சண்டைக் காட்சிகளின் சிறப்பு

அடுத்து வாட்போர்ப் பயிற்சி என்பது சினிமாவிலே ஒரு புதிய பகுதிக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பெயராகும்.

வாட்பயிற்சி என்றால் வாளை எப்படி எடுப்பது, எப்படிக் கால்களைப் பயன்படுத்தி முன்னால் போவது, பின்னால் வருவது; பக்கவாட்டில் நகருவது, இடது/வலது சாரியாக வாளை எப்படிச் சுழற்றுவது, எப்படி வீசுவது, மனிதனுடைய கழுத்து, மார்பு,கை, இடுப்பு, கால் முதலியவைகளையும் கணுக்கால், முழங்கை, தோள், கண், காது, விரல் போன்றவைகளையும் எப்படி வெட்டுவது, குத்துவது என்பதையெல்லாம் சொல்லிக் கொடுப்பதற்குத்தான் அநேகமாக வாட் பயிற்சி என்று கூறவேண்டும். சினிமாவிலே சொல்லிக் கொடுப்பது அப்படியல்ல. ஒருவன் வருகிறான்; அவன் வாளை வீசுகிறான். அதை மற்றவன் தடுக்கிறான்.இது அவ்வப்போது எடுக்கப்படும் காட்சிகளுக்கு ஏற்ப அமைக்கப்படுவதாகும்.

பலர் நினைப்பதுபோல் துவக்கத்திலிருந்து முறையாக வாட்போர்ப் பயிற்சி கற்றுக்கொடுக்கப்படுவது கிடையாது.

உடல் வலிவும் துணிவும் உள்ளவர்கள் சில நாட்கள் பழகியதும், நாலைந்து வெட்டுக்கள், இரண்டு மூன்று குத்துகள், மூன்று நான்கு வீச்சுக்கள் இப்படித் தெரிந்து கொண்டு படத்தில் சண்டை இட முடியும்….

உதாரணமாகச் சங்கீதத்தைப் பற்றிக் கூறலாம். படங்களில் பாடுகிறவர்களுக்கு இனிமையான குரலும் சிறு அனுபவமும் இருந்தால் அவருக்கு ஏற்ப, பாட்டை இசை அமைத்துப் பாடச் செய்து விடலாம். அவரும் நல்ல பாடகராகலாம், புகழும் பெறலாம். ஆனால் தனியாகச் சங்கீத மேடைகளில் நல்ல பக்கவாத்தியக்காரர்களுடன் அமர்ந்து பாடுவதென்பது சிரமம்; சங்கீத முறைப்படி பாடுவது முடியாத காரியமும்கூட.

சங்கீத முறைப்படி பாடம் பயின்று சினிமாவில் பாடுகிறவர்களும் உண்டு. இதுபோல் தான் சண்டைக்காட்சிகளிலும், அவ்வப்போது கற்றுக்கொண்டு நடிப்பவர்களும் ஓரளவுக்குத் தொழிலைக் கற்றறிந்து படத்திற்கு வேண்டியவைகளையும் அறிந்து நடிப்பவர்களும் உண்டு.

இந்த �செட் � அப்� என்று சொல்லப்படும் அமைப்பைத் தயார் செய்பவர்கள் தான் சண்டைப் பயிற்சியாளர்கள். தென்னகத்தில் குறிப்பாகத் தமிழகத்தில் அப்படிப்பட்டவர்கள் சிலருண்டு. அவர்களில் திரு.ஆர்.என்.நம்பியாரும் ஒருவர்.

ஆர்.என்.நம்பியாரைப் பொறுத்த வரையில் அவருடைய வாட்போர்த் திறமையை ருசிமிக்க அவியல் என்று சொல்லலாம். ஆங்கில முறையும், தமிழ்முறையும் கலந்ததாகும் அது.

சில கலப்புகள் நன்றாக இருப்பதுபோல் இவருடைய கலப்புச் சண்டை அமைப்புகளும் மக்களுக்குப் பிடித்தமாகவே இருக்கின்றன. �நாடோடி மன்ன�னில் இவரால் அமைக்கப்பட்டவை ஒரு சில சண்டைக்காட்சிகளே. உணவு விடுதியில் நடக்கும் சண்டை, நாடோடி குச்சியால் சண்டையிடுவது, நாடோடியும் மன்னனும் சேர்ந்து மற்றவருடன் போரிடுவது, கயிற்றுப்பாலத்தின் மீது, கடலில் ஒரு பகுதி முதலிய சண்டைக்காட்சிகளாகும்.

அவருடைய அடக்கமும், காட்சிகளின் நிலைமையைப் புரிந்துகொண்டு செயலாற்றும் நுண்ணறிவும் பாராட்டுவதற்குரியனவாகும். அவருக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றி வெற்றி பெற்றதற்குறியாகச் சண்டைக் காட்சிகளை மக்கள் ரசிப்பதலிருந்தே உறுதி செய்யப்படுகிறதே, போதாதா?

<strong>நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் -</strong>

முழுமையான வழிகாட்டிக்கு செல்ல <a href=”https://lordmgr.wordpress.com/2010/06/30/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c/&#8221; target=”_blank”>இங்கு </a>சொடுக்கவும்.

Advertisements

2 comments on “சண்டைக் காட்சிகளின் சிறப்பு

  1. […] சண்டைக் காட்சிகளின் சிறப்பு […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s