் காய்ச்சல் ஏற்பட்டு இறந்து போய் விட்டார்கள். இந்த காலகட்டத்தில் எங்கள் தாயுடைய மனநிலை எப்படி இருந்து இருக்கும். என் அழகான தம்பியும் என் தாயோட துயரத்தையும் நினைத்து நான் அழுகாத நேரமே இல்லை. இந்த விசயத்தை 1976ல் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் அவருடைய ஒரு உற்ற நண்பரிடம் சொன்ன விசயம்.

நாங்கள் கஷ்டப்படுகிற காலத்தில் என்னிடம் தம்பி அடிக்கடி சொல்வான் கவலைபடாதீங்க அண்ணா, முன்னை போல் வாழ்ந்து காட்டுவோம். பெரிய பணக்காரங்க போல் நாமும் பணக்காரர்களாகி விடுவோம். நாங்கள் நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கும்போது மற்ற நடிகர்களிடம் தமாசுக்கு அடிக்கடி சொல்வான். நான் சொந்தத்தில் நாடகங்கள் நடத்தும் போது வாங்க நல்லவேசம் தருகிறேன். இப்படி எதையாவது தமாஷாக பேசுவான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s