கண்ணதான் வசனத்துக்கு வெற்றி

இதிலேயும் சிலருக்குக் கருத்து வேறுபாடு உண்டு. ?சினிமாவில் சொல்லலாம். நடைமுறைக்கு ஒத்துவருமா? என்பதே அந்த வேறுபாடு.

நான் சொல்லுவன் : மக்களுக்குத் தேவையானதா? இல்லையா? என்று விவாதிக்க வேண்டுமே தவிர, இப்போது முடியுமா, முடியாதா என்று வாதிப்பது சரியல்ல. கொள்கை சரியா இல்லையா என்று விவாதித்து முடிவிற்கு வரவேண்டுமே தவிர, சில நூறு அடிகளில் சொல்லப்படும் விஷயம் முழு விளக்கத்துடன் கூடியது என்று முடிவு கட்டுவதும் சரியல்ல….

என்னைப்பற்றிச் சில பட முதலாளிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கூறும் குற்றச் சாட்டுகளில், கடவுளைப்பற்றிப் பேசக் கூடாதென்றும் கடவுளைத் திட்ட வேண்டுமென்றும் வற்புறுத்துவதாகச் சொல்வதுண்டு,

இந்த நாட்டில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மிக மிகக் குறைவான எண்ணிக்கை உள்ளவர்கள்.

அதே போல் இந்த நாட்டில் வசதியோடு நிம்மதியாக வாழ்பவர்கள் மிக மிகக் குறைந்த எண்ணிக்கை உள்ளவர்கள்.

இவைகளை வைத்துக் கடவுள் நம்பிக்கையை விவாதித்தால் சரியான விளக்கம் பெற இயலாமற் போகும்.

ஆகவே மக்கள் வாழவேண்டிய நேர்மையான முறைகளைப் பற்றியும், ஏழ்மையைச் சட்டத்திற்குட்பட்டு எப்படிப் போக்குவது என்பதையும், மக்கள் எல்லோருக்கும் எப்படிப் பண்பாட்டைத் தெரிவிப்பது என்ற வகையையும் கலைஞர்கள் செயற்படுத்த முயல வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.

ஒருவன் திருடாதவனாக இருந்தால் அவனால் மற்றவர்களுக்கேற்படும் தொல்லை குறைகிறது. அதுபோல் ஒருவன் கல்வியைச் சொல்லிக் கொடுத்தானாகில் பல நல்லாசிரியர்கள் தோன்றுவார்கள். இவை போன்றவைகளின் பலனால் மக்கள் உள்ளத் தூய்மை பெற, அன்பு வழியில் மக்கள் வாழ இறைவனைத் தொழுவதால் அடையும் பயனை மேலே சொன்ன செயல்களின் மூலம் பெறுவர். இதைத்தான் செய்ய நான் விரும்புகிறேன் எனது கலைத் தொழிலின் மூலமாக.

அதை ஓரளவிற்கு நிறைவேற்றுகிறது நாடோடி மன்னன் கதை.

ஆகவே ?நாடோடி மன்னன்? படத்திற்குவெற்றி என்றால் முதலில் கதைக்கு வெற்றி. கதையில் அமைக்கப்பட்டிருக்கும் கொள்கைக்கு வெற்றி….என்று சொல்லலாமல்லவா?

கதை சரிவர அமைக்கப்பட்டாலும் அதனுடைய உட்கருத்து எந்த அளவிற்கு ஒழுங்காகப் பாத்திரங்களின் தன்மையைக் கெடுக்காமல் சொல்லப்படுகிறதோ (உரையாடல் மூலம்) அதைப் பொறுத்துத்தான் கதைக்கு வெற்றி கிட்ட முடியும்.

சில கதைகளுக்கு ஏற்படும் விபத்து மேலே சொன்ன குறைகளால் தான்.

கதை ஆசிரியர் சில கருத்துக்களை வெளியிட எண்ணி அதற்கு ஏற்றாற் போலக் கதையை அமைப்பார் ; பாத்திரங்களையும் தோற்றுவிப்பார்.

ஆனால் வசனம் எழுதும் ஆசிரியர் வேறு கொள்கை படைத்தவராயின் தனது கருத்தை வலியுறுத்துவார்.

கண்ணதாசனுக்கு அஞ்சலி செய்யும் மக்கள் திலகம்

அப்போது மூலக் கதைக்கும் அதிலே உள்ள பாத்திரங்களின் தன்மைக்கும், செயலுக்கும், மாறாக அவர்களின் (பாத்திரங்களின்) பேச்சு இருக்கும். இந்த வகையில் ஏற்படும் குழப்பத்தின் காரணமாக ஒன்றுக்கொன்று இணைப்பற்ற, ஒருமைப்பாடற்ற முரணான முறையில் கதையும் பேச்சு அமைவதால் தான் படங்களுக்குத் தோல்வி பெரும்பாலும் ஏற்படுகிறது. நாடோடி மன்னனைப் பொறுத்த வரையில் வசனகர்த்தாவில் ஒருவரான திரு.கண்ணதாசன் அவர்களுக்கும் எனக்கும் கொள்கைப் பிடிப்பும் குறிக்கோளும் ஒன்றாகவே இருந்ததனால் மேலே சொன்ன குழப்பம் நேரவே இடமில்லாமற் போய்விட்டது. இன்னொரு வசனகர்த்தாவான திரு.ரவீந்திரன் என்னுடைய கொள்கையை நன்கு புரிந்த, தொடர்ந்து என்னுடன் பணியாற்றி வருபவராதலால் நான் அமைத்த பாத்திரங்களின் குணத்தையோ தரத்தையோ மாற்றக்கூடிய எதையும் அவர் செய்யவில்லை.

இந்த இரு வசனகர்த்தாக்களும், குறிப்பாகத் திரு. கண்ணதாசன் அவர்களும் தங்கள் ஆற்றலை நல்ல வகையில், தெளிவான முறையில் செயற்படுத்தி நாடோடி மன்னன் வசனப் பகுதிக்கு வெற்றிகிட்டும்படி செய்தார்.
ஆக வசனத்திற்கும் வெற்றி என்று சொல்லலாமல்லவா?

நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் –

முழுமையான வழிகாட்டிக்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

One comment on “கண்ணதான் வசனத்துக்கு வெற்றி

  1. […] கண்ணதான் வசனத்துக்கு வெற்றி… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s