56.டாக்டர். எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்

மக்கள் திலகம் அவர்கள் மிக ஆர்வத்தோடு ராமாபுரம் தோட்டத்து வீட்டிலும், மாம்பலம் அலுவலகத்திலும் சேர்த்து வைத்துள்ள புத்தகங்கள் அதிகம் அதில் தமிழ் மட்டும் 3244 ஆங்கிலம் 674 புத்தகங்கள், இதில் (Encyclopaedia) என்சைக்ளோபீடியா போன்ற இன்னும் எத்தனையோ முக்கியமான புத்தகங்களும் இதில் அடங்கும், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் தமிழ் அகராதி இப்படி இன்னும் எத்தனையோ விதமான புத்தகங்கள் இருக்கின்றன. இவை “டாக்டர். எம்.ஜி.ஆர். நினைவு இல்ல”த்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதே போல் பழைய காலத்துப் பல நாட்டு நாணயங்களும், அதாவது 1763 ஆண்டு முதல் 1968 வரை உள்ள இந்தியா, இலங்கை, ரஷ்யா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், நார்வே, ஜெர்மனி, பிரான்ஸ், ஆகிய நாடுகளுடைய நாணயங்கள் சுமார் 100 நாணயங்கள் இதை மக்கள் திலகம் மிக ஆசையோடு பத்திரப்படுத்தி வைத்திருந்தார். இப்போது இந்த நாணயங்கள் நினைவு இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதே போல் அவர் (மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்) மிக மிக பிரியத்துடன் வளர்த்த சிங்கம், 1968ல் அவரது சொந்தப் படமான “அடிமைப்பெண்” நடிப்பதற்காக பாம்பேயில் இருந்து வாங்கி வந்த சத்யா ஸ்டியோவில் ஒரு பெரிய அளவில் கூண்டு அமைத்து, அதில் மாலை, இரவு நேரங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டார். அடிமைப்பெண் படத்தில் அந்த சிங்கத்தோடு சண்டை போடும் காட்சிப் படமான பின்பு மிருகக் காட்சி சாலையில் வைத்து இருக்கும் படி கொடுத்து விட்டார். அந்த சிங்கத்திற்கு வேண்டிய சாப்பாட்டு செலவுக்கான பணத்தை மாதாமாதம் மிருகக் காட்சி சாலைக்கு வழங்கி வந்தார். பிறகு, அந்த சிங்கம் 1974ல் இறந்து விட்டது. சிங்கம் இறந்த தகவலை உடனடியாக மக்கள் திலகத்திற்கு தெரியப்படுத்தினார்கள். இந்தச் செய்தியை கேட்டவுடன் மிருகக் காட்சி சாலைக்கு மக்கள் திலகம் சென்று பார்த்தார். பிறகு உடனே அந்த சிங்கம் உயிரோடு இருக்கும் போது எப்படி இருந்ததோ அதே போலவே “பாடம்” செய்து தர வேண்டும். எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்று மக்கள் திலகம் அவர்கள் கேட்டுக் கொண்டதின்படி, அந்த சிங்கத்தை பாம்பேயில் இருந்து நல்ல நிபுணர்களை வரவழைத்து, அவர் விரும்பியபடியே மிகப் பிரமாதமாக அமைத்துக் கொடுத்தனர். உயிர் இல்லாத அந்த சிங்கத்தை தனது ராமாபுரம் தோட்டத்து வீட்டில் ஒரு பெரிய கண்ணாடிக்குள் அந்த சிங்கத்தை வைத்து மக்கள் திலகம் அவர்கள் மாடிக்குச் செல்லும் வழியின் கீழ்ப்பகுதியில் வைத்திருந்தார். மக்கள் திலகம் அவர்கள் வெளியே போகும் போதும், வரும் போதும் அவருடைய பார்வைக்குப்படும் படியாகவும் வைத்திருந்தார்.

பின்னர் மக்கள் திலகம் அவர்கள் மறைவுக்குப் பின்னர் அந்த சிங்கம் உட்பட தோட்டத்து வீட்டில் இருந்த எல்லா பொருட்களையும் இந்த நினைவு இல்லத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டது. நினைவு இல்லத்தில் மக்கள் திலகம் பெற்ற ஆயிரக்கணக்கான பரிசுப் பொருட்களுடன் அவர் உபயோகப்படுத்திய பொருட்களும், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் அவர் மிகவும் விரும்பி சுமார் பத்து வருடங்களாக உபயோகப்படுத்திய அம்பாசிடர் காரும், மற்றும் 7அடி நீளம், 4 அடி உயரம். பெயர் ராஜா என்ற சிங்கமும் நினைவு இல்லத்தில் மிக முக்கியமான பொருட்களாகப் பார்வையாளர்களுக்கு காட்சியளிக்கின்றன. இந்தக் கட்டிடமானது 1970ல் இருந்து 1987வரை அலுவலமாக இருந்தது. இந்த கட்டிடம் வள்ளலுக்கு ராசியான ஒன்றாகும். அதனால் தான் அவருக்குப் பிறகு, இதை நினைவு இல்லமாகத் தொடங்க வேண்டும் என்று அவரே எழுதியிருக்கிறார். இந்தக் கட்டிடம் தற்போது உலகம் முழுவதும் தெரிந்த ஒரு இடமாகி உள்ளது.

மக்கள் திலகம் அவர்கள் அவர்களுடைய சுய சம்பாதியத்தில் வாங்கிய சொத்துக்களில் முக்கியமாக, “ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டம்”, அடையார் சத்யா ஸ்டூடியோ இவை இரண்டும் அவருக்கு மிக முக்கியமான சொத்துக்கள் ஆகும். இதில் அவர் வாழ்ந்த இடம் ராமாபுரம் தோட்டத்தின் ஒரு பகுதியில் காது கேளாத, வாய்பேச இயலாத குழந்தைகளுக்காக பெருமளவில் தங்கிப் படிக்கும் வசதியோடு உணவோடு பள்ளிக்கூடம் கட்டப்பட்டு, அந்தப் பள்ளியில் 300 குழந்தைகள் படிக்கிறார்கள். அடுத்து அவர் சொந்தமாக வாங்கிய மிகப் பிரபலமாகவும் விளங்கிய அடையாறு சத்யா ஸ்டூடியோவில் “எம்.ஜி.ஆர். ஜானகி பெண்கள் கலைக்கல்லூரி” என்ற பெயரில் மிகப் பிரம்மாண்டமாக இயங்கி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் இக்கல்லூரியில் படிக்கிறார்கள். மங்காத புகழ் பெற்ற மக்கள் திலகம் அவர்களது வரலாற்றில் இது ஒரு சான்றாகும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s