சொந்தமாக ஏன் தயாரித்தேன்?

கடைசியாக….

நான் சொந்தத்தில் இப்படத்தை ஏன் ஆரம்பித்தேன்?

எத்தனையோ படங்கள் காத்திருக்கும் இந்த நேரத்தில், அவைகளை முடித்துக் கொடுத்தாலே வாழ்க்கைக்குத் தேவையான பணம் சம்பாதித்து நிம்மதியாக இருக்கலாமே; அதைவிடுத்துப் பணத்தை செலவழித்துக் கடும் உழைப்பை ஏற்று ஏன் இப்படிச் சொந்தப்படம் எடுக்க வேண்டும்? ? இப்படிப் பல கேள்விகளை எனது நல்வாழ்வை விரும்பியவர்களும், என்னைக் கேலி செய்ய விரும்பியவர்களும் கேட்டார்கள்.

கருணாநிதி

மேகலாவில் பங்குதாரனாக இருந்து ?நாம்? என்ற படத்தை வெளியிட்ட பிறகு, வேறு வழியில்லாத நிலையிலும் எனது விருப்பப்படி முழு பொறுப்புடன் படம் எடுக்க வேண்டுமென்று ஆசையுடன் எம்.ஜி.ஆர் புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் கம்பெனியொன்றைத் துவக்கினேன் (துவக்கினோம் நானும் தமையனார் எம்.ஜி.சக்கரபாணி அவர்களும் சேர்ந்து). அதற்கு கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கள் கதை, வசனம் எழுதித் தருவதாக இருந்து விடிவெள்ளி என்று பெயரும் இடப்பட்டுக் கதையும் எழுதத் துவங்கினார். இங்கு இப்போது வெளியிடக் கூடாத பல காரணங்களால் தாமதமாயிற்று. எதிர்பாராதவிதமாகக் கலைஞர் அவர்கள் கல்லக்குடிப் போராட்டத்தில் சிறையில் தள்ளப்படவே, எம்.ஜி.ஆர் புரொடக்‌ஷன்ஸ் என்ற நிர்வாகத்தை நிறுத்தி வைத்து, எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தைத் துவக்கினோம்.

அன்று தோன்றிய எண்ணம் எப்போதும் என் மனதைவிட்டு அகன்றதே இல்லை. “ஓடு மீன் ஒட உறுமீன் வருமளவும்” என்ற படி காத்திருந்தேன். அந்த விருப்பத்தை இப்போது நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. எப்படி இழந்துவிட முடியும்? மனதிலே ஏற்பட்ட புண்ணை அந்த மனதிலே ஏற்படும் ஆறுதலால்தான் ஆற்றிக் கொள்ள முடியும்….

எனது உள்ளத்திலே ஏற்பட்ட புண்ணை நாடோடி மன்னன் என்ற படத்தால் தான் ஆற்றிக்கொள்ள முடிந்தது.

அதற்குள் எனக்கேற்பட்ட சோதனைகள் தான் எத்தனை !

இவனுக்கு எப்படியோ கொஞ்சம் புகழ் வந்துவிட்டது. அதற்குள் கிடைத்ததை வைத்து கொண்டு வாழ வகையறியாதவன் ? இது ஒரு வகை….

டைரக்டராமே டைரக்டர்… என்ற திமிர் !?  இதுவும் ஒரு வகை.

லாட்டரி அடிக்கப்போகிறான்; நம் கண்ணால் காணப்போகிறோம்? இப்படி விரும்பியது ஒரு கூட்டம். (நான் கஷ்டப்பட்ட வாழ்க்கையிலிருந்தபோது இவர்கள் தான் என்னைக் காப்பாற்றியவர்கள் என்று எண்ணம் போலும்!)இப்படிச் செலவு செய்தால் இவன் எங்கே படத்தை முடிக்கப் போகிறான்… தனது விருப்பத்தை வேறு விதமாகக் கூறும் புத்திசாலிகள்.

எதை எதையோ எடுக்கிறான் ; திரும்பத் திரும்ப எடுக்கிறான் ; பாவம் மாட்டிகொண்டு முழிக்கிறான்?

– எனது நிலையைக் கண்டு மனதிலே உள்ள மகிழ்ச்சியை மறைக்க முடியாமல் வெளியே வரும் வார்த்தைகள்.

சீர்திருத்தமாம் சீர்திருத்தம்; அங்கே போய்விட்டு வரட்டும். ஒண்ணும் இருக்காது (தணிக்கைக் குழுவினரைப் பற்றிப்பேசும் வார்த்தை).

இவ்வாறெல்லாம் பேசுவதை என் காதுகளாலேயே கேட்டேன். அப்போதெல்லாம் எனக்கு ஏசுவின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தன.

தான் செய்வது இன்னதென்றறியாத அப்பாவிகள்? இவ்வாறு எண்ணி நான் அவர்களைப் பார்த்துச் சிரித்தேன். அவர்களும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள்.

ஒருவேளை என்னைப் பைத்தியக்காரன் என்று சிரித்தார்களோ, அல்லது என்னை?அப்பாவி? என்றெண்ணித்தான் சிரித்தார்களோ…எப்படியோ அவர்கள் அத்தனை பேரும் சிரித்தார்கள். படம்வெளியிடப்பட்டு, பத்திரிகைகள் புகழ்ந்து பாராட்டியதைக் கண்டு பாவம், அப்போது என்னைப் பார்த்துச் சிரித்தவர்கள் அழுதார்கள். அவர்களில் சிலர் இன்னும் அழுது கொண்டிருக்கிறார்கள். காரணம் என்ன? நான் தோல்வி அடைவதற்குப் பதிலாகத் தப்பிப் பிழைத்து விட்டேனே என்பதற்காக…. இவர்கள் இவ்வாறு தொல்லைப்படுவதற்கு, நடக்கக் கூடாதது என்ன நடந்துவிட்டது.. தணிக்கைக்குழுவினர் ஒரு சிறு துண்டுகூட வெட்டவில்லையாமே ! படத்தை முடித்து வெளியிட்டு விட்டானே ! நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்களே…. மிக நன்றாக வசூல் ஆகிறதாமே….. நூறு நாட்களுக்குமேல் பல ஊர்களிலும் நடை பெறுகிறதாமே ! எங்கும் பாராட்டு விழாவாமே !

அடுத்த படம் பொன்னியின் செல்வனாமே ! ….

இவைகள் தான் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆத்திரத்திற்கும் துக்கத்திற்கும் காரணம் !

இதற்கு நான் என்ன செய்ய முடியும்…..

எனக்குத் தெரிந்ததை என்னுடைய மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரிய நண்பர்களின் துணை கொண்டு நிறைவேற்ற முயன்றேன். அது வெற்றி பெற்றதென்றால் இதற்கு யார் காரணம் , இந்த வெற்றி யாருக்கு?

உண்மைக்கும், உழைப்புக்கும், நேர்மைக்கும், நியாயத்திற்கும், அன்புக்கும், ஆர்வத்துக்கும் கிடைத்த வெற்றியாகும். வெற்றியென்ற பதம் இதற்குப் பொருத்தம் தானென்றால் அந்த வெற்றி தனிப்பட்ட எவர்க்கும் சொந்தமானதல்ல…..

கலைத் தொழிலாளர்கள் (லைட்பாய் என்றழைக்கப்படுகிறவர்கள் முதல் எல்லோரும்) நாடோடி மன்னனுக்காக உழைத்த உழைப்பு அளவிடற்கரியது. அவர்கள் எதனை எதிர்பாத்தார்கள்? அவர்களுக்கு என்ன தான் கிடைத்தது ? இதுவரை ஒன்றுமே இல்லை. ஆனால் அவர்களின் கடமை உணர்ச்சி அவர்களைத் தூண்டி அரும்பாடுபடச் செய்தது. அதன் விளைவுதான் இப்போது கூறப்படும் வெற்றி…..இப்படிச் சொல்லிக் கொண்டே போனால் உண்மையில் இந்த வெற்றி யாருக்கு??

படம் எடுக்கப்படுகிறதே யாருக்காக?…

பட உரிமையாளரின் இரும்புப்பெட்டியை நிரப்ப…நட்சத்திரங்கள் பணம் சேர்க்க….

சிலர் புகழ்பெற…..இப்படிப் பதில் வரும் சிலரிடமிருந்து,

மக்களுக்கு வாழ்வின் இலட்சியத்தை எடுத்துக்காட்ட,

மக்களை ஒன்றுபடுத்த,

நாட்டுப்பற்றை உண்டாக்க ? அதிகப்படுத்த, இல்லாத சுதந்திரத்தைப் பெற, காப்பாற்ற!

இப்படிப் பதில் கூறுவார்கள் இலட்சியப்பற்றுடைய மக்கள் கலைஞர்கள்.

இப்படிப் பேசும் கலைஞர்களைக் கேலி பேசுவோர்களும் உண்டு…..

?இது ஜனநாயக உலகம். யாருக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்கின்றனவோ அவர்கள்தான் நாட்டை ஆளுவார்கள். நமது நாடு ஏழைகள் நிறைந்த நாடு, எழுதப்படிக்கத் தெரியதாவர்களைப் பெரும்பான்யினராகக் கொண்டது நமது நாடு….

இவ்வாறு விளக்கம் தருகிறார்கள் பெரும் பெரும் தேசத் தலைகள் எல்லாம்.

இலட்சக்கணக்கான ரூபாய்களுக்குச் சொந்தக்காரரான ஒரு படமுதலாளி, முதலாளி ஒழியவேண்டும், முதலாளிகள் ஏழைத் தொழிலாளியின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டை போன்றவர்கள். என்றெல்லாம் நம்புகிற ஒரு எழுத்தாளரையோ, ஏழை  முதலாளி என்பது வேறு நாட்டிலும் கூட இருக்கிறது, நாடு விடுதலை பெற்றாலன்றி, இன உணர்ச்சி தோன்றி ஒன்றுபட்டாலன்றி, பகுத்தறிவு ஏற்பட்டு, சமுதாயச் சீர் கேடு ஒழிந்தாலன்றி, சமூகத்திற்கோ, ஏழைகளுக்கோ விமோசனமில்லை? என்ற கொள்கையைக் கொண்ட ஒரு எழுத்தாளரையோ அழைத்துப் பணம் கொடுத்து அவரவர் கொள்கைக்கேற்ப கதை, வசனம், பாடல்கள் அமைத்துப் படம் எடுத்து வெளியிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அந்தப்படத்தை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து, அதிலே சொல்லப்படும் கருத்தைப் புரிந்து, அதன்படி சட்டம் கொண்டு வர வேண்டுமென்று விரும்புகிறார்கள் என்று நினைத்தால் அந்த மக்களுடைய ஓட்டுக்கள், அவர்கள் ஆசைப்படும் ஆட்சியை ஏற்படுத்த யார் விரும்புகிறார்களோ அவர்களுத்தான் கிடைக்கும். அப்படிப் பெரும்பான்மையான ஓட்டுக்கள் பெற்று ஆட்சி பீடத்திலே அமருகிறவர்களுடைய திட்டப்படி சட்டம் கொண்டு வந்தால் லட்சக் கணக்காகப் பணம் சேர்த்து சுகபோகம் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உதவியா செய்யும்.

இதை உணராதவர்கள் தான் பணத்தைப் பெருக்கப் பட முதலாளிகள் ஏதேதோ கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்று கூறுவார்கள். அவர்கள் என்ன நினைத்துப் படம் எடுத்து வெளியிட்டாலும் பலன் மக்களுக்கு ? குறிப்பாக ஏழைகளுக்கு நன்மை ஏற்படுத்தி விடுகிறது. இந்த வகையில் நாடோடி மன்னன் அதிக நாட்கள் ஓடி நிறைய வருமானம் கிடைத்தப் பல வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் லாபமடைந்திருக்கலாம். ஆனால் நாடோடியின்….(என்னுடைய) ஆசை நிறைவேறுகிறது. மக்களுக்கு எதைச் சொல்ல விருப்பமோ அதைச் சொல்லிவிட்டேன்.

மக்களுடைய எண்ணத்தைச் சட்டமாக்கி நடைமுறைக்குக் கொண்டு வந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை நாடோடி மன்னன் மூலம் மக்கள் சொல்லுகிறார்கள். ஆகவே எல்லாத் தரப்பினரின் எல்லா மக்களின் எண்ணத்தை நாடு முழுவதும் சொல்ல வைத்த மக்களின் வெற்றிதான் இது என்று குன்றேறிச் சொல்லலாம். மக்களுக்குப் பிடிக்காவிடில் வெற்றி பெற்றிருக்காது. (படம் பல நாட்கள் ஓடியிருக்காது.) ஆகவே மக்களின் எண்ணம் மன்னனின் வாயிலாக ஒலிக்கப்பட்டது என்று பொருள். மக்களின் குரல் ஏகோபித்துப் பாராட்டப்படுகிறது என்றால் இது யாருக்கு வெற்றி என்ற கேள்விக்கு, மக்களின் வெற்றி நமது நாட்டின் வெற்றி! நமது இனத்தின் வெற்றி! இன்பத் திராவிடத்தின் வெற்றி….என்று பெருமையோடு தலை நிமிர்ந்து கூறி, மக்கள் வாழ்க ! மக்களுக்காக வாழும் மக்கள் கலைஞர்கள் வாழ்க எனத் துணிந்து கூறுகிறேன்.

வணக்கம், வாழ்க திராவிடம் !

நன்றி !

* நாடோடி மன்னன் வெற்றி விழா மலர்

* வாழ்த்துக்கள்

முப்பிறவி எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு
மற்றும் சென்னை நகர எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழு!

நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் –

முழுமையான வழிகாட்டிக்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

One comment on “சொந்தமாக ஏன் தயாரித்தேன்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s