சுவரிருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்?

ஒரு படம் நன்றாக இருக்க வேண்டுமாயின் அதனுடைய கதை நன்கு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையாயின் நடிகர், ஒளி,ஒலி இயக்குநர்கள் முதலிய எல்லோரும் எவ்வளவு திறமை மிக்கவர்களாக இருப்பினும் தோல்வியே விளைவாக இருக்கும். வேண்டுமாயின் தனிப்பட்ட முறையில் சிலர் தங்கள் திறமைக்கு “சபாஷ்” பெறலாம் ; அவ்வளவு தான், சில படங்களுக்கு விமர்சனம் எழுதப்படுவது போல் “முயற்சி போற்றத்தக்கது. ஆனால் பயனற்றது” -என்று ஆகிவிடும்….

நான் எப்போதுமே கதையில் அதிக கவனம் செலுத்துவது வழக்கம். அந்த வகையில் “நாடோடி மன்னன்” கதை அமைப்பிலும் நான் அதிக கவனம் வைத்தேன்.

“நாடோடி மன்னன்” கதையிலே குறையே கிடையாது என்று நான் வாதிக்க தயாராயில்லை. அந்த அளவுக்கு உண்மையை மறைக்கும் ஆணவக் குருடனாக நான் ஆகிவிடவில்லை.

அதிக அளவில் குறைகள் அற்ற கதை அமைப்புக் கொண்டது “நாடோடி மன்னன்” என்று மட்டும் என்னால் துணிந்து கூறமுடியும்

எத்தனையோ பெரிய அறிவாளர்கள் எழுதும் கருத்துக்கே குற்றம் காணும் திறம் படைத்தவர்கள் உள்ள இந்நாட்டில், ’நாடோடி மன்னன்’ கதையில் குற்றம் காணுகிறவர்கள் இருக்க முடியாது… இருக்க கூடாது என எண்ணுகிறவன் இருந்தானானால் அவன் பரிதாபத்திற்குரியவன் என்பதை யார் மறுக்க முடியும்? ஆனால் மீண்டும் சொல்லுவேன். ’நாடோடி மன்னன்’ கதையில் குறைகள் அதிகமிருக்காது.அதுவும் மக்களைக் கீழ்த்தரச் செயலுக்கு இழுத்துச் செல்லும் எந்தக் கேடான கொள்கையும் அதிலே இல்லை என்று துணிந்து கூறுவேன்.

சிலர் சொன்னார்கள் எழுதினார்கள் ’நாடோடி மன்னன்’ கதை ’ஜெண்டாவின் கைதி’ என்ற படத்தின் மறுபதிப்பு என்று…..

நாங்களே முதன் முதலாக வெளியிட்ட விளம்பரத்தில் ’ஜெண்டாவின் கைதி’ என்ற ஆங்கிலக் கதையின் தழுவல் என்று அறிவித்தோம். ஆனால், படமாக்கிய சமயம் அதன் அடிப்படையே மாற்றப்பட்டுவிட்டது என்பதைக் கவனிக்காமல் சிலர் இந்தக் கதையில் மாற்றமெதுவுமே இல்லை என்று எழுதினார்கள்; பேசினார்கள். அந்த அன்பர்களுக்கு ஒரே ஒரு விளக்கத்தின் மூலம், எவ்வளவு பெரிய அளவில் நம் நாட்டுப் பண்புக்கு ஏற்றவாறு அந்தக் கதை மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

ஜெண்டாவின் கைதி என்ற கதையில் மன்னனுடைய மனைவி மன்னனைப் போன்று நடிப்பவனிடமும் நெருங்கிப் பழகுகிறாள்.

போலி மன்னன் கடைசியில் திரும்பிப் போகும்போது அவளிடம் விடை பெறுகிறான். அவள் அவனை யாரென்றறிந்த பின்னும் இணைந்து பழகி, ’நான் உன்னை விரும்புகிறேன்; ஆனால் நான் அரசி’என்றவாறெல்லாம் எண்ணத்தைச் சொல்லுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது ஆங்கிலக் கதையில்.

நாடோடி மன்னனில் நாடோடியைத் தன் கணவனாக எண்ணி முதன் முதலில் மலர் தூவுகிறார் இராணி. நாடோடியோ, தான் இன்னொருவனுடைய மனைவியிடமிருந்து அவ்விதத் தொடர்பைப் பெறுவது தகாது…அவள் இடும் மலர் கூடத் தன்மேல்படக் கூடாது என்று எண்ணி விலகிப் போகிறான். …பிறகு, அவளோ, அவனை அன்னியன் என்று, ஆனால் நல்லவன் என்றறிந்ததும் ’அண்ணா’ என்று முறை கொண்டாடுகிறாள். அடிப்படைப் பண்பாட்டிலேயே ஜெண்டாவின் கைதிக்கும் நாடோடி மன்னனுக்கும் பெரிய மாறுபாடு இருக்கிறது.

மேலும் ஜெண்டாவின் கைதியில் போலி மன்னன் உண்மையான மன்னனின் உறவினன். இங்கோ எந்த உறவுமில்லாதவர்கள் மட்டுமல்ல; நேர் எதிரான எண்ணம் கொண்டவர்கள்.

ஒருவன் மன்னன் . இன்னொருவன் நாடோடி ; மன்னன் என்ற பதவியையே ஒழிக்க உழைப்பவன். ஜெண்டாவின் கைதி கதையில் அரசை ஆட்டிப் படைக்கும் குருநாதர் கிடையாது. தீவு என்பதோ தீவின் தலைவன் என்பவனோ கிடையாது. கடைசியாக ஆங்கிலக் கதையின் அடிப்படையையே மாற்றி ’நாடோடி மன்னன்’ முழுக்க முழுக்கச் சில கொள்கைகளை இலட்சியமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு கதையை நான் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? நம் நாட்டில் சீர்திருத்தம், கற்பனைத் திறன் இவைகளெல்லாம் உள்ளவர்களில்லையா? அவர்களைக் கொண்டு புதிய கதையை எழுதச் செய்து படம் எடுக்க கூடாதா?

இப்படிப்பட்ட கேள்வி நியாயமானதுதான்.

இந்தக் கதையை நான் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு…

<strong>நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் -</strong>

முழுமையான வழிகாட்டிக்கு செல்ல <a href=”https://lordmgr.wordpress.com/2010/06/30/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c/&#8221; target=”_blank”>இங்கு </a>சொடுக்கவும்.

Advertisements

One comment on “சுவரிருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்?

  1. […] சுவரிருந்தால் தானே சித்திரம் வரைய மு… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s