66.முப்பிறவி கண்டவர்

வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு வம்பு வழக்குகள் எதுவுமே வராது. ஆனால், 5 அல்லது 10 வருடத்திற்கு ஒருமுறை உடல் பாதிப்பு ஏற்படும். வள்ளல் அவருடைய கிரகப்படி அவைகளையும் சமாளித்து விடுவார். இதில் அவருடைய சொந்த நாடகத்தில் 1958ல் சீர்காழி என்ற ஊரில் நாடகம் நடந்து கொண்டு இருக்கையில் அந்த நாடகத்தில் ஒரு கட்டத்தில் குண்டுமணி என்பவர் சண்டை காட்சியில் நடிப்பவர் சுமார் 200 கிலோ எடை உள்ளவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் 70 கிலோதான் எடை. குண்டுமணியை சண்டைகாட்சியில் அவரை தூக்கி கீழே போட வேண்டும். இது தொடர்ந்து “இன்ப கனவு” என்ற நாடகத்தில் வரும் காட்சி அன்றைய தினம் சீர்காழியில் இந்த நாடகம் நடந்து கொண்டு இருக்கையில் குண்டுமணியை தூக்கும்போது எதிர்பாராமல் குண்டுமணி கீழே விழபோவதை அறிந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் கீழே உட்கார முயலும்போது அவரது முழங்கால் எலும்பு முறிந்துவிட்டது. குண்டுமணியுடன் கீழே உட்கார்ந்த எம்.ஜி.ஆர். அவர்களால் மீண்டும் எழுந்து நடக்க முடியவில்லை உடனே நாடகம் நிறுத்தப்பட்டது. அன்று நாடக கொட்டகை நிறைந்து வழிந்தது இந்த சம்பவத்தை அறிந்த பொதுமக்களின் குரல் நாடக கொட்டகையே அதிர்ந்துவிட்டது.

உடனே ஒரு நாற்காலியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மேடையில் (அமர்ந்து கொண்டு) மைக் ஒலிபெருக்கியில் பொதுமக்களுக்கு ஆறுதல் சொன்னார். அதோடு நான் என் கால் குணமானவுடன் மீண்டும் இதே ஊரில் இந்த நாடகத்தில் நடிப்பேன் இது உங்கள் மீது ஆணை என்று சொல்லி பொதுமக்களை கலைந்து போகும்படி வேண்டி கேட்டுகொண்டார். அதன் பிறகு, அடுத்த நாள் சென்னை கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் செய்யப்பட்டது. இந்த செய்தி அப்போ சினிமா உலகத்தில் ஒரு பெரிய பரபரப்பை உண்டாக்கியது. அது மட்டும் அல்ல மீண்டும் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவில் நடிக்க முடியுமா, என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், மக்கள் திலகம் அவர்களுக்கு முழங்கால் எலும்பு முறியவில்லை.

எலும்பு சற்று பிசகி இருந்தது. மிகவும் தீவிர சிகிச்சைக்கு பிறகு கால் முன்போல் சரியாகிவிட்டது. எந்த வித மாற்றமும் இல்லாமல் 4 மாதம் கழித்து மீண்டும் துள்ளி குதித்து கொண்டு படப்பிடிப்புக்கு சென்றார். மீண்டும் சீர்காழியில் அதே நாடகம் நடத்தப்பட்டு பெரும் பாராட்டுகளைப் பெற்றார். வள்ளல் அவர்களுக்கு அவர் செய்த தர்மம் தலையை மட்டும் காக்கவில்லை உடலையும் காத்தது. சத்தியம், நியாயம், தர்மத்தோடு சேர்ந்து கொண்டது மக்கள் திலகம் அவர்களிடம்.

இந்த தர்மராஜாவுக்கு 9 வருடம் கழித்து தலைக்கு ஒரு அபாயம் ஏற்பட்டது அது தலைப்பாகையோடு போய்விட்டது. அது தான் 1967 ஜனவரி 12ல் எம்.ஆர். ராதாவின் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தலைக்கு வைத்த குறி தப்பி காதோரம் கழுத்துக்குள் சென்று இரும்பு குண்டு கல்லாய், மணலாய் கரைந்து போய்விட்டது இது தான் வள்ளல் செய்த தர்மம்.

அடுத்து 1967க்கு பிறகு 1984 அக்டோ பர் வரை அதாவது 17 வருடம் எந்தவித இடையூறுகளும் இல்லாமல் விக்ரமாதித்தன் 18 படிகளையும் கடந்த பிறகு, சிம்மாசனத்தில் அமர வேண்டும் அதே போல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் பல சோதனைகளை சந்தித்து வெற்றியோடு 1977ல் தமிழக முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்தார். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் வெற்றிகளையும் பெறுவது என்பது முடியாத விஷயம். ஆனால், மக்கள் திலகம் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றி பெற்று உள்ளார். சினிமாவில் புரட்சி நடிகராகவும், அரசியலில் புரட்சித்தலைவராகவும், அரசாங்கத்தில் சத்துணவு கதாநாயகனாகவும், பொது மக்களுக்கு தொண்டனாகவும் வெற்றி வாகை சூடியவர். இது நாடறிந்த விஷயம் இப்பேர்ப்பட்ட நாயகனுக்கு, வள்ளலுக்கு மீண்டும் ஒரு சோதனை வந்தது. 1984 அக்டோ பரில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு, அமெரிக்காவுக்கு சென்று பல மாதங்களாக தீவிர சிகிச்சை அளித்து நல்ல குணம் அடைந்து அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்தார். 1985க்கு இடையில் மக்கள் திலகம் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் மாதங்களில் அதாவது அக்டோ பர் 1984ல் பிப்ரவரி 1985க்குள் தமிழ்நாட்டில் பொதுதேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது பெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தி.மு.க. முழு முயற்சியோடு மிக கடுமையாக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், தேர்தல் முடிவு மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பே என்று அண்ணா தி.மு.க அமோக வெற்றி பெற்றது. மக்கள் திலகம் அவர்கள் முதன் முறையாக எம்.எல்.ஏ. வாக ஆகும் போது 1967ல் எம்.ஆர். ராதா உடைய துப்பாக்கி சூட்டில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தார்.

துப்பாக்கி சூட்டிற்குப்பின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர்

அதே போல் 1985 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வரும்போது, மூன்றாவது முறையாக முதல் அமைச்சராக வந்தார். இதுவும் நாடு அறிந்த விஷயம். இருமுறை ஆஸ்பத்திரியில் படுத்து கொண்டே எம்.எல்.ஏ. ஆனார். மூன்று முறை முதல் அமைச்சர் பதவி பெற்றார். 10 வருடம் ஆட்சி புரிந்தது போதும் என்ன நினைத்தாரோ அல்லது வாழ்ந்தது போதும். நாம் நினைத்தது எல்லாம் நடந்தது. இனி நமக்கேன் இந்த பதவி பட்டம் நம்மைவாழ வைத்த மக்களிடம் இருந்து விடைபெற்று கொள்வோம் என்று நினைத்தாரோ? மக்கள் திலகம் அரசியல் அரசாங்கம் தனக்கு தனியாக எந்த விளம்பரமும் இருக்க கூடாது தனக்கு ஆள் உயர போஸ்டர்கள், கட் அவுட்டுகள் எங்கேயும் வைக்கக்கூடாது, தனக்கு சிலைகள் வைக்கக்கூடாது கட்டிடங்களுக்கு தன் பெயரை வைக்கக்கூடாது. அரசியலாக இருந்தால், அண்ணா பெயரையும், அண்ணா உருவச் சிலையும் தான் வைக்கவேண்டும் தான் முதன் முதலாக வாங்கிய ராயபேட்டை வீட்டிற்கு “தாய் இல்லம்” என்று பெயர் வைத்தார். இதே போல் ராமாபுரம் தோட்டம் வீட்டிற்கு பெயரே வைக்கவில்லை. ஆனாலும், அந்த பகுதியில் சினிமா நடிகர்கள், சிலர் தோட்டங்கள் வாங்கி இருப்பதால், அப்பகுதிமக்களும், சினிமா, அரசியல் சம்பந்தப்பட்டவர்களும் “எம்.ஜி.ஆர். தோட்டம்” என்று சொல்வார்கள். இது நாளடைவில் தமிழ்நாடு எங்கும் பிரபலமாகிவிட்டது. அடுத்து அடையாரில் வாங்கிய ஸ்டூடியோவிற்கு “சத்யா ஸ்டூடியோ” என்று பெயர் வைத்தார். இந்த மாதிரி அவருடைய பெயரை வைக்க விரும்பமாட்டார். பிறகு, “MGR பிக்சர்ஸ் லிமிடெட்”. “எம்.ஜி.ஆர். நாடக மன்ற குழு” என்ற பெயர் இயங்கியது. இப்படி இருக்கையில் அவர் முதலமைச்சர் ஆன பிறகு அரசாங்கத்தில் “மெடிக்கல் யூனிவர்சிட்டி”, தமிழ்நாடு வைத்திய பல்கலைக்கழகம். இதற்காக சென்னையில் ஒரு பெரிய கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் எல்லா வேலைகளையும் முடித்து சுமார் ஒரு வருட காலமாக “திறப்பு விழா” நடக்காமல் இருந்தது. காரணம் யார் பெயரை சூட்டுவது, வைப்பது என்ற பிரச்சனை, ஏற்கனவே சென்னையில் “சென்னை பல்கலைக்கழகம்”, “அண்ணா பல்கலைக்கழகம்”, மதுரையில் “காமராஜர் கல்கலைக்கழகம்” என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த கட்டிடத்திற்கு “எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்” இது எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சர் ஆன பிறகு அவருடைய அனுமதியில் கட்டப்பட்ட கட்டிடம்.

எனவே, எம்.ஜி.ஆர். அவர்களுடைய பெயரை வைத்துவிடலாம் என்று அரசாங்க உயர் அதிகாரிகளும், மற்ற மந்திரிகளும், கவர்னரும் முடிவு எடுத்து அரசாங்க சட்டப்படி தீர்மானத்தில் கையெழுத்துப்போட்டு முதல் அமைச்சரிடம் ஒப்புதல் கையெழத்து வாங்கிய பிறகு, தான் பெயர் வைக்கவேண்டும். இதற்கு மக்கள் திலகம் அவர்கள் தன் பெயரை வைக்க ஒப்புகொள்ளவில்லை. ஆனாலும், கவர்னரும், மற்ற மந்திரிகளும் விடாமுயற்சி எடுத்து 24.12.1987ந் தேதி வைத்துவிட்டார்கள். இந்த “எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக”க் கட்டிட திறப்பு விழாவிற்கு இந்திய ஜனாதிபதி, தமிழ்நாடு கவர்னர், மற்றும் மந்திரிகள், அரசாங்க அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், எம்.எல்.ஏ, எம்.பிக்கள் எல்லோரும் முதல்வர் விழாவுக்கு வரும்படி பத்திரிகை அடித்து கொடுக்கப்பட்டது. அதோடு தின பத்திரிகைகளுக்கும் விளம்பரம், மற்றும் செய்திகள் கொடுக்கப்பட்டது. இந்த கட்டிடத் திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அ.இ.அ.தி.மு.க மற்றும் எம்.ஜி.ஆர். மன்ற தோழர்கள் அத்தனை பேர்களையும் கட்சி சார்பில் அழைக்கப்பட்டது. இத்திறப்பு விழாவை மிக பிரமாண்டமாக கொண்டாடனும் என்று கட்சி நினைத்தது, அதன்படி அந்த பல்கலைக்கழக கட்டிடம் திறப்புவிழாவிற்கு வெளியூர்களிலிருந்து வருபவர்கள் எந்த எந்த வழியில் வரவேண்டும் என்று சென்னை நகர காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள்.

1987 டிசம்பர் மாதம் 24ந்தேதி வியாழக்கிழமை காலை “டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்” (யுனிவர்சிட்டி) தமிழ்நாடு இந்த கட்டிடம் அமைந்து உள்ள இடம் சென்னை தாம்பரம், பூந்தமல்லி, கிண்டி வழியாக நகரத்திற்குள் நுழையும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மக்கள் திலகம் “ராமாபுரம் தோட்டம்” வீட்டில் இருந்து மாம்பலம்அலுவலகம், கட்சி அலுவலகம், கவர்னர்மாளிகை முதல்அமைச்சர் அரசு அலுவலகம், கோட்டை இந்த இடங்களுக்கு போகும் வழியில் இந்த கட்டிடம் அமைந்து உள்ளது. இது ஒரு குறிப்பு.

உலகத்தில் நடக்கும் எல்லா விஷயத்தையும் கவனித்து கொண்டு இருக்கும் கடவுள் ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு பேர்கள் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் கவனிக்காமல் இருப்பது இல்லை, இந்த விஷயத்தில் திடீரென்று எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி 23.12.1987 அன்று கடவுள் நினைத்தார். அடடா இவர் மூன்று முறை செத்து பிழைத்தவர் “நல்லவர்”, “வல்லவர்”, “வள்ளல் குணம் உடையர்”, இவரிடம் “தர்மம்”, “சத்தியம்”, “நியாயம்”, “பக்தி”, எல்லாம் உள்ளது. மேலும், தன்னுடைய கடுமையான உழைப்பால் உயர்ந்தவர் உறவினர்களை விட மற்றவர்களை நேசிப்பவர், பிள்ளைகுட்டி இல்லாதவர், மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, பொதுமக்களின் அன்பை பெற்றவர் அன்னதானம் செய்பவர், அளவோடு வாழ்பவர் ஒரு நல்ல கொள்கை எண்ணம் உள்ளவர். இப்படிபட்ட இவருக்கு நாம் இன்று நல்ல உதவியை செய்யவேண்டும் என்று நினைத்தார். நாளை இவர் பெயர் வைத்த ஒரு கட்டிடத் திறப்பு விழாவிற்கு நாடெங்கிலும் இருந்து மக்கள் வருகிறார்கள். இது தான் நாம் அவருக்கு செய்ய வேண்டிய பரோபகாரம் என்று நினைத்த கடவுள் மக்கள் திலகம் மனதில் உதித்தார். பக்தா உன்னை காண நாளை காலையில் நாடெங்கும் இருந்து லட்சோப லட்சம் பேர்கள் வருகிறார்கள். உடல் நல குறைவு ஏற்பட்டு சற்று மன நிம்மதி இல்லாமல் இருக்கும் உனக்கு உதவி செய்ய வந்துள்ளேன். இப்ப நீ என்னுடன் வந்து விட்டால் நாளை உன் உடலுக்கு யாருக்கும் கிடைக்காத ஒரு மரியாதை கிடைக்கும். கடவுளே நேரில் வந்து வள்ளலின் உயிரை கொண்டு போன மாதிரிதான் அன்றைய, சம்பவம் இருந்தது. இது கற்பனை அல்ல, கதையும் அல்ல, மேலும் மக்கள் திலகம் வாழ்நாள்களின் “திருமண பத்திரிகை”, “புதுமனை புகுவிழா”, “பிறந்தநாள் விழா” இப்படி எதற்குமே பத்திரிகை அடித்து கொடுத்தது இல்லை. அப்படி பட்ட மக்கள் திலகம் அவர்களே பொது மக்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும் நான் 23.12.1987 புதன் கிழமை இரவு 11.45க்கு இறந்து விடுவேன் என் இறுதி சடங்குக்கு எல்லோரும் வந்துவிடுங்கள் என்று பத்திரிகை அடித்து அனுப்பியது போல் இருக்கிறது. இதன்படி இந்த “மன்னாதி மன்னன்” மறைவு செய்தியை அறிந்த மக்கள் வெள்ளம் திரண்டு 24.12.1987 அன்று காலை சென்னைக்கு வந்து விட்டார்கள். ஏற்கனவே “எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்” திறப்பு விழாவிற்கு வந்து கொண்டு இருந்தவர்கள் வழியில் மக்கள் திலகம் மறைந்து போன செய்தியை கேட்டவர்கள் மனம், இதயம் எப்படி இருந்து இருக்கும், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். முன்னிலையில், தமிழக கவர்னர் தலைமையில், இந்திய ஜனாதிபதி அவர்கள் இந்த கட்டிடத்தை திறந்து வைக்கிறார். ஆனால், மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் உயிருடன் இருக்கும் வரை என் பெயரில் எந்த கட்டிடத்திலும் என் பெயரை வைக்கக்கூடாது, என்று மிகவும் வற்புறுத்தி வந்தார். அதையும் மீறி, நடக்க இருந்த இந்த விழாவை நடக்க விடாமல் நிறுத்தினார். “நினைத்ததை முடிப்பவர்”, “சாதனை நாயகன்” எம்.ஜி.ஆர். அவர்களுடைய சரித்திரம் படைத்த வரலாறு இது.

இந்த மாமனிதர் 5வயதில் கும்பகோணம் பள்ளியில் மற்ற பிள்ளைகளுடன் விளையாடியதும், வாராவாரம் ஞாயிற்றுக் கிழமை அன்று, காவேரி ஆற்றில் தன்னுடைய அண்ணனுடன் குளிக்கசென்று அங்கு நீந்தி விளையாடியதையும் பள்ளிக் கூடத்தில் மாணவர் தலைவரிடம் கணக்கு கேட்டு, சண்டை போட்டதையும் 10 வயதில் வறுமைபிடியில் இருந்து தப்பி பிழைக்க நாடக கம்பெனிக்கு, சென்றதையும், நாடக கம்பெனியில் கடுமையான பயிற்சியின் போது ஏற்பட்ட சிரமங்களையும், பிறகு சென்னை வந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி நடந்த நடைகளை பற்றி மற்றும் சில சம்பவங்களை மக்கள் திலகம் மாம்பலம் ஆபிசில் சில சமயங்கள் சில முக்கியஸ்தர்களிடம் சொல்லிவிட்டு, ஒரு பெருமூச்சுவிடுவார்.

இதேபோல், அவருக்கு ஏற்பட்ட பல சிரமங்களை எல்லாம் சமாளித்து இப்போ பெரிய வசதியுள்ளவன் ஆனேன், என்பதையும் சொல்வார். எனக்கு மக்கள் கொடுத்த வரபிரசாதம் தான் இது அவர்கள் கொடுத்த தைரியம், ஊக்கம் நம்பிக்கைதான் நான் பாராட்டு பெற இவ்வளவு பிரபலம் அடைய அவர்கள் தான் காரணம் என்றும் சொல்வார். இப்படி அவரே அவருடைய “வாழ்க்கை வரலாறு” பற்றிய சில நேரங்களில் சில விஷயங்களை பேசும்போது உதாரணத்திற்கு சொல்வார். இப்படி விஷயங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு. இது மாதிரி ஒருநாள் ஒரு சம்பவத்தை சொன்னார் சினிமாவில் சான்ஸ் கேட்டு ஒரு கம்பெனிக்கு போனேன் வால்டாக்ஸ் ரோட்டில் இருந்து ராயபேட்டைக்கு நடந்தே சென்றேன். அங்கு எல்லோரும் ஸ்டூடியோவிற்கு போய்விட்டார்கள் என்று சொன்னார்கள். அதன்படி, ராயப்பேட்டையிலிருந்து அடையாருக்கு நடந்து வேகமாய் போய் சேர்ந்தேன். பாக்கெட்டில் ஒரு ரூபாய் இருந்தது. நான் அப்பவே “டீ, காபி” சாப்பிட மாட்டேன் தண்ணீர் தாகத்துக்காக “சோடா அல்லது சர்பத்” வாங்கி காசுக்கு தகுந்தபடி சாப்பிடுவேன்.

அப்போ எல்லாம் குறைந்தபட்சம் ஒரு ரூபாய் அதிக பட்சம் ஐந்துரூபாய் காலையில் 7 மணிக்கு வீட்டில் இருந்து ஏதோ வேலைக்கு போற மாதிரி அம்மா கொடுக்கிற பணத்தை வாங்கி புறப்பட்டு விடுவேன். இந்த மாதிரி சமயங்களில் சில நேரம் சில இடங்களில் என்னை மாதிரி சினிமா சான்ஸ் தேடி அலைகிறவங்ககிட்ட மாட்டிக்கிடுவேன். அவுங்ககிட்ட நான் எதுவும் கேட்க மாட்டேன். ஆனால், என்கிட்ட ராமச்சந்திரா சாப்பிட காசு இல்லை. பசிக்குது உன்கிட்ட காசு இருந்தால் கொடு என்பார்கள். நானும் இல்லை என்று பொய் சொல்ல மாட்டேன் என்னிடம் ஒரு ரூபாய் இருந்தால் 1/4 ரூபாய் கொடுப்பேன். மீதியை நான் வச்சிக்கிடுவேன். அந்த எட்டணாவில் 4 அணாவுக்கு ஏதாவது சாப்பிட்டு மீதம் “4” அணாவை வீட்டுக்கு கொண்டு வந்து விடுவேன். இப்படி ஒரு உதாரணத்திற்கு சொல்வார். அதாவது, ஒரு மனிதன் அவன் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேற வேண்டியது இருக்கிறது என்பார். இப்படி எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிற வரை நடையை பற்றி கவலையே படுவதில்லை. கையிலே காசு இருந்தால் கூட அப்போ, எல்லாம் பஸ் வசதி இல்லை. “டிராம் வண்டி” ரயில்மாதிரி தண்டவாளத்தில் ஓடும் அப்போ எல்லாம் “கைரிக்ஷா” இல்லை ஆளை உக்கார வைத்து ஆள் இழுத்து கொண்டு போறது. அது எனக்கு பிடிக்காது. குதிரை வண்டி உண்டு காசு அதிகம் கேட்பார்கள். வீடு வால்டாக்ஸ் ரோடு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பக்கத்து ரோடு அங்கு இருந்து ராயப்பேட்டை, மைலாப்பூர், மாம்பலம், கோடம்பாக்கம் இந்த இடங்களுக்கு போக வேண்டும் என்றால் தூரத்தை நினைக்காமல் நடந்தே போய்விடுவேன். எனக்கு வசதி வந்தவுடன் முதலில் சொந்த வீடு வாங்கனும், பிறகு ஒரு கார் வாங்கனும் எங்கே எங்கே எல்லாம் நடந்து போனோமோ அங்கே எல்லாம் காரில் போகனும் இப்படி இதை எல்லாம் நினைத்துக்கொண்டே நடந்து விடுவேன். கோயிலுக்கு போய் சாமி கும்பிட மாட்டேன். கடவுளை மனசுக்குள்ளே நினைச்சிக்கிடுவேன். ஆனால், அம்மா, அண்ணன் இருவரும் ஒரு கோயில் விடமாட்டாங்க பசிக்குது என்றால் வெளியே யாரிடமும் சொல்ல மாட்டேன். எவ்வளவு பசிவந்தாலும் பொருத்துகிட்டு வந்துடுவேன். இது அம்மாவுக்கு தெரியும் வீட்டில் எனக்குனு ஏதாவதும் வச்சு இருப்பாங்க.

சாயங்காலமோ, ராத்திரிக்கோ எப்போ வந்தாலும் குளிக்காமல் சாப்பிடமாட்டேன். இப்படி மக்கள் திலகம் பல சம்பங்களை இதற்கு தகுந்தவர்களிடம் தான் பேசுவார். நல்ல மூடில் இருக்கும் போது, ஆபிஸில் அல்லது பகலில் காரில் வெளியூருக்கு போகும்போது காரில் அவருக்கு பேச்சு துணைக்கு அவருக்கு தகுந்தாற் போல் ஒருவர் உதவியாளர் ஒருவர் காரில் குடிதண்ணீர் திண்பண்டங்கள் இருக்கும் அது சமயம் இப்படி ஜாலியாக பேசிகிட்டோ வருவார்.

இப்படி இதில் சில சமயம் காரில் நான் உதவியாளராக போவதும் உண்டு. அந்த சமயம் அவர் சொல்லும் இம்மாதிரியான விஷயங்களை நான் மனதில் பதியவைத்து கொள்வேன். ஒரு மாமனிதர் எப்படி இதற்கு முன்னால் வாழ்ந்து உள்ளார் என்பது முக்கியம். இதை அவரே சொல்வதென்றால் இதை விட பெரிய விஷயம் எதுவுமே இருக்க முடியாது.

முக்கிய குறிப்புகள்

1987 ஜூலை 25ந்தேதி இலங்கை ஒப்பந்தம்

1987 ஆகஸ்டு மாதம் 5ந்தேதி சென்னை கடற்கரையில் இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் பிரமாண்டமான பொதுக்கூட்டம்

1987 ஆகஸ்டு 7ந்தேதி அமெரிக்கா பயணம்

1987 ஆகஸ்டு 30ந்தேதி சென்னை வருகை

1987 டிசம்பர் 22ந்தேதி கத்திப்பாரா ஜவகர்லால் நேரு உருவச்சிலை திறப்புவிழா

1987ம் ஆண்டு டிசம்பர் 24ந் தேதி எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருந்தார். 23ந்தேதி இரவு இறைவனடி சென்றுவிட்டார்.

கடற்கரையிலே உறங்கினாலும் அவர் உலக மக்களின் மனதில் குடிகொண்டு உள்ளார். அந்த மக்கள் திலகத்தை நினைத்துக் கொண்டு அவருடைய நினைவில்லத்தில் இரவு பகலாக இருந்து கொண்டு அவருடைய வரலாற்றை நினைத்து அசை போட்டுக் கொண்டு இருக்கிறேன்.

மக்கள் திலகம் அவர்களுடைய மனிதநேயமிக்க பண்புகளை “மக்கள் திலகமும் – மனித நேயமும்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட உள்ளேன். அனைவரும் படித்து மகிழுங்கள்.

3 comments on “66.முப்பிறவி கண்டவர்

  1. Ravikumar V. சொல்கிறார்:

    Thalaivar MGR pugazh Vaazhga!!!

  2. கோமதி சொல்கிறார்:

    வாழ்க எம்.ஜி.ஆர்.
    வளர்க உம் புகழ்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s