கதையை செதுக்கிய மூவர்

இத்தனையும் சொல்லியாகிவிட்டாதே � கதை இலாகாவைப் பற்றி ஒன்று சொல்லவில்லையே என்று எண்ணிவிட வேண்டாம்.

கதை இலாகாவில் இருப்பவர்கள் மூவர் . ஒருவர் திரு. ஆர்.எம்.வீரப்பன் (இவர் தான் எம்ஜிஆர் பிக்சர்ஸின் மானேஜிங் டைரக்டர்), மற்றவர் வித்துவான் வே. இலக்குமணன் (இவர் சிலம்புக் குகை போன்ற படங்களுக்குக் கதை வசனம் இயற்றுகிறவர்), இன்னொருவர் எஸ்.கே.டி.சாமி (எனது அந்தரங்க காரியதரிசியாகவும், எம்ஜிஆர் பிக்சர்ஸின் பங்குதாரராகவும் இருப்பவர்).

இம்மூவரில் திரு.எஸ்.கே.டி.சாமி உணர்ச்சி வயப்பட்டவர். சில சமயம் யாருக்கும் புரியாத பல கேள்விகளைக் கேட்டுத் திணறடித்து விடுவார்.படம் முழுவதும் எடுக்கப்பட்டு, போட்டுக் காண்பித்து, எதை நீக்குவது என்பதைப் பற்றிப் பேசும்போது எனக்கு வேடிக்கையும்,விசித்திரமும், திகைப்பும் தோன்றும் படியான பல அனுபவங்கள் கிடைத்தன.

படமாக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை மாற்றும்படி சொல்வதில் எஸ்.கே.டி.சாமி அவர்கள் பல மாற்றங்களைச் சொல்வார். சிறிது துணிவுக்குறைந்தவனாக நான் இருந்திருந்தால் குழப்பமடைந்திருப்பேன். ஆனால் அவர் சொல்லிய விஷயங்களில் மேலும் துணிவு அதிகமாயிற்று.

வித்துவான் வே. இலக்குமணன் அவர்கள் என்னுடைய உழைப்பையும், படும் கஷ்டத்தையும் கண்டு அனுதாபப்படுகிறவர். எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் எதை நீக்குவது என்ற பிரச்சினை வந்தால், நீக்கப்படவேண்டு மென்று கூறப்படும் காட்சியைப் படமாக்க நான்பட்ட சிரமத்தைப் பற்றிப் பேசி, அவ்வளவு கஷ்டப்பட்டு, பெரும் செலவு செய்து படமாக்கியதை

வெட்டவேண்டுமா? என்பார். ஆனால் வேறு பல நல்ல மாற்றங்களைச் சொல்வார்.

இன்னொருவரான திரு.ஆர்.எம்.வீரப்பன் ஒரு வார்த்தை கூட அதிகமாகத் தானாகப் பேசாதவர்.

�காடுவெளைஞ்சென்ன மச்சான்� என்ற பாட்டு படத்திலிருப்பதற்கு முதற்காரணம் ஆர்.எம்.வீரப்பன் அவர்களே. படக்கதையிலிருந்து சில காட்சிகளை அறவே நீக்கிவிட வேண்டுமென்று ஒரே பிடிவாதமாகப் போராடியவர் வீரப்பன் அவர்களே.அடக்கம்,ஆனால் தன் மனதில் தோன்றுவதை வெளியிடும்போது அச்சமே கொள்ளதவர்……

இப்படிப்பட்ட இம்மூவரும் இரவு பகல் கதையைப் பற்றிச் சிந்தித்துத் தங்களுக்குள் வாதிட்டு செய்த நல்ல முடிவின் பலன்தான், கதை, அதிகமான கண்ட(ன)த்திற்கு இலக்காகாமல் தப்பியது. கதை இலாகா என்ற பெயரில் நல்லதொரு பணியைச் செய்து, தங்கள் விருப்பப்படி கதையை வெற்றி பெறச் செய்த இம்மூவரின் நிலைமை இன்று மகிழ்ச்சிச் சிகரத்தின் உச்சியில்… இரவு பகலாகச் சிந்தித்து உழன்று கொண்டிருந்த இந்த நண்பர்களுக்கு இன்னும் வேறென்ன வேண்டும் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?.

<strong>நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் -</strong>

முழுமையான வழிகாட்டிக்கு செல்ல <a href=”https://lordmgr.wordpress.com/2010/06/30/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c/&#8221; target=”_blank”>இங்கு </a>சொடுக்கவும்.

One comment on “கதையை செதுக்கிய மூவர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s