60.கொட்டும் மழையில் மக்கள் திலகம்

மக்கள் திலகம் அவர்கள் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு மக்களுடைய குறையைக் கேட்கிறார். 1978ல் சென்னையில் கோட்டூர்புரம் என்ற இடத்தில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்கு மாடி வீடுகள் நடுத்தர மக்கள் வசிக்கும் இடம் இது. மற்றும் குடிசை வாசிகள் வீடுகள் அதிகமாக உள்ளது. இந்த இடத்திற்குப் பக்கத்தில் சைதாப்பேட்டை வழியாக அடையாருக்குப் போகும் இந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அது சமயம் வெள்ளம் இந்த ஊருக்குள் புகுந்து விடும் இது வழக்கம். மக்கள் திலகம் அவர்கள் முதல் அமைச்சரான பிறகு, இப்படி மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது இது ஊருக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. இந்த செய்தியை அறிந்த முதல் அமைச்சர் உடனடியாக அந்த இடத்திற்கு சில முக்கிய அதிகாரிகளுடன் அந்த இடத்தை பார்வை இட்டார். அது சமயம் மழை பெய்து கொண்டே இருந்தது. அதை பொருட்படுத்தாமல் பொது மக்களுக்கு ஏற்பட்ட சேதத்தையும் அவர்களுக்கு உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை கவனித்தது மட்டுமல்லாமல், இனிமேல் இப்படி இந்த ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகாத வண்ணம் தடுப்புச்சுவர் கட்டும்படி உத்தரவு இட்டார். காலதாமதம் செய்யாமல் தடுப்புச் சுவரும் விரைவாக கட்டப்பட்டது. அந்தப் பகுதியல் வசிக்கும் மக்களுக்கு இந்த வெள்ளப் பெருக்கு பற்றிய கவலை அறவே ஒழிந்தது. இப்படிப் பட்ட வள்ளல் வசிக்கும் ராமாபுரம் தோட்டம் வீட்டுக்குள்ளும் இதே ஆற்று வெள்ளம் புகுந்தது வெள்ளத்தின் சீற்றத்திற்கு இவர் யார், அவர் யார் என்று பாகுபாடு கிடையாது. 1985ல் மக்கள் திலகம் அவர்கள் மூன்றாவது முறையாக முதல் அமைச்சர் ஆன பிறகு, அந்த வருடம் மழை தமிழ்நாட்டில் மிக அதிகமாக பெய்தது. சென்னையிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் ஒரு வாரமாக ஓயாத பெரும் அளவில் மழைபெய்தது. அது சமயம் எம்.ஜி.ஆர். தோட்டம் அருகில்தான் அந்த சைதாப்பேட்டை ஆறு போய்க் கொண்டிருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஒரு சிறிய ஆறு அது எம்.ஜி.ஆர். தோட்டத்தை ஒட்டியவாறு செல்கின்றது. இந்த இரு ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எந்த வருடத்திலும் இல்லாத அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு கண்மூடித் தனமாக சென்று இரவு நேரத்தில் மக்கள் திலகம் வசிக்கும் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்குள் புகுந்து, அது மேலும் அதிகமாகி வெள்ளம் வீட்டிற்குள்ளேயும் புகுந்துவிட்டது. தோட்டத்தில் உள்ள ஆடு, மாடு, கோழி, குருவிகள், தோட்டத்தில் வேலை செய்பவர்கள் நிலைமை என்ன ஆகி இருக்கும்.

மக்கள் திலகம் அவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அமெரிக்காவிற்கு சென்று வைத்தியம் பார்த்து உடல் நலம் பெற்று, சென்னைக்கு வந்து மூன்றாவது முறையாக முதல்-அமைச்சர் பதவி ஏற்ற பிறகு, இனிமேல் முன்போல் நீங்கள் ரொம்பவும் சிரமங்களை எடுத்துக் கொள்ளாமல் இருக்கவேண்டும். அதிகமாக உணர்ச்சிவசப்படக் கூடாது இப்படி சில விஷயங்களை சொல்லி உள்ளார்கள் டாக்டர்கள் அப்படி இருந்தும் மக்கள் திலகம் அவர்கள் முன்போலவே அரசுப் பணிகளையும், அரசியலையும் கவனிக்க தவறவில்லை. தனக்கு ஒரு தலைவலி, காய்ச்சல் கூட வரக்கூடாது என்று நினைக்கும் வள்ளலுக்கு, அமெரிக்காவில் போய் வைத்தியம் பார்க்கும் அளவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட்டதே என்று நினைத்து அவர் எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பார். ஆனால், அவருடைய வாழ்க்கையில் இம்மாதிரி வேதனைகளையும், சோதனைகளையும் சந்தித்து பழகிப் போனவர். ஒரு உதாரணம் இவருடைய தந்தை கோபாலன் அவர்கள் இறந்து போனவர் இவருக்கு முன்னால் பிறந்த இரு சகோதரிகளும், ஒரு சகோதரரும் நோயால் இறந்து போனவர்கள். பிறகு, தான் ஒரு சினிமா நடிகர் ஆனதும், அது சமயம் இவருக்குத் திருமணம் ஆகி, அந்த மனைவி ஒரு வருடத்திலேயே இறந்து போனதும், அடுத்து தன்னுடைய இரண்டாவது மனைவி, சில வருடங்களில் உடல் நலமில்லாமல் இறந்து போதும், இதைவிட தன்னை தங்கமகனே! நீ இந்தத் தரணியில் நீ ஒரு தனி மனிதனாக புகழோடு வாழவேண்டும் என்று தன்னுடைய தாய் அடிக்கடி சொல்வார். அந்தத் தாயும் சிலமாதங்கள் உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனார். பிறகு தாய்க்குத் தாயாகவும், தந்தைக்குத் தந்தையாகவும் தனக்கு உறுதுணையாக இருந்து, தன்னுடன் பிறந்த அண்ணனும் இறந்து போனார். இப்படி இவைகளை எல்லாம் தாங்கிக் கொண்டு இருக்கும் இதயத்திற்கு தன் வீட்டுக்கு தண்ணீர் புகுந்து விட்டதை அறிந்து ஆச்சரியப்பட்டாரே தவிர, கவலைப்படவில்லை. வீட்டிற்குள் வெள்ளம் புகுந்த விஷயத்தை அறிந்த மக்கள் திலகம் அவர்கள், மேலே இருந்து உடனே கீழே வந்து விட்டார். அது சமயம், கீழே வீடு முழுவதும் ஒரு அடி தண்ணீர் நின்றது. உடனே வேட்டியை தூக்கி மடித்து கட்டிக்கொண்டு, வெளியே தோட்டத்தில் தண்ணீர் நிற்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

தன்னுடைய பாதுகாப்பாளர் (போலீஸ்) அவரை அழைத்து வேலை ஆட்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் கூப்பிடுங்கள். இரவில் அவர்களுடைய வீட்டுக்குப் போகாமல், தோட்டத்திலேயே தங்குபவர்கள் ஏழு பேர்கள் இருந்தார்கள். அவர்களை எல்லாம் மேலே போய் இருக்கச் சொல்லுங்கள். நீங்களும் மேலே போய் இருந்து கொள்ளுங்கள். ஆடு, மாடுகள் எல்லாம் என்ன ஆச்சு? இப்படி தண்ணீருக்குள் நின்று, தன்னுடைய தோட்டத்திற்கு 1962-ல் குடிவந்த பிறகு, அதாவது 1985 நவம்பர் மாதம் 25 வருடம் ஆகிவிட்டது. இப்படி ஒரு வெள்ளம் தோட்டத்திற்குள் புகுந்தது இல்லை இதுவும் ஒரு சோதனையா என்று பெருமூச்சு விட்டார் இதைபிறகு மற்றவர்களிடமும் சொன்னார். அடுத்தநாள் தோட்டத்திற்குள் புகுந்த தண்ணீர் குறைந்த பாடில்லை. மேலும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. மக்கள் திலகம் அவர்களை, உடனே தோட்டத்தில் இருந்து சென்னை நகருக்குள் ஒரு நல்ல ஒட்டலில் தங்க வைக்க வேண்டும் என்று அதிகாரிகளும், மற்ற மந்திரிகளும் முடிவு எடுத்து, மக்கள் திலகம் அவர்களை தோட்டத்தில் இருந்து அழைத்து வரலாம் என்றால் அவருடைய கார்கள் அனைத்தும் தண்ணீருக்குள் நிற்கிறது. அதனால் அரசாங்கக் காரில் புறப்பட்டார் ஜானகி அம்மாளுடன், மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் தங்க வைத்தார்கள். பிறகு, அங்கிருந்து கொண்டே கோட்டைக்குச் சென்று, வெள்ளநிவாரணப் பணிகளை கவனித்தார். சென்னையில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள குடிசை வீடுகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. நிவாரணப் பணிகள் மிக மிக விரைவாக செயல்படுத்தப்பட்டது. ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்குள் புகுந்த வெள்ளம் வடிவதற்கு மூன்று நாட்கள் ஆகியது. தோட்டத்திற்குள் இருந்த ஆடு, மாடு, கோழிகளுக்கு எதுவும் பாதிப்பு இல்லாமல் அனைத்தும் காப்பாற்றப்பட்டது. தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு ஓட்டலில் இருந்து சாப்பாடு வரவழைக்கப்பட்டது.

தோட்டதிற்குள் புகுந்த தண்ணீர் வெளியேறிய பிறகு, வீட்டுக்குள் புகுந்த சில பாம்புகளை அடித்துவிட்டு, வீட்டைக் கழுவி, சுத்தம் செய்ய மூன்று நாட்கள் ஆகிவிட்டது. ஆக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு வாரம் ஓட்டலில் தங்க வேண்டியதாகிவிட்டது. ஒரு முதல்-அமைச்சருக்கே இந்த கதி என்றால் தமிழ் நாட்டின் ஏழை மக்களுடைய நிலைமை எப்படி இருந்து இருக்கும். மக்கள் திலகம் அவர்களுடைய வரலாற்றில் இதுவும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி ஆகும். மழையில் நனைந்து கொண்டு, மக்கள் குறைகளை கேட்டு அறிந்து, அவர்களுக்கெல்லாம் நிவாரண உதவிகளை செய்ய ஏற்பாடு செய்த, அந்த முதல்வருடைய வீட்டுக்குள் பெரும் வெள்ளம் புகுந்து, அவர் வெளியே வரமுடியாமல் இருந்ததை என்னவென்று சொல்வது.

2 comments on “60.கொட்டும் மழையில் மக்கள் திலகம்

  1. துரை.வேலுமணி சொல்கிறார்:

    தானை தலைவர் தங்கிய hotle-லின் பெயர் கன்னிமாரா என்று நினைவு. சரியா?. அந்த நிகழ்வுக்குப்பின் இயற்றப்பெற்ற பாடல் தான் “வெள்ளம் வந்த போது, அங்கே வெள்ளம் போல் ஓடி வந்து ……..” என்ற வரிகளை தாங்கிய பாடல்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s