நிர்வாகிகளாக ஜொலித்தவர்கள்

அடுத்தது படப்பிடிப்பு நிர்வாகம். திரு.கோவிந்தராசன் ஒரு அதிசய மனிதர். கடவுளைப் பற்றிச் சொல்லும் போது, திருடனும் கடவுளைக் குறை கூறுகிறான், ‘எங்களைக் காப்பாற்றவில்லையே, காவலாளியிடம் காட்டிக் கொடுத்துவிட்டாயே’ என்று…

காவலனும் குறை கூறுவான், ‘கள்ளனைக் காப்பாற்றி என்னைக் கைவிட்டு விட்டாயே’ என்று….
அதுபோலப் படத்தயாரிப்பு நிர்வாகியை அலுவலகப் பையன் முதல் பட உரிமையாளர் வரை கோபித்துக் கொள்வார்கள், குறை கூறுவார்கள்.

புத்தர் துறவு பூண்டதே படத் தயாரிப்பு நிர்வாகியாக இருந்ததினால்தான் என்று கூட வேடிக்கையாகச் சொல்வதுண்டு. அவ்வளவு கடினமான வேலை, எங்கு திரும்பினாலும் குற்றச்சாட்டுகள்தான் இருக்கும். சமயத்தில் நடிகர்களை அழைத்து வரவில்லை, ஒப்பனையாளர் எங்கே?, சோடனைகள் சரியாக இல்லை… எங்கே கோவிந்தராஜ்…..எதற்கெடுத்தாலும் யார் எந்தத் தவறு செய்தாலும் பொறுப்பேற்றுப் பதில் சொல்லவேண்டியவர் கோவிந்தராஜ்….
எத்தனையோ குற்றச்சாட்டுகள்! இவைகளையெல்லாம், சிறிதுகூடப் பொருட்படுத்தாமல் கடைசி வரை வேலை செய்து (காரோட்டியாகவும் கூடச் சில சமயம் தானே பணியாற்றி), படத்தை முடிப்பதற்குத் துணை செய்தார். ஆம்; படத்தை நல்ல முறையில் முடிப்பதிலே வெற்றி பெற்றார். இடிந்துவிழும் காட்சிகளில் சில இவரால் நிர்மாணிக்கப்பட்டன என்றால் திகைக்க வேண்டி வருமல்லவா?
இவருக்கு உறுதுணையாக இருந்தவர் திரு. பத்மனாபன் என்பவர், இவர் எம்.ஜி.ஆர். நாடகமன்றத்தின் தலைமை மின்சார அமைப்பாளர்ஆவார். கலைவாணர் அவர்களுடைய அன்புக்குப் பாத்திரமானவர்.
இந்த படத்துக்காக ஒப்பந்தம் ஆன உடனேயே இவர் கார் ஓட்டக் கற்றுக் கொண்டார் என்றறிந்த போது அதன் காரணம் எனக்குப் புரியாத புதிராகவே இருந்தது. ‘நாடோடி மன்னன்’ படம் எடுக்க ஆரம்பித்த பிறகுதான் அது புரிந்தது. படிப்பிடிப்பு ஒழுங்காகச் சரிவர நிறைவேறுவதற்காகவே அவர் கற்றுக் கொண்டார் போலும் என்று ; இவர் எப்போது தூங்கினார், எப்போது சாப்பிட்டார், எப்போது குளித்தார்,எப்போது உடைகளை மாற்றினார் என்பதே யாருக்கும் தெரியாது. ஆனால் எப்போதும் எங்கும் பத்னநாபனைக் காணலாம். சோர்வோ, சலிப்போ எதுவுமே அணுகவிடாத ஒரு தனிபெரும் சக்திபடைத்த தொழிலாளியாக, கலைஞானக் காரியம் ஒழுங்காக நிறைவேறுவதில் உரிமையாளனாக நடந்து, தான் தலைமை மின்சாரத் தொழிலாளி மட்டுமல்ல, திறமைமிக்க நிர்வாகியாகவும் கூட இருக்கமுடியும் என்பதை நிறைவேற்றி வெற்றி பெற்றவர் திரு. பத்மநாபன் என்று சொல்வது பொருத்தமல்லவா?
இன்னொருவர் திரு. கே.என்.குஞ்சப்பன் அவர்கள். இவர் என் தமையனார் எம்.ஜி.சக்கரபாணி அவர்களுடைய மைத்துனர் ஆவார். இவரும் எங்களுடன் சிறு வயது முதல் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பணியாற்றியவர். இவரைப்பற்றி அதிகம் எழுத விரும்பாத காரணத்தால் எழுதவில்லை.

<strong>நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் -</strong>

முழுமையான வழிகாட்டிக்கு செல்ல <a href=”https://lordmgr.wordpress.com/2010/06/30/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c/&#8221; target=”_blank”>இங்கு </a>சொடுக்கவும்.

Advertisements

One comment on “நிர்வாகிகளாக ஜொலித்தவர்கள்

  1. […] நிர்வாகிகளாக ஜொலித்தவர்கள் […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s