62.மக்கள் திலகம் அவர்களுக்கு கிராமியக் கலைகள் மிகவும் பிடிக்கும்

பொதுவாகவே மக்கள் திலகம் அவர்களுக்கு கிராமிய கலைகளில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் போன்றவை மிகவும் பிடிக்கும். இதில் குறிப்பாக சிலம்பாட்டம் இதை அவரே பிரமாதமாக ஆடுவார். இதே போல், கர்நாடக சங்கீதத்தில் இசைக்கச்சேரி வகையில் நாதஸ்வரம், வயலின், வாத்தியம் போன்றவைகள் ஆகும். மாண்டலின் இசை கருவியை பத்து வயது பையன் பெயர் மாஸ்டர் சீனிவாசன் ரொம்பவும் பிரமாதமாக வாசிப்பான் இவனுடைய கச்சேரி சபா மேடைகளில் நடந்தது. இப்படி ஒரு சிறுவன் டி.வி.யிலும் மாண்டலின் வாசிக்கிறான் கச்சேரிகளும் செய்கிறான் என்பதைக் கேள்விப்பட்ட தமிழக முதல்அமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள், 1983ல் சென்னையில் கலைவாணர் அரங்கில் மாலை 6.00 மணிக்கு இந்தப் பையனுடைய கச்சேரி நடந்த சமயம் மக்கள் திலகம் அவர்கள் அந்தக் கச்சேரியைப் பார்த்து ரசித்தார். சுமார் 1 மணி நேரம் கச்சேரி நடந்தது. கச்சேரி முடிந்தவுடன் மேடைக்கு வந்து பையனை தட்டிக் கொடுத்து பாராட்டி வாழ்த்திப் பேசிவிட்டு தன்னுடைய ஜிப்பாவின்பையில்வைத்திருந்த 4 பவுன் எடை உள்ள தங்க மைனர் செயினை (சங்கிலி) அவனுடைய கழுத்தில் போட்டு சென்றார்.

இதேபோல் 1976ல் ஒரு முக்கியஸ்தர் குடும்பத் திருமணத்திற்கு மாலை வரவேற்பு விழாவிற்காக 7 மணிக்கு சென்னையில் ராஜேஸ்வரி திருமண மண்டபத்திற்கு சென்றார். அங்கு ஏ.வி. ரமணன் மெல்லிசை பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அந்தக் கச்சேரியில் ஏ.வி. ரமணன் என்பவர் பாடிக்கொண்டு இருந்தார். திருமண வரவேற்பு விழாவிற்கு வருகை தந்துள்ள மக்கள் திலகம் அவர்கள் மணமக்களைப் பார்த்து ஆசிர்வாதம் செய்து, அவர்களுக்குப் பரிசுப் பொருள்களைக் கொடுத்துவிட்டு கச்சேரி நடக்கும் மேடைக்கு அருகில் போய் அமர்ந்து விட்டார். இதைப்பார்த்து பலவிதமான பாட்டுக்களைப் பாடிக்கொண்டு இருக்கும் ரமணன் அவர்கள் மேடையை விட்டு இறங்கி வந்து கலைத்துறை அரசரின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு எதுவுமே பேசாமல் மேடைக்கு சென்று பாடத் தொடங்கிவிட்டார். இடைவெளியே இல்லாமல் அடுத்தடுத்து தொடர்ந்து பாடிக்கொண்டு இருக்கையில், அந்தப் பாடல்களை ரசித்துக் கொண்டிருந்த கலை அரசருக்கு நேரம் போனதே தெரியவில்லை.

இதை கவனித்த பாடகர் ரமணன் அவர்கள் பாடுவதை நிறுத்தினார். உடனே மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய, வாட்சில் நேரத்தைப் பார்க்கிறார் நேரம் 8.45 ஆக இருந்தது ஆச்சர்யத்துடன் பின்னாடி திரும்பிப் பார்த்தார் எல்லோரும் அமைதியாக இருந்தார்கள் மண்டபம் நிறைந்து இருந்தது. இந்தத் திருமண விழாவிற்கு வந்தவர்கள் எல்லோரும் முன் வரிசையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் அமர்ந்து பாட்டுக் கச்சேரியைக் கேட்டு கொண்டு இருக்கிறார் என்பதை அறிந்தவர்கள் சாப்பாட்டு ஹாலுக்கும் செல்லாமல் திரும்பி வீட்டுக்குப் போகாமல் வந்தவர்கள் எல்லாம் அமர்ந்து விட்டார்கள். பிறகு, மக்கள் திலகம் பாட்டுக்களைப் பாடிய ரமணனையும், இசை வாத்தியங்கள் வாசித்தவர்களையும் பாராட்டிப் பேசிவிட்டு, ரமணன் அவர்களுக்கு, தன் கையிலே கட்டியிருந்த விலையுயர்ந்த வாட்சை கழற்றி ரமணன் கையிலே அவரே கட்டி வாழ்த்திச் சென்றார் என்பது மிக ஆச்சர்யத்திற்குள்ள விஷயமாக இருந்தது எல்லோருக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s