சோடனை, ஒப்பனை, அலங்காரம்

காட்சி சோடனைகளை நிர்மாணிக்கும் பொறுப்பைத் திரு.நாகேசுவரராவ் அவர்கள் ஏற்றிருந்தார். அவருடைய அக்கறைமிக்க, அனுபவமிக்க கலைத்திறமை மிகவும் பயன்பட்டது. படத்தின் தரம் உயர்வாக இருக்கிறதே என்று சொன்னால் அதற்குத் திரு.நாகேசுவரராவும் ஒரு காரணம் என்பது ஒன்றே அவர்கள் திறமைக்கு வெற்றி என்று தானே பொருள்….?

ஒப்பனையாளர் திரு. இராமைதாஸ் அவர்கள் திரு. அரிபாபு அவர்களின் சீடன் என்று தன்னைக் கூறிக்கொள்பவர் ; சில வருடங்கள் அவருடன் பணியாற்றி அனுபவம் பெற்றவர் ; எனது சிறுவயது முதல், என்னுடன் பழகியவர். நாங்கள் இருவரும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் ஒன்றாக நடித்தவர்கள். தென்னிந்திய நடிகர் சங்கப் பத்திரிகையான ?நடிகன் குரலில் எனது வாழ்க்கைப் பாதைப் பகுதியில் இவரைப் பற்றிக் குறிப்பிட்டு இனியும் குறிப்பிட இருப்பதாலும்அதைப்பற்றி இங்கு எழுத வில்லை.

இவர் ஆங்கிலக் கல்வியறிவு பெறாதவர் ; எந்தப் புத்தகத்தையும் படித்து இக்கலையைக் கற்றவர் அல்ல. அனுபவத்தினால் மட்டுமே தெரிந்தவர் . அவர் பத்திரிகைகள் புகழுமளவிற்குத் தனது பொறுப்பை நிறைவேற்றி வெற்றி பெற்றார் என்று ஏன் கூறக்கூடாது?….

இவருக்குத் துணையாக இருந்தவர் முத்து என்பவர். எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் ஒப்பனையாளர். அப்படியிருந்தும், தனக்கு முதன்மை ஸ்தானம் படத்திலே தரவில்லையே என்று எண்ணாத நல்ல உள்ளம் படைத்தவர் ; இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியவை பல உண்டு என்ற எண்ணம் கொண்டவர். அவர் வெறும் கலைஞன் மட்டுமல்ல ; நாட்டுப்பற்றும் மிக்கவர். நான் அரசியலாரால் கைது செய்யப்பட்டு மத்திய சிறைக்கோட்டத்தில், சிறை அதிகாரியின் முன் அழைத்துச் செல்லப்பட்டேன். கே.ஆர்.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., டி.வி.என். முதலிய நண்பர்களுடன் பலர் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் எங்களைப் பார்த்தவுடன் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். அவர்களுக்கு வணக்கம் செய்தோம். அவர்களில் ஒருவர் தன்னை மறைத்துக்கொள்ள முயன்றார். கவனித்தேன். மேலே குறிப்பிட்ட ஒப்பனையாளர்தான் அவர்.

அவர் கலப்புமணம் செய்தவர், ஒழுக்கமாக வாழ்பவர் ; தன்னடக்கமானவர் ; தொழிலில் மிக்க அக்கறை காண்பிப்பவர். இவர் படப்பிடிப்பில் ஒத்துழைத்து ஒப்பனைக்குப் பாராட்டுக் கிடைக்க உழைத்தவர். விளம்பரமடையாத இவரும் பாராட்டப்படுவது துணைத் தொழிலாளர்களுக்கு வெற்றியென்றுதானே பொருள்

தலையலங்காரம் செய்த திரு.இரங்கசாமி மர்மயோகி படத்தில் எனக்குத் தலைமுடியைச் சுருட்டி ஒழுங்கு படுத்தியவர். சமீப காலமாக மீண்டும் நான் நடிக்கும் படங்களில் அவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அவர் புல்லாங்குழல் வாசிக்கப் பழகிப் பிறகு இந்தத் தொழிலுக்கு வந்திருப்பவர் ; மிக கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து கொண்டிருப்பவர் ; தலைமுடியை (டோப்பா என்றும் விக் என்றும் சொல்லுவார்கள்) அவரவர் முகத்திற்கு ஏற்றாற்போல் அமைத்து கொடுப்பதில் நிபுணர் ; நல்லவர். எனது மேக்-அப்பில் நல்ல மாற்றத்தை காணும்படி செய்தது இவருடைய தலையலங்காரம்தான். நாடோடி , மன்னன் இவ்விருவரின் வெவ்வேறு தோற்றத்திற்கு ஏற்றார் போலவும், இருவரும் ஒரே மாதிரி தோன்றும் போதும்… இவர் அமைத்துக் கொடுத்த தலையலங்காரம் போற்றுதற்குரியதாகும். இந்த இளைஞர் தனது உழைப்பில் உயருபவர் . தனது தனித்தன்மை வாய்ந்த திறமையால் நல்ல ஒரு ஸ்தானத்தை எய்தும் இவர் இந்தப் படத்தின் மூலம் வெற்றிப் பாதையை அடைந்திருந்தார் என்று உறுதியாகக் கூறலாம்.

உடை அலங்காரம், பாத்திரங்களின் தன்மையையும் தகுதியையும் எடுத்துக் காட்டப் பெரிதும் உதவுவதாகும். திரு.பிரான்ஸிஸ் என்பவர் வாலிபர் ; அதிக விளம்பரம் பெறாதவர் ; ஆனால் நல்ல உழைப்பாளி ; ஆர்வமிக்கவர். ஆங்கில பாணியில் அவர் தைக்கும் உடைகள் மிகக் கவர்ச்சிகரமாயிருக்கும்.

நாம் எவ்வளவு அவசரப்பட்டாலும், ஆத்திரப்பட்டாலும் அவர் நிதானமாகவே பேசுபவார், காரியத்தைச் செய்வார்.

இது அலட்சியத்தாலல்ல ; செய்கிற காரியத்தைச் சரிவரச் செய்ய வேண்டுமே என்ற ஆசை…? நாடோடி மன்னனில் உடை அலங்காரங்கள் பொருத்தமாக இருக்கின்றன ; பிரமாதமாக இருக்கின்றன என்று போற்றப்படுவது திரு. பிரான்ஸிஸ்ஸினுடைய தொழில் திறமைக்கு பெரும் வெற்றியென்றுதானே சொல்ல வேண்டும்.

இவருக்கு உடன் இருந்து உதவி செய்தவர் இராசையா என்பவர். இவர் எம்.ஜி.ஆர். நாடகமன்ற உடை அலங்காரப் பகுதியில் பணியாற்றுகிறவர். துவக்கத்திலிருந்து ஒவ்வொரு காரியத்தையும் தனதாக எண்ணிக் கண்ணுங்கருத்துமாக கவனித்து உழைத்தவர்.

அவருக்கு சினிமா அனுபவம் புதிது. முழுப்படத்திலும் பொறுப்பேற்றுச் செயலாற்றியது இதுவே முதன் முறை. அந்த நிலையில் திரு.பிரான்ஸிசுக்கு மிகமிக ஆதரவாக இருந்து உடை அலங்காரப் பகுதிக்குப் பெருமை தேடித் தந்த திரு. இராசையா உழைப்பாளர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்து, தன்னுடைய பொறுமைக்கு வெற்றி தேடிக்கொண்டார் என்று நிச்சயமாகச் சொல்லலாமே.

<strong>நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் -</strong>

முழுமையான வழிகாட்டிக்கு செல்ல <a href=”https://lordmgr.wordpress.com/2010/06/30/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c/&#8221; target=”_blank”>இங்கு </a>சொடுக்கவும்.

One comment on “சோடனை, ஒப்பனை, அலங்காரம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s