52.40 ஆண்டு காலம் வாழ்ந்த மனைவி

வள்ளளுடைய வரலாற்றில் ஜானகி அம்மையார் ஒட்டி இணைந்து 40 ஆண்டு காலம் வாழ்ந்தவர் என்பது வரலாற்றில் 1957ல் திருமணம் நடந்ததில் இருந்து ஜானகி அம்மையார் தன் கணவருடைய ஒவ்வொரு அசைவுகளையும் மிகக் கவனமாக கவனித்து அவருடைய கொள்கைபடியே நடந்து வந்தார். ஜானகி அம்மையாரும் மக்கள் திலகம் போல் நாடகம், சினிமா இவைகளில் பிரசித்தி பெற்றவர். 1948ல் மக்கள் திலகத்துடன் திரைப்படக் கதாநாயகியாக நடித்தவர். (நாம், மோகினி, மருதநாட்டு இளவரசி) இதில் ஏற்பட்ட அனுபவம்தான் மக்கள் திலகத்தினுடைய கொள்கையை மிக எளிதில் தெரிந்து கொள்ள முடிந்தது. ஜானகி அம்மையார் மக்கள் திலகத்திற்கு மனைவியாகவும் (வாழ்க்கையில்) துணைவியாகவும் இருந்தார். பேச்சில் பண்பு இருக்கும். தர்மத்தில் தன் கணவரை மிஞ்சி இருப்பார். வெளியே சென்ற கணவர் வீட்டுக்கு வரும் போது என்ன மூடில் வருகிறார் என்பதை அறிந்து செயல்படக் கூடியவர். இவரை மக்கள் திலகம் “ஜானு” என்று தான் கூப்பிடுவார். மக்கள் திலகம் அவர்கள் மறைந்த பிறகு வள்ளல் வகித்த முதல் அமைச்சர் பதவியை ஜானகி அம்மையார் சில நாட்கள் வகித்தார். தமிழ் நாட்டில் முதல் பெண் முதல் அமைச்சர் என்ற பெருமையை பெற்றவர் வரலாற்றில் இது ஒரு முக்கிய விஷயம் இவர் 1996ல் மே மாதம் 19ந் தேதி மறைந்தார்.

மக்களால் தான் எனக்கு இந்த புகழ் கிடைத்தது

1982ல் மக்கள் திலகம் அவர்கள் தனது முக்கிய நண்பரும், அரசியல்வாதியும் ஒருவரிடம் பேசிக் கொண்டு இருக்கும்போது, அவரிடம் என்னுடைய உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைத்தது, உயர்வும் கிடைத்தது. மக்களுடைய பாராட்டுகளும், பரிசுகளும், ஆதரவும் அன்பும் கிடைத்தது. அவைகளையெல்லாம் விட மக்களுடைய ஆதரவும், புகழும்தான் பெரிது என்னை புரட்சி நடிகர், மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்ற புகழோடு இன்னும் மக்கள் என்னை ஒரு ஆளாக்கியதோடு நிற்காமல் இந்த நாட்டின் முதல்அமைச்சராகவும் ஆக்கினார்கள். 1956ல் நான் “மதுரை வீரன்” என்ற திரைப்படத்தில் நடித்தற்காக, மதுரையில் மாபெரும் அளவில் பாராட்டு விழா நடத்தி 100 பவுனில் ஒரு தங்கவாள் கொடுத்தார்கள். ஆனால், பாராட்டும், நடிப்பும் என்னைவிட புகழ்பெற்ற பெரிய நடிகர்கள் இருந்தார்கள் (கதாநாயகர்கள்) உதாரணத்திற்கு தியாகராஜ பாகவதர் நடித்த “அரிதாஸ்” என்ற திரைப்படம், பல தியேட்டர்களில் தொடர்ந்து வருடக் கணக்கில் ஓடியது. அதை எல்லாம் நினைக்கும் போது, நான் எம்மாத்திரம் எனக்கு தங்கத்தால், வெள்ளியால், வெண்கலத்தால் செய்து கொடுத்த பரிசுகளைவிட, மக்களால் கிடைத்த புகழ்தான் பெரிது. மக்கள் நான் நடித்த சினிமாக்களைப் பார்த்து, என்னைப் புகழ்ந்தார்கள். பிறகு, ரசிகர்கள் ஆனார்கள். அப்படிப்பட்ட அவர்களை எல்லாம் சந்தர்ப்பம், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை நானே நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன், சந்தித்தேன். அவர்களுடைய அன்பையும், ஆதரவுகளையும் பெற்றேன் இன்று நான் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளேன் என்றால், அது மக்களால்தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s