திறமையை நிரூபித்தார் எம்.என்.ராசம்

திருமதி எம்.என்.இராசம் அவர்கள் தான் அடுத்தபடியாகப் படத்தில் தோன்றுபவர். எவ்வளவு நடிப்புத் திறமை உடையவர்களையும் சோதனை செய்துவிடும் பாத்திரம் தான் இவருக்குக் கொடுக்கப்பட்டது. நல்ல குணமும் பண்பாடும் படைத்தவள் மனோகரி. இளமையின் உணர்ச்சி வேகத்தில் துவளுகிறவள் மனோகரி. ஆனால் அதற்காகத் தன் கற்பையோ, நேர்மையையோ ஒரு சிறிதும் இழக்க விரும்பாதவள் மனோகரி. தனது அன்புக்கணவன் வேறொருத்தியோடு பழகுவதாயும், தன்னை அலட்சியப்படுத்துவதாயும் நினைப்பவள். தன்னுடைய வாழ்வுக்கு ஊறு தேடும் ஒருவர் மீது யாருக்கும் எளிதில் ஆத்திரம் ஏற்படுவதுதான் மனித இயல்பு. குறிப்பாகப் பெண்கள், கணவன் வேறொரு பெண்ணைப் புகழ்ந்து பேசுவதைக் கூடப் பொறுக்கமாட்டார்கள்.
ஆனால், மனோகரி தனக்கு எதிராக இருக்கும் மதனாவுக்குக்கூட எந்தத் துன்பமும் நேரக்கூடாது என்று எண்ணும் பொறுமைசாலி . தன் கணவன் தவறு செய்வதைப்பற்றிக் கூடக் கவலைப்படவில்லை. அவருக்கு அதனால் ஆபத்து நேரக்கூடாதே என்று நினைக்கும் அன்புள்ளவள். வசியம் போன்றவைகள் கேலிக்கு இடமானவைகள் ; அறிவுக்குப் பொருத்தமற்றவை என்ற நல்ல அறிவும் திடமும் பெற்றவள். மேலும் தான் அதுவரை கணவன் என நம்பியிருந்தவன் வேறு யாரோ என்று குழம்பினாலும், அவனுடைய நல்லெண்ணத்தை உணர்ந்து அவனைத் தன் அண்ணனாக ஏற்று மன்னிப்புக்கோரும் நற்பண்புடையவள்.
சூழ்ச்சி, பொறாமை, அடுத்துக் கெடுத்தல், பண்பற்ற செயலிலே ஈடுபடுதல் போன்றவைகளைக் குணமாக கொண்ட பாத்திரங்களில் தான் திருமதி எம்.என் இராசம் அவர்கள் பெரும்பாலும் இதற்கு முன் நடித்திருக்கிறார்கள்.

மனோகரி பாத்திரமோ நேர் எதிர்மாறானது.

எம்.என்.இராசம் அவர்களை இந்த வேடத்திற்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக அறிந்ததும் பலருக்கு அச்சம் ஏற்பட்டது. மனோகரி வேடமே சரியாக அமையாது என்று எண்ணினார்கள். யோசனைகளை எனக்கு யாரும் சொல்லலாம் ; எப்படியும் சொல்லலாம் . முடிவை மட்டும் என்னிடமே தான் வைத்துக் கொண்டிருந்தேன் நாடோடி மன்னனைப் பொறுத்தவரை. நான் செய்த முடிவை மாற்ற முடியாத காரணத்தால் படம் தோல்வி அடையக்கூடாதே என்று பலவாறு குழம்பினார்கள் எனது நன்மையை விரும்பிய நண்பர்கள்.

ஆனால் என்னுடைய முடிவே சரியான முடிவு என்பதையும், தான் எந்த பாகத்தையும் ஏற்று நடிக்கத் திறமை பெற்றவர்கள் என்பதையும் எம்.என்.இராசம் அவர்கள் நிரூபித்துவிட்டார். புதுவிதமான பாத்திரத்தை ஏற்று நடித்துத் தனது கலை வாழ்வில் புதிய வெற்றியைத் தேடிக் கொண்டார் என்று ஏன் சொல்லக்கூடாது?

<strong>நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் -</strong>

முழுமையான வழிகாட்டிக்கு செல்ல <a href=”https://lordmgr.wordpress.com/2010/06/30/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c/&#8221; target=”_blank”>இங்கு </a>சொடுக்கவும்.

One comment on “திறமையை நிரூபித்தார் எம்.என்.ராசம்

  1. […] திறமையை நிரூபித்தார் எம்.என்.ராசம் […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s