64.வள்ளல் வாழ்ந்த இறுதி ஆண்டில் அவரின் வித்தியாசமான அணுகுமுறைகள்

ஜானகி ராமனாக, ஜானகி அம்மையுடன் எம்,ஜி.ராமச்சந்திரன்

இதில் ஒரு முக்கிய விஷயம் 1917ம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்த அவர் 1987ம் ஆண்டில் சில முக்கிய குறிப்பிடத்தக்கக்கூடிய விஷயங்களில் கலந்து கொண்டு செயல்பட்டுள்ளார். குறிப்பு 1987 ஜனவரி 1ந் தேதி, ஆங்கில வருடப்பிறப்பன்று, எப்போதுமே “ஆப்பி நியூ இயர்” என்று சொல்லாதவர் இந்த வருடம் பலரிடம் ஆப்பி நியூ இயர் என்று சொல்லி வாழ்த்தி இருக்கிறார் ஏப்ரல் மாதம் 14ந் தேதி சித்திரை தமிழ் வருடப்பிறப்பன்று எப்போதுமே இல்லாத அளவிற்கு மிகச் சிறப்பாக கொண்டாடினார். அன்று காலை 6 மணிக்கெல்லாம் சூரிய நமஸ்காரம் செய்து விட்டு புத்தாடை உடுத்தி ஜானகி அம்மையாருடன் தன்னுடைய தாயின் உருவம் பொதித்த டாலர் (மைனர் சங்கிலி) அணிந்து கொண்டார்.

அன்று மக்கள் திலகம் அவர்களை காண வந்தவர்களுக்கெல்லாம் 100 ரூபாய் நோட்டு தான். பிறகு, அன்று மக்கள் திலகம் அவர்களிடம் வாழ்த்து பெற வந்தவர்கள் எல்லாம் போன பிறகு மேலே தன்னுடைய ரூமுக்கு சென்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தன்னுடைய தோட்டத்தில் வேலை செய்கிற தொழிலாளர்கள் அத்தனை பேரையும் தனித்தனியாக மேலே அவர் அமர்ந்து இருக்கும் இடத்திற்கு வரவழைத்து அவர்கள் தன்னிடம் எத்தனை வருடமாக வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு அதற்கு தகுந்தாற்போல் அவர்களுக்கு நல்லதொரு தொகையை காகிதத்தில் மடித்து பொட்டலமாக கொடுத்தார். பணப் பொட்டலத்தை பெற்றுக் கொண்ட தொழிலாளர்கள் மக்கள் திலகம் காலை தொட்டு வணங்கி ஆனந்த கண்ணீருடன் மன மகிழ்ச்சியோடு சென்றார்கள். பிறகு அந்த வருடம் அவரிடம் உதவி கேட்டு வந்தவர்களை எல்லாம் அவர்களுடைய நிலைமையை அறிந்து பண உதவிகளை செய்தார். இதை போல் தான் அந்த வருடம் மே மாதம் நடிகர் சத்யராஜ் அவர்கள் தங்கைகளுடைய திருமணத்திற்கு யாருக்கும் சொல்லாமல் விளம்பரம் இல்லாமல் கோயம்புத்தூருக்கு போனார்.

One comment on “64.வள்ளல் வாழ்ந்த இறுதி ஆண்டில் அவரின் வித்தியாசமான அணுகுமுறைகள்

  1. யாழ் சொல்கிறார்:

    மாமனிதனின் வரலாறு படிக்கத் திகட்டாத ஒரு அற்புதம். ஆயிரமாயிரம் நடிகர்கள் முதல்வர்கள் வநதாலும் மக்கள் திலகம் என் இதயக்கனி அவர்களின் இடத்தை யாராலும் நெருங்க முடியாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s