ஒப்பற்ற ஒளிப்பதிவு

கதையை எவ்வளவு அழகாக, சரியாக எழுதிவிட்டாலும் அதைப்படமாக்குகிறவர் திறமைமிக்கவராக இருந்து தீர வேண்டியது அவசியமாகும் . திறமை மட்டும் போதாது, பொறுமையும் அடக்கமும், இயக்குநரின் விருப்பத்தை அறிந்து செயலாற்றும் கடமை உணர்ச்சியும் உள்ளவராக இருத்தல் வேண்டும். அதோடு படத்தின் வெற்றி, தோல்விகளில் தனக்கும் பங்குண்டு என்ற எண்ணம் இருக்க வேண்டும்.

திரு. ராமு அவர்களின் திறமையை இன்று போற்றாதார் இல்லை….தமிழகத்தில் திறமை மிக்க ஒளிப்பதிவாளர் இருக்கிறார் என்று பெருமைப்படுகிறார்கள்.
எனக்கு ஒரு பெரும் குறை இருந்தது. நமக்கு மிக அருகில், நம்மோடு சேர்ந்து வாழும் திறமை மிக்க பலரை நாம் கவனிப்பதே இல்லை என்பது தான் அந்தக் குறை. அப்படிக் கவனிக்கப்படும் நிலையில் ஏதாவது செயலாற்றினாலும்… உடனடியாக அவருடைய திறமையையும் வெளிநாட்டு நிபுணர்களின் திறமையையும் ஒப்பிட்டுப் பார்த்து, எடை போட்டு நிறுத்திப் பார்ப்பது போல், ?வெளிநாட்டு நிபுணர்களின் திறமை
எங்கே? இவருடைய திறமை எங்கே !….புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்கிறது? என்று கேலி பேசுவார்களே தவிர…அவர்களுக்குள்ள வாய்ப்பும் வசதியும் இவருக்கு இல்லாதிருந்தும் எவ்வளவு சிறப்பாகக் காரியத்தைச் செய்து முடித்திருக்கிறார் என்று உண்மை நிலையை உணர்ந்து பாராட்டுவதே கிடையாது.

பாராட்டப் படவேண்டியவர் தான் என்று தெரிந்தாலும் பாராட்டமாட்டார்கள்

அவரைப் பாராட்டினால் , தான், அவரைவிடத் திறமையில் குறைந்தவரென்றும்,தனக்குத் தெரியாததை அந்த மனிதர் செய்து காண்பித்துவிட்டதாகவும் ஏற்றுக் கொண்டதாகிவிடுமே என்ற கீழ்ப்பட்ட எண்ணம் தான் அவர்களை இவ்வாறு இருக்கச் செய்கிறது.

ஆனால் திரு.இராமு அவர்கள் விஷயத்தில் மட்டும் எப்படியோ எல்லோரும் ஒரு மனதோடு பாராட்டினார்கள் ; புகழ்ந்தார்கள். ஏதேதோ காரணங்கள் இருந்தாலும் இது நல்ல அறிகுறியாகும்….ஆனால் இதோடு நிறுத்திவிடக்கூடாது. நமது அரசியலார் இப்படிப்பட்டவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, அங்குள்ள ஒளிப்பதிவு முறைகளை நன்கு தெரிந்துகொண்டு வர வாய்ப்பு அளிக்க வேண்டும். கலைத்துறையில் திறமையும் ஆர்வமும் உள்ளவர்களை அரசியலார் நாட்டின் கலைச் செல்வமாக எண்ணி அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.

இதைத் திரு.இராமு அவர்களுக்காக மட்டும் சொல்லவில்லை. இவரைப்போல் திறமை மிக்கவர்கள், ஆனால் வாய்ப்புப் பெறாதவர்கள் நமது தமிழகத்தில் பலருண்டு; அவர்களுடைய ஆர்வத்தையும் உழைப்பையும் திறமையையும், தமிழகத்தின் கலைப் பகுதிக்குப் பெருமை தேடித் தருவதற்காக அரசியலார் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பட உரிமையாளர்களையோ, இயக்குநர்களையோ பாராட்டுவதோடு நின்றுவிடாமல், இவர்களைப் போன்ற மற்ற கலைஞர்களையும் பாராட்ட வேண்டும் ; பரிசுகள் வழங்க வேண்டும்.

சில காட்சிகள் நான் விரும்பியபடி படமெடுக்கும் வசதிகள் இல்லாமலிருந்தன. ஆனால் இருக்கிற வசதியை வைத்துக்கொண்டு அக்காட்சிகளை ஒளிப்பதிவு செய்து, பிறர் திகைக்கும் வகையில் நிறைவேற்றித் தந்தவர் திரு.இராமு. ஒவ்வொரு காட்சியையும் இங்கு எடுத்துக் கூற நான் விரும்பவில்லை. ஏனெனில் படம் முழுவதும் திரு. இராமு இருக்கிறார் என்று சொன்னால் போதுமென்று நினைக்கிறேன்.

வண்ணக் காட்சிகளை இதற்கு முன் இவர் படமெடுத்தது கிடையாது. நான் வண்ணக் காட்சி எடுக்கப் போவதாகக் கூறிய போது அவருக்கு மிக்க மகிழ்ச்சி ; ஆனால் பயம். தனக்கு முன்னோடியாக இருப்பவரிடம், அவர் வண்ணக் காட்சி படமெடுக்கும் போது தன்னிடம் கூறுமாறு பலமுறை தெரிவித்தும், அவர் எந்தத் தகவலும் திரு.இராமுவுக்குத் தரவில்லையாம் ; ஆனால் அவரோ திரு. இராமுவுக்கு மதிப்புக்குரிய நண்பர்.

திரு.இராமு என்னிடம் சொன்னார் : ?வண்ணக் காட்சியைப் படமெடுக்க வேறு யாரையாவது ஒளிபதிவாளராக ஏற்பாடு செய்யுங்கள் ; நானும் சேர்ந்து பணியாற்றுகிறேன்? என்று…..

?உங்களால் எடுக்கப்பட்டு, நன்றாக இருந்தால் வண்ணக் காட்சி படத்தில் இருக்கட்டும். இல்லையாயின் வண்ணக் காட்சியே வேண்டாம். வண்ணக் காட்சியை எப்படிப் படமாக்குவது என்பதற்குப் பரிசோதனைக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயார்? என்றேன்.

பரிசோதனைக்காக ஒரு நாள் கால்ஷீட் போட்டு, எனது நாடக மன்ற நடிகை ஒருவரை வேடமிடச் செய்து படமெடுக்கப்பட்டது.

படமும் பம்பாய்க்குப் போய், பிரதி எடுத்து அங்கிருந்து திரும்பி வந்த குறிப்பில், ?மிக நன்றாக இருக்கிறது. இப்படியே எடுத்தால் போதும்? என்று அறிவிக்கப் பட்டிருந்தது. படத்தைப் பார்த்தோம் ; மகிழ்ந்தோம் ; திரு. இராமுவின் மகிழ்ச்சியை அளவிட்டுச் சொல்ல முடியாது.

அப்போது தான் அவர் சொன்னார் ; தான் ஒரு நண்பரைக் கேட்டதாயும், அவர் ஏமாற்றிவிட்டதாயும், அதன் பிறகு தான் என்னிடம் வேறு ஒளிப்பதிவாளரை வண்ணக் காட்சியைப் படமாக்குவதற்கு ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கூறியதாகவும் சொன்னார்…..

இப்படியும் நண்பர்கள் இருக்கிறார்கள்….! ஆனால் அந்த நண்பர்களே கண்டு பொறாமை கொள்ளும் நிலைக்குத் திரு. இராமு தன்னுடைய உழைப்பால் உயர்ந்துவிட்டார்….இது அவருடைய ஒளிப்பதிவுத் திறமைக்கு ஒரு சான்று தானே.

<strong>நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் -</strong>

முழுமையான வழிகாட்டிக்கு செல்ல <a href=”https://lordmgr.wordpress.com/2010/06/30/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c/&#8221; target=”_blank”>இங்கு </a>சொடுக்கவும்.

2 comments on “ஒப்பற்ற ஒளிப்பதிவு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s