அசத்தினார் சரோஜாதேவி

சரோஜாதேவி

படத்தில்….மூன்றாவதாகத் தோன்றுகிறவர் ஜி.சகுந்தலா. மனோகரியின் நலனையே பெரிதாகக் கருதும் ஒரு தோழியின் பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் ; நகைச்சவை நடிகருடன் பங்கு கொள்கிறார். தான் விரும்பியவன் தன் உயிர்தோழிக்கு துரோகம் செய்கிறான் என்றறிந்ததும், தன் தந்தையிடம் சொல்லி தண்டிக்கச் சொல்லும் குணம் படைத்த நல்ல தோழியாகத் தோன்றி, படத்தில் அதிக வேலையில்லாவிடினும் மக்கள் மனதில் தன்னை நினைவிருத்திக் கொண்டதிலிருந்தே அவருடைய திறமைக்கு இது வெற்றியென்று நிச்சயமாக கூறலாமே !

அடுத்ததாக பி.சரோஜா தேவி அவர்கள் வருகிறார். இந்தப் பாத்திரத்திற்குப் பல புதிய நடிகைகளையும் இன்று விளம்பரமடைந்திருக்கும் ஒரு சிலரையும் நடிக்க வைக்க நினைத்துண்டு. எப்படியாவது ஒரு புதிய நடிகையை இந்தப் பாத்திரத்தின் மூலம் அறிமுகப்படுத்தவேண்டும் என்று பெரிதும் முயன்றேன். எனது முயற்சி பலவகையிலும் தோல்வியே கண்டது. இரண்டொரு நடிகையரைப் படமெடுத்தும் பார்த்தேன். சரியாயில்லை.

பிறகுதான் இவரை நடிக்கச் செய்து படமெடுத்தேன். இது ஒரு புதிய விசித்திர அனுபவம் தான்.

இவரைக் கொண்டு ‘பாடு பட்டாத் தன்னலே’ என்ற பாட்டுக்கு நடனம் ஆடசெய்து முன்பே படமும் எடுக்கப்பட்டு விட்டது. இளவரசி ரத்னா வேடத்தில் நடிக்கச் செய்ததனால் முன்பு எடுத்த காட்சியைச் சந்திரா என்ற வேறொருவரை நடனமாடச் செய்து படமாக்க வேண்டி நேரிட்டது.

சரோஜா தேவி அவர்கள் இப்போது பேசுவதைவிடத் தமிழ் உச்சரிப்பு மோசமாக இருந்த நேரம். ஆகவே அவருக்கு ஏற்றாற் போல் வசனங்களை அமைக்கச் செய்தேன். அவருடைய பாத்திரத்தில் குறிப்பிடத்தக்க உணர்ச்சி பாவங்களை வெளிக் காட்ட வேண்டிய அவசியம் அதிகமில்லை. வெளி உலகத்தைப் பற்றியோ, நல்ல பண்பாட்டை ப் பற்றியோ எதுவுமே அறியாத ஒரு அப்பாவிப் பெண்ணாக அந்தப் பாத்திரம் அமைக்கப்பட்டது.

அந்தப் பாத்திரத்திற்குச் சரோஜாதேவி அவர்களும், சரோஜா தேவி அவர்களுக்கே அந்த பாத்திரமும் பொருந்திவிட்டன என்று சொல்லும் அளவிற்குச் சரோஜா தேவி அவர்கள் அந்தப் பாத்திரத்தைத் தனதாக்கிக் கொண்டு நடித்துப் புகழைப் பெற்றுவிட்டார் என்று துணிந்து கூறமுடிகிறது.

‘ஒண்ணுமில்லே சும்மா !’ என்று சொல்லும் கொச்சையான , ஆனால் கருத்தாழம் கொண்ட இயற்கை நடிப்பால் அவர் மக்கள் மனதில் பதிந்துவிட்ட ஒன்றே போதுமே, அவர் இந்தப் பாத்திரம் தாங்கி நடித்ததில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை நிரூபிக்க….

நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் –

முழுமையான வழிகாட்டிக்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

One comment on “அசத்தினார் சரோஜாதேவி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s