கதை தேர்வுக்கு காரணம்

1937-38 ம் ஆண்டுகளில் நான் கல்கத்தாவில் ?மாயா மச்சீந்திரா? படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலம். ஒருநாள் நான் சில நண்பர்களுடன் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்கப் போனேன். ?இப் ஐ வெர் கிங்? (If I were king) என்ற படம் அது. ரோனால்ட் கால்மன் என்ற பிரபல நடிகர் நடித்த படம் அது….அதில் ஒரு காட்சியில் ?நான் மன்னனானால்? என்று பேசுகிறார். என்னென்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கருத்து என் மனதில் அப்போதே பதிந்தது. அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பேன் ?நான் மன்னனானால்?…என்று. இப்போதைய நாடோடி மன்னனின் கருப்பொருள் அப்போதே தோன்றிவிட்டது. அந்தக் காலத்திலேயே ஏழ்மையைப் பற்றியும் மக்களின் நிலையைப் பற்றியும் சிந்தித்தவன் நான். சிந்தித்தவன் என்பதை விட அனுபவித்துக் கொண்டிருந்தவன் என்பதே பொருந்தும். நாட்டிலே இது போன்ற தொல்லைகள் ஏனிருக்க வேண்டும் என்று அடிக்கடி எண்ணுவேன். அப்போது எனக்குக் கிடைக்கும் பதில்கள் கூறியதெல்லாம்,?அன்னிய ஆட்சி இங்கு இருப்பதனால்தான்? என்பதே….ஆனால் அந்த எண்ணம் இன்று வரையிலும் நீங்காத உண்மையாகிவிடும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவே இல்லை. ஆகவே தான், நாட்டில் அன்னிய ஆட்சி அகற்றப்பட்டாலும், நல்லாட்சி நிறுவப்பட்டால்தான் மக்கள் நல்வாழ்வடைவர். என்பதை எடுத்துக் காட்ட நாடோடியின் பாத்திரத்தை அமைத்தேன். ஆனால் அதே நேரத்தில் மன்னனைப் பற்றியும் சிந்தித்துப் பார்த்தேன். இங்கு மக்களை ஆளும் பொறுப்பிலே இருப்பவர்களும் நமது இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் ; அவர்களும் நம்மோடிருப்பவர்கள் தான். ஆனால் அவர்களுடைய ஆற்றலும் அறிவும் திறனும் திண்மையும் அன்னியர்களால் அடக்கி ஆளப்படுகின்றன. ஆக இவர்களும் நம்மோடிணைந்தால்….? இப்படி ஒரு கற்பனை செய்தேன். அதுதான் மன்னனின் பாத்திரம்…. மன்னன் உண்மையை உணருகிறான்; தானும் மக்களுக்காக நாடோடியோடு சேர்ந்து பணியாற்ற முயலுகிறான். ஆனால் அன்னிய பிடிப்பு அவ்வளவு இலேசாகவிடாது என்பதற்கும், தன் ஆதிக்கத்தை மீறிவிடுகிறவர்கள் அன்றுவரை தன்னோடு உண்மையாக உழைத்தவர்கள் என்பதைக்கூடச் சிறிதும் கவனியாது அந்த நல்லவர்களைத் தொலைத்துவிடவும், ஆட்சியிலிருந்து அகற்றிவிடவும் துணியும் என்பதற்கும் உதாரணமாகத்தான், குருநாதர் மன்னனைத் தொலைத்துத் தனது இஷ்டப்படி தலையாட்டும் வேறொரு நபரைத் தேர்ந்தெடுக்க முயன்றார் என்பதைச் சித்தரித்தேன். அதோடு மட்டுமல்ல, மக்களின் பிரதிநிதியான நாடோடியோடு நல்லவனான மன்னன் இணைந்துவிட்டால் எப்படி ஒருவரை ஒருவர் காப்பாற்றி நாட்டை நன்னிலைக்குக் கொண்டுவர முடியும் என்பதையும் விளக்கிக் காட்ட வேண்டுமென்று விரும்பினேன். அதே சமயத்தில் நாட்டில் ?கட்சி தான் பெரிது, மக்களல்ல? என்ற எண்ணத்தில் வாழ்ந்து, தன் கட்சியின் எண்ணத்தை நிறைவேற்ற எந்தவித செயல்களில் ஈடுபடவும் தாயராயிருப்பவர்களைப் பற்றி விளக்குவதற்காகவே வீரபாகுவின் கூட்டத்தாரை காண்பித்து அவர்களின் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட,அன்பைப் பற்றிக் கவலைப்படாத வன்செயல்களைப் பற்றித் தெளிவுபடுத்த முயன்றேன். இவ்வாறு நமது நாட்டு அரசியலையும் மக்களின் நிலையையும் பின்னணியாகக் கொண்டு அமைந்த கதைதான் ?நாடோடி மன்னன்?. ‘மக்கள் எல்லோரும் நல்லவர்கள் தான் . சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் அவர்களை எங்கோ கொண்டு நிறுத்துகின்றன… அவைகளை தமதாக்கி கொண்டால் நாடு நலம் பெறும்’ என்பதைத் தெளிவுபடுத்த முயலுவதுதான் ‘நாடோடி மன்னன்’ கதை. என்னுடைய கொள்கையையும் எடுத்துச் சொல்லி,அதே நேரத்தில் எந்தத் தரப்பினரின் மனத்தையும் புண்பாடுத்தாமல் நிகழ்ச்சிகளை அமைத்து மக்களின் பாராட்டைப் பெற முடிந்தது என்றால் அது பெரிய வெற்றி தானே? அதோடு புதிய, ஆனால் தேவையான,சிலசட்டங்களைச் சொல்லுகிறது ?நாடோடிமன்னன்? கதை.

<strong>நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் -</strong>

முழுமையான வழிகாட்டிக்கு செல்ல <a href=”https://lordmgr.wordpress.com/2010/06/30/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c/&#8221; target=”_blank”>இங்கு </a>சொடுக்கவும்.

One comment on “கதை தேர்வுக்கு காரணம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s