சவாலை சமாளித்தார் மேனன்

ஒளியை எண்ணும் போதே ஒலியின் நினைவும் உடனே வந்து விடுகிறது. நாடோடி மன்னன் படத்தில், ஒலியமைப்புச் செய்த திரு.மேனன் வாகினி ஸ்டுடியோவில் நிரந்தரமாகப் பணியாற்றுகிற பல ஒலிப்பதிவாளர்களில் ஒருவர்.

ஒலிப்பதிவு செய்பவர்களில் பலர் நாடோடி மன்னன் படத்தின் துவக்கத்தில் பணியாற்றினார்கள்.

எல்லோரும் திறமை மிக்கவர்கள் தான். ஆனால் ஒரு நடிகனோ நடிகையோ உணர்ச்சியோடு நடிக்க வேண்டிய கட்டம் படமாக்கப்படும் போது அது சில நாட்கள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டி வரும். முதல்நாள் வசனங்களை எப்படிப் பேசினார், எந்த பாவத்தோடு பேசினார், எவ்வளவு உரக்கப் பேசினார் என்பதை அறிந்தவர்தான் மறுநாளும் ஒழுங்காக அந்தக் கட்டத்தினுடைய உணர்ச்சி குன்றாமல் ஒலிப்பதிவு செய்ய முடியும். அதை விட்டு முதல் நாள் பதிவு செய்தவர் வேறு, மறுநாள் பதிவு செய்பவர் வேறு என்றிருந்தால் மறுநாள் பதிவு செய்கிறவர் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும் அந்தக் கட்டத்தின் முழுத் தன்மையும் தோன்ற ஒலிப்பதிவு செய்ய முடியாது.

இதைப் போன்ற சோதனை எனக்கு ஏற்பட்டது. ஒரு காட்சியைப் பார்த்தபோது தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறவருடைய குரல் ஆரம்பத்தில் ஒரு மாதிரியும், இடையில் வேறுபட்டும், கடைசியில் இன்னொரு வகையிலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதன் பிறகு படமுழுவதற்கும் ஒரே ஒலிப்பதிவாளர் வேண்டும் என்று வற்புறுத்தினேன். திரு.மேனன் அன்று முதல் ஒலிப்பதிவுக்கு பொறுப்பேற்றார்.

படம் முக்கால் பங்கு வளர்ந்த பிறகு அவர் என்னிடம் மறுபதிவு (ரீ ரிக்கார்டிங்) செய்யப் போவது யார், என்று கேட்டார்.

நீங்கள் தான் செய்ய வேண்டும் என்றேன்.

அவரால் நம்ப முடியவில்லை ! சில நாட்களுக்குப் பிறகு மறுபடியும் கேட்டார், ?யார் மறுபதிவு செய்யப்போவது நானா என்று. ஏன் சந்தேகம் என்று திருப்பிக் கேட்டேன். இதுவரை பலர் என்னிடம் இப்படிச் சொன்னதுண்டு. ஆனால் இங்கு வேலை முடிந்ததும் அவ்வளவுதான். புகழ் படைத்த யாரையாவது வைத்து மறு ஒலிப்பதிவைச் செய்து கொள்வார்கள்?. என்று சொன்னார்.

வாகினியில் மறுபதிவு செய்வதாயின் நீங்கள்தான் என்று உறுதி கூறினேன். அப்பொழுதுதான் – ஒரு படத்தில் வேலை செய்து, உறுதிமொழியும் கொடுக்கப்பட்டு, கடைசியில் வேறொருவரை வைத்து மறுபதிவு செய்து கொண்டதை சொல்லி, அவர்கள் மூன்று நான்கு லட்சத்தில் படமெடுத்தவர்கள். அவர்களே என்னைக் கொண்டு பதிவு செய்யப் பயந்தார்கள் என்றால் பதினெட்டு லட்சம் செலவு செய்து படமெடுக்கும் தாங்கள் எப்படிப் பரிசோதனைக்குத் துணிய முடியும் என்ற சந்தேகத்தில் கேட்டதாகச் சொன்னார்.

மறு பதிவு செய்யும் வேலை நெருங்கியது. நான் மேனன் தான் வேண்டுமென்றேன். என்னுடன் பணியாற்றிவர்களில் பெரும் பாலானவர்கள் என்னிடம் துக்கம் விசாரிப்பது போல், மேனனிடமா ஒப்படைக்கப் போகிறீர்கள்? என்று கேட்டார்கள். ஒரு முக்கியமான நண்பரிடம் சொன்னேன் : நான் நாடோடி மன்னன் படம் எடுப்பதே ஒரு பரிசோதனை. என் விருப்பப்படி எல்லாம் செய்து அதற்கு என்ன பதில் மக்களிடமிருந்து கிடைக்கிறது என்ற சோதனையில் இறங்கியிருக்கிறேன். முன் அனுபவமில்லாத என்னை நீங்கள் இயக்குநராக ஏற்றுக் கொண்டதுமல்லாமல், பரவாயில்லை என்றும் சொல்ல முடிந்ததென்றால் ஒலிப்பதிவு செய்வதில் முன் அனுபவமுள்ள ஒருவருக்கு அதில் பெரிய பொறுப்பை ஒப்படைப்பது தவறல்ல  என்று.

இந்த பதில் அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றறிந்தேன்.

?எடுத்துப் பார்ப்போம் . நன்றாக இல்லையென்றால் வேறு ஆளை மாற்றிக் கொள்ளலாம்? என்று சொன்ன பிறகு கொஞ்சம் ஆறுதலுடன் போனார்.

மறு ஒலிப்பதிவு (ரீ ரிகார்டிங்) என்பது படத்திற்கு வெற்றியையோ, தோல்வியையோ கொடுப்பதில் பெரும் பங்கு எடுத்துக் கொள்வதாகும்.
உணர்ச்சியோடு பேசுகிற பேச்சின் உச்சரிப்புகளையும் கருத்துகளையும் மக்களுக்குப் புரியாதபடி மறு ஒலிப்பதிவில் செய்துவிட முடியும் ! அது போலவே சாதாரணமாக இருக்கும் கட்டங்களையும் ஒலிகளைச் சரிவரப் பதிவு செய்வதின் வழியாக உணர்ச்சி பொருந்திய கட்டமாகத் தோற்றுவிக்கவும் முடியும். அதுவரை நேரடியாகத் தானே ஏற்றுச் செய்யாத பெரும் பொறுப்பை வெற்றிகரமாகவே நிறைவேற்றித் தந்து, படத்தின் எல்லாக் கட்டங்களையும் சுவையுள்ளதாகச் செய்தவர் திரு.மேனன்.

மறுபதிவுச் சமயம் பல இரவுகள் தூக்கம் என்பதே இல்லாமல் நான் வேலை செய்து வந்த காலத்தில் என்னுடன் தானும் இருந்து, படம் பிரமாதம் என்று யாராவது சொல்வார்களானால் அதற்கு உதவி செய்த, அதுவரை தன்னை ஒன்றும் தெரியாதவன் என்று மூலையில் உட்கார வைத்தவர்கள் திகைக்கும் வண்ணம் செயலாற்றிய திரு. மேனனுக்கு வாழ்வில் ஒரு திருப்பமென்றும் வெற்றியென்றும் சொல்லலாமா, கூடாதா?

நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் –

முழுமையான வழிகாட்டிக்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

One comment on “சவாலை சமாளித்தார் மேனன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s