65.உணவு விஷயத்தில் வள்ளலின் மனித நேயம்

1977ல் மக்கள் திலகம் முதல் அமைச்சர் அன பிறகு, முதல் அமைச்சருக்கு ஒரு தனி அதிகாரி உதவியாளர், ஒரு துணை உதவியாளர், ஒரு போலீஸ் அதிகாரி, செகரட்டரி ஆபிசர் இவர்கள் தினமும் காலை முதல் அமைச்சர் அவர்களுடைய வீட்டுக்கு வந்து விடுவார்கள். அன்று முழுவதும் முதல்வர் கூடவே இருப்பார்கள். இரவு வீட்டிற்கு போய்விடுவார்கள் இது வழக்கம். இவர்களுக்கு காலை – மதியம் சாப்பாடு முதல்வர் கூடவே சாப்பிடுவார்கள். மதியம் முதல்வர் கோட்டையில் அல்லது மாம்பலம் ஆபிசில் இவர் எங்கே இருக்கிறாரோ அங்கே சாப்பாடு வந்து விடும். சுமார் 20 பேர்கள் சாப்பிடும் அளவிற்கு சாப்பாடு வரும். அசைவமும், சைவமும் இருக்கும் அன்று மதியம் மாம்பலம் ஆபிசுக்கு சாப்பாடு கொண்டு வர சொன்னோம் அன்று முதல்வருடன் சில மந்திரிகள் இருந்தார்கள். மதியம் 2 மணி ஆகிவிட்டது பந்தி பாய் விரித்து தலை வாழை இலை போட்டு சாப்பாடு பரிமாறப்பட்டது. அன்று கறி வருவல், கறி கோலா உருண்டை, முட்டை, மசாலா, கூட்டு, பொறியல், கீரை, சாம்பார், ரசம், ஊறுகாய், தயிர்.

முதல்வர் மற்ற 3 அமைச்சர்கள் மேலே இருந்தார்கள் கீழே அதிகாரிகள் இருந்தார்கள் சாப்பாடு பறிமாறியதும் முதல்வரிடம் சாப்பாடு ரெடி என்றேன். சாப்பாடு ஹாலுக்கு வந்த முதல்வர் கீழே இருக்கும் அதிகாரிகளையும் சாப்பிட அழைத்து வரச்சொன்னார். நான் கீழே சென்று பசியோடு அமர்ந்து இருந்த தனி அதிகாரி, ஐ.ஏ.எஸ். இவர் தனி உதவியாளர், அடுத்து துணை அதிகாரி, காவல் துறை செகரட்ரி, இவர்கள் மூவரையும் மேலே வாருங்கள் சாப்பிட அழைக்கிறார் முதல்வர் என்றேன்.

அவர்களுக்கு இப்படி நான் சொன்னது மிக ஆச்சரியமாக இருந்தது மேலே வரவே யோசித்தார்கள் அதிலே ஒருவர் வர மறுத்தார் நான் உடனே ஐயா, சீக்கிரமாக வாங்க காத்துகிட்டு இருக்காங்க என்றதும், அச்சத்துடன் மேலே வந்தார்கள் அவர்களை பார்த்து முதல்வர் வாங்க வாங்க சாப்பிடுவோம் என்றார். இவர்கள் வரும் வரை முதல்வரும் மற்ற அமைச்சர்களும் சாப்பிடாமல் காத்து இருந்ததை அறிந்த இவர்கள் மிக ஆச்சர்யத்துடன் அமர்ந்தார்கள். இதில் செகரட்டரி நான் சைவம் என்றார். அடடே அப்படியா, முத்து! அவருக்கு வேற இலை போட்டு கரண்டியை கழுவி விட்டு பரிமாறு என்றார். இனிமே சைவ அயிட்டங்கள் எல்லாம் தனி கேரியரில் வரவேண்டும் என்றார் முதல்வர். இந்த சொல்லை கேட்ட அந்த சைவ உணவு சாப்பிடும் அதிகாரி உடனே சார், அதெல்லாம் வேண்டாம் இப்போ சைவமும் அசைவமும் தனித்தனி பாத்திரங்களில் தான் இருக்கு இதுவே போதும் சார் என்றார். இந்த மூன்று பேரும் தலையை குனிந்து கொண்டே சாப்பிட்டார்கள் முதல்வரும் மற்ற அமைச்சர்களும் சாப்பிடுவதை கவனிக்கத் தவரவில்லை சாப்பாடு வகைகள் சாப்பிடும் முறைகளைப் பற்றி அந்த தனி அதிகாரி பிறகு என்னிடம் கேட்டார் என்ன முத்து எப்போதுமே இப்படித்தானா என்றார். உடனே, நான் வெள்ளிகிழமை அன்று மதிய சாப்பாடு முழுக்க முழுக்க சைவ சாப்பாடு தான் அன்று ஸ்பெசல் உருளை கிழங்கு மசாலா, அவியல், பாயாசம் அப்பளம் இருக்கும் என்றேன்.

இதை கேட்ட அவர் என்னை விடவில்லை, முத்து, ஒரு விசயம் முதல்வர் அவர்கள், மனித நேயத்துடன் நடந்து கொள்கிறார். எல்லோரும் சமம் என்று நினைப்பவர் அவர் மனித நேயமுள்ள நல்லவர் பல பட்டங்களை ஏற்கனவே பெற்றவர் இப்போ தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் அவருக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள் அவருடன் சமமாக அமர்ந்து சாப்பிடுவது சரி இல்லை, முறையும் இல்லை. இப்படி நாட்டில் உள்ள எந்த முதல் அமைச்சரும் தன்னுடைய தனி அதிகாரிகளை தன்னுடன் அமர்ந்து சாப்பிட சொல்ல மாட்டார்கள் அப்படி சொன்னதாக சரித்திரமே இல்லை, நான் மிக சுருக்கமாக சொல்கிறேன். மேலும் தொடராமல் பார்த்துக் கொள்ளவும். நாங்கள் அவருடைய சாப்பாட்டை சாப்பிட பாக்கியம் செய்து இருக்கவேண்டும் எனவே இனிமேல் நாங்கள் கீழ்தளத்திலேயே சாப்பிட ஏற்பாடு செய்யவும். இது உன்னால் முடியும் என்றார் அதன்படி, அடுத்த நாளே இந்த விசயத்தை நான் மக்கள் திலகம் அவர்களிடம் மிகவும் பக்குவமாக சொன்னேன். இதில் எனக்கு மிக உதவியாக இருந்த சொல் அண்ணே, அவுங்க தனியாக கீழே சாப்பிட்டால் அவர்கள் மனம் போல் கூச்சம் இல்லாமல் சாப்பிடுவார்கள் அவுங்க இவ்வளவு ருசியோடு பல வகைகள் உடன்சாப்பிடுவதைப் பற்றி மிகப்பொருமையாக நினைக்கிறார்கள். பேசி கொள்கிறார்கள் என்றதும், அப்படியா சரி சரி சாப்பாட்டில் அவுங்க அவுங்க இஷ்டபடி இருப்பதில் தவறு இல்லை என்றார் மக்கள் திலகம். பிறகு அடுத்த நாள் மாம்பலம் ஆபிசில் சாப்பிட நேர்ந்தது முதல்வர் மாம்பலம் ஆபீசுக்கு அன்று 10 மணிக்கே கோட்டைக்கு போய்விட்டு சில அமைச்சர்களுடன் வந்துவிட்டார், சாப்பாடு எப்போதும் போல் தோட்டத்தில் இருந்து 1 மணிக்கெல்லாம் வந்து விட்டது. அது சமயம் கீழே உள்ள அலுவலக அறைகளில் அமர்ந்து இருந்த தனி உயர் அதிகாரியிடம் சார், முதல்வர் உங்களுக்கு பச்சைக்கொடி காண்பித்து விட்டார் என்றதும் அவர்கள் சற்று யோசித்தபடி என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் முதல்வர் உங்களை எங்கே வேண்டுமானாலும் அமர்ந்து சாப்பிடலாம் என்று சொல்லிவிட்டார்.

இதை கேட்ட அந்த மூன்று பேரும் எனக்கு நன்றி சொன்னார்கள். மக்கள் திலகம் அவர்களுடைய மனித நேயத்தில் 10 ஆண்டுகால ஆட்சியில் இப்படி பல விஷயங்களை சொல்லாம். ஒரு மனிதருக்கு மனிதாபம், மனித நேயம் இதை பற்றி மக்கள் திலகம் அவர்களுடைய ஆட்சிகாலத்தில் அரசு அதிகாரிகள் எப்படி எல்லாம் பேசினார்கள், என்பது முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம். மக்கள் திலகம் அவர்களை எட்டாவது வள்ளல் என்பதோடு முடித்து விட்டார்கள். ஆனால், மனித நேயத்தைப் பற்றி கணக்கிட முடியாது இப்போது, மக்கள் திலகம் முதல்அமைச்சர் ஆனபிறகு அவருடைய மனித நேயத்தைப் பற்றி எழுதிய பிறகு 1977க்கு முன் உள்ளதையும் எழுத உள்ளேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s