பிங்கலனாக பிரகாசித்த நம்பியார்


திரு.எம்.என்.நம்பியாரவர்கள், இதுவரையில் என்னுடன் நடித்த படங்களில் அவருக்கு மிகப் பொருத்தமாக அமைந்தது “நாடோடி மன்னன்” தான் என்று எண்ணுகிறேன்.

அந்த பாத்திரமே அவருக்காகத் தோற்றுவிக்கப்பட்டதோ என ஐயுறும் அளவுக்கு அவ்வளவு இயற்கையாகப் பொருந்திவிட்டது.

அவருடைய கட்டான உடலுக்கும், இளமைக்கும், முறுக்கான பேச்சுக்கும், துணிவான வாட்போரிடும் திறமைக்கும் வாய்ப்பளிக்க பிங்கலன் என்ற வேடம் உதவியிருக்கிறது.

ஒரு இடத்தில் அவர் பேசும் பேச்சே அதை விளக்கிறது. “வாட்ட சாட்டமான உடல்; வாளெடுத்துப் போர் புரியும் வலிமை; ஆரணங்குகளை மயக்குகின்ற அழகு “- இந்தப் பேச்சின் முழுக்கருத்துக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறார் நம்பியார்.

அவருடைய ஒவ்வொரு அசைவிலும் இளமைத்துடிப்பையும், வேகத்தையும் காண்கிறோம். சண்டை ஏற்படும் நேரத்திலும் கோழைத்தனமில்லாமல் தன் போர்திறமையில் நம்பிக்கை கொண்ட வீரனாகவே காட்சியளிக்கிறார். பிங்கலனின் பாத்திரம் எப்படி இருக்க வேண்டுமெனக் கற்பனை செய்யப்பட்டதோ… அதை உண்மை உருவமாக்கிக் காண்பித்து விட்டார் நம்பியார் என்பது ஒன்றே போதுமே அவருடைய வெற்றிக்கு அடையாளமாக.

திரு.டி.கே.பாலச்சந்திரன் ஆர்வமிக்கவர் ; குழப்பமோ, கலக்கமோ,களங்கமோ இல்லாத வாலிபர்; திறமையும், அனுபவமும் அக்கறையும் நிறைய உள்ளவர்.

நான் வளர்த்த சிங்கங்கள் உயிரோடு இருந்திருந்தால் கதைப் போக்கே வேறுவிதமாக இருந்திருக்கும். இவர் தாங்கியிருக்கும் பாத்திரத்திற்கும் இன்னும் அதிக வாய்ப்பு இருந்திருக்கும். அவர் பேச்சிலே அந்தப் பாத்திரத்தினுடைய இலட்சியத் துடிப்பையும், அவர் நடையிலே வாலிப மிடுக்கையும், பார்வையிலே தன் எண்ணத்தை வெளியிடும் கலைநுட்பத்தையும் காட்டித் தான் வெறும் நடிகன் மட்டுமல்ல, இலட்சியப் பாதையிலே முன்னேறிக் கொண்டிருக்கும் நல்ல கலைஞன் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருப்பதுவே அவருடைய வெற்றிக்கு எடுத்துக் காட்டாகும்.

வீரபாகு வேடத்தில் நடித்த திரு.கே.ஆர்.இராம்சிங் நடிப்பிலும் பேச்சிலும் தனக்கெனத் தணிப்பாணியை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். அவருடைய குரலைக் கேட்டாலே பலவீனர்கள் அதிர்ச்சி அடைவார்கள்.

நாடகமேடையிலே நன்கு நடித்துத் திரை உலகிலும் விளம்பரமடைந்த இவருடைய திறமைக்குத் தகுந்த வேடம் இன்னும் வழங்கப்படவில்லை. ஆயினும், வேலை குறைவாயிருந்தும் மக்கள், “வீரபாகுவேடம் போட்டவர்….அப்பப்பா…என்று பேசும்படி செய்து விட்ட இவருக்கு இதுவும் ஒரு வெற்றியென்றுதான் சொல்ல வேண்டும்.

அமைச்சராக நடித்த நந்தா ராம் பயில்வான் (ஆமாம்பூபதி நந்தாராம் அவர்கள்தான்) அவருடைய திறமைக்குத் தகுந்த புகழை இன்னும் அடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆங்கிலப் பாணியில் நடிக்க வேண்டுமா, காட்டுமிராண்டியாக நடிக்க வேண்டுமா, நாகரிக -சூழ்ச்சிமிக்க மனிதனாக நடிக்க வேண்டுமா, எந்த மாதிரியான பாகத்தில் வேண்டுமானாலும் திரு. நந்தாராம் அவர்களால் நடிக்க முடியும். நாடோடி மன்னனில் அமைச்சராக நடிக்கும் இவர், “அமைச்சர் ஓரளவுக்கு வயது முதிர்ந்தவர், அனுபவப் பட்டவர், பொறுப்புமிக்கவர், என்பதையெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார் தனது நடிப்பில்.

நிமிர்ந்த நெஞ்சுடன் இவர் நடப்பதை நன்கு கவனித்தவர்கள்… பாரதியார், “நிமிர்ந்து நட” என்று சொல்லியதற்கு இவர் இலக்கணமாக இருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றும்.

நாடோடி மன்னனில் முக்கியத் திருப்பத்திற்குக் காரணமாக இருக்கும் அமைச்சருடைய வேடத்தைச் சரிவர நிறைவேற்றியதால் தானே அந்தக் காட்சிகள் நினைவிலிருக்கின்றன. ஆகவே அந்தப் பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்றிய இவருக்கு இதுவும் ஒரு வெற்றி என்று சொல்வது பொருத்தம் தான்.

தளபதி ஒரு ஆத்திரக்காரர்; தன் மனத்தில் அடக்கி வைத்துக் கொள்ளும் அனுபவமில்லாதவர்; யாரையும் சந்தேகிப்பார்; நம்பி விடுவார். இத்தகைய குணத்தைப் பெற்ற தளபதி பாத்திரத்தை அதற்குப் பொருந்தும் விதத்தில் நடித்திருக்கிறார் திரு.டி.வி.சிவானந்தம். இவரும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பல காலம் ஒன்றாய் வாழ்ந்தவர்; மதுரையில் வசித்துப் பல ஆண்டுகள் தனிப்பட நாடகங்களில் நடித்து அனுபவம் பெற்றவர். இவர் சில ஆண்டுகட்கு முன் படங்களில் நடித்திருந்தாலும், நாடோடி மன்னனில் தன்னை மக்களின் நினைவில் இருக்கும்படி செய்து கொண்டது இவருக்குக் கிடைத்த வெற்றியென்று ஏன் சொல்லக் கூடாது?

<strong>நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் -</strong>

முழுமையான வழிகாட்டிக்கு செல்ல <a href=”https://lordmgr.wordpress.com/2010/06/30/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c/&#8221; target=”_blank”>இங்கு </a>சொடுக்கவும்.

One comment on “பிங்கலனாக பிரகாசித்த நம்பியார்

  1. […] பிங்கலனாக பிரகாசித்த நம்பியார் […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s