சுப்பிரமணியம் அவர்களின் பெருந்தன்மை

டைரக்டர் திரு.கே.சுப்பிரமணியம் அவர்கள் “நாடோடி மன்னன்” வெற்றி பெறவேண்டுமென ஆசைப்பட்டவர்களின் முதல் வரிசையிலே நிற்பவர்களில் முதன்மையானவர். அவருக்கு என் மீது நல்ல பற்று உண்டு. ஆரம்பத்தில் அவரை எனக்கு மேற்பார்வையாளராக இருக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் சம்மதித்து ஒரு காட்சிக்கு வந்தார். பிறகு அவர் என்னிடம் �நீயே சரிவரச் செய்கிறாய், என்னை எதற்காகக் கஷ்டப்படுத்த வேண்டும். வெளியே உனக்காக என்னென்ன செய்யவேண்டுமோ அவைகளைச் செய்கிறேன்,சொல் என்று கூறிவிட்டார். அவருடைய சொற்படி நானே முழுப்பொறுப்பும் ஏற்றேன்.

வேறொருவராக இருந்தால் இந்த வாய்ப்பை இழந்திருக்கவே மாட்டார். ஒன்றும் செய்யவில்லையென்றாலும் பெயரும், புகழும் கிடைப்பதை ஏன் விட்டுவிட வேண்டுமென்று விரும்புவார்கள் � ஆனால் கே. சுப்பிரமணியம் அவர்கள் பெருந்தன்மையோடு விலகிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் வெளியே எனக்காகப்பட்ட கஷ்டம் எழுதுவதற்கு முடியாத அளவு போற்றுதற்கு உரியதாகும்.

நாடோடி மன்னனில், வெளிப்புறக்காட்சிகள் சிறப்பாக அமைவதற்குக் கேரளாவில் உள்ள மூணாறு போன்ற இயற்கை வனப்பு மிக்க இடங்களைப் படமெடுக்க ஏற்பாடு செய்து உதவியவர் திரு.கே.சுப்பிரமணியம் அவர்கள் தான்.

படத்தைச் சீக்கிரம் வெளியிட்டுவிட வேண்டும் என்பது அவருடைய ஆசை. வேகமாக வருவார்…�இன்னும் எத்தனை காட்சிகள் பாக்கி? இந்தத் தேதியில் வெளியிடுவோமா?… என்பார்…பார்ப்போம் என்பேன்….நம்பி ஏமாறுவார்; பிறகும் வந்து என்னப்பா இன்னும் இரண்டு மூன்று காட்சிகளிருக்குமா? என்பார், வெளியிடும் தேதியைக் கேட்பார் பார்ப்போம் என்பேன்; மறுபடியும் ஏமாற்றம். ஆனால் அவர் சளைக்கமாட்டார். மீண்டும் கேட்பார் புத்தி சொல்லியபடி…இவ்வளவு ரூபாய்கள் செலவழிந்துவிட்டன; இனியும் தாமதித்தால் சரியல்ல…இந்தத் தேதியில் வெளியிடலாமா? என்று…

அநேகமாகப் பார்ப்போம் என்பேன்….இதற்குப்பிறகு ஒளிப்பதிவாளர் ராமுவுக்காவது நான் சொல்லியிருப்பேனென்று அவரிடம் �இன்னும் எத்தனை காட்சிகள் பாக்கி?� என்று கேட்டார் பொறுமை இழந்து….

பாவம், ராமு என்ன செய்வார்! நான் சொல்லியிருந்தாலல்லவா?…

நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம்

முழுமையான வழிகாட்டிக்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

One comment on “சுப்பிரமணியம் அவர்களின் பெருந்தன்மை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s