முத்திரை பதித்த முத்துக்கள்

நகைச்சுவை நடிகைகளில் முதலில் வருவது அங்கமுத்து அவர்கள். சகாயத்திடம் பேசும்போதும், பணத்தைக் கண்டதும் மரியாதை காட்டும் போதும்,மகாராஜாவே தனது உணவு விடுதிக்கு வந்த விட்டதை அறிந்து தன்னை மறந்து பேசுவது, ஓடுவது போன்றவைகளைச் செய்யும் போதும் அவ்வளவு இயற்கையாக நடித்துக் காட்டக்கூடிய யாராவது உண்டென்றால் அதில் முதலில் நிற்பவர் அங்கமுத்து அவர்களாகத் தானிருப்பார்கள். ஓரிரண்டு காட்சிகளிலேயே தனது நகைச்சுவை நடிப்பால் மக்களைச் சிரிக்கச் செய்து, தனது ஸ்தானம் நிலையானது என்பதை எளிதாக வெளிக் காட்டிய அவருக்கு, இதுவரை ஏற்பட்டுள்ள பல வெற்றிகளில் இதுவும் ஒன்று என்று சொல்லுவது தானே சரி.

திருமதி முத்துலட்சுமி அவர்களுடைய வேடம் ஒரு முக்கியக் கருத்தை வெளிபடுத்தும் வேடம். தகுந்த கணவனைப் பெறப் பூசை செய்தால் போதும் என்ற தத்துவத்தை நம்பி ஒருவனைப் பெற்று விட்டவளும் கூட. ஆனால் திருமணமோ இல்லை ; அவனுடன் வாழவுமில்லை.

எங்கிருதோ வந்தான் ; எங்கேயோ போய் விட்டான் அதுதான் முத்துலட்சமி அவர்கள் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தின் காதல் நிலை….

பாவம் ! அவளை அவளுடைய நம்பிக்கை ஏமாற்றிவிட்டது.

அதோடு மக்களுக்கும் ஒரு நல்ல கருத்தை அது போதிக்கிறது. தகுந்த கணவனைப் பெறுவதற்குப் பூசை செய்தால் போதாது; பெண்ணுக்கு தேவையான அன்பு, அறிவு, ஆற்றல் இவைகளிலிருந்தால் தகுந்த கணவன் கிடைப்பான் என்பதையும் சொல்லுகிறது.

இந்தப் பாகத்தை மிகப் பொருத்தமாக நடித்துப் படத்தின் திருப்பத்தில் மக்களை மகிழ்ச்சி நிறைந்த பாதைக்கு அழைத்துச் சென்று வெற்றி பெற்றார் என்பதை யாரும் சொல்லலாம்.

பாடுபட்டாத் தன்னாலே என்ற பாடலுக்குத் தனி நடனம் ஆடிய சந்திரா அவர்கள், தான் எதிர் காலத்தில் நல்ல ஒரு நிலைக்கு வரக்கூடியவர் என்பதை மக்களின் நினைவிலிருக்குமாறு செய்து கொண்டுவிட்டார்.

நடனமாடியவர்களைக் குறிப்பிடாமலிருக்க முடியாது. எத்தனையோ படங்களில் நடனமாடியவர்கள் ! நடனமாடுவது இவர்களுக்குப் புதிது அல்ல. தாங்கள் பணியாற்றும் ஒவ்வொரு படத்திலும் அக்கறையோடு ஆடுபவர்கள் தான். நானும் பல படங்களில் இவர்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் நாடோடி மன்னனில் இவர்கள் காட்டிய அக்கறை வேறுவிதமானது.

ஒரு ஷாட் எடுக்க இரண்டு மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டி நேரும். அப்போதும் கூடச் சலிப்படையாமல் அழைத்ததும் வந்து புதுத்தென்போடு ஆடிய இவர்களின் அக்கறையை எப்படிப் பாராட்டுவது? இவர்களில் முன்னணி நட்சத்திரமாக வரக்கூடியவர்கள் பலருண்டு. வெகுவிரைவில் இவர்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்குமென்றும், சினிமா உலகம் அதை இழந்து விடாதென்றும் நான் உறுதியாக நம்புகிறேன். அழகு, நடிப்பு, நடனமாடும் திறமை – பேச்சு வன்மை – சிலருக்கு நன்கு பாடவும் தெரியும் – இதைவிட, கதாநாயகி வேடத்திற்கோ, வில்லியாக நடிப்பதற்கோ வேறு தகுதி என்ன வேண்டும். ஆண்களும், பெண்களும் இரவு இரண்டு மணிக்கு, வேறு படத்திலுள்ள வேலைகளை முடித்துக் கொண்டு இங்கு வந்து மேக்- அப், புதுவிதத் தலையலங்காரம் முதலியவற்றைச் செய்து, உடைகள் அணிந்து, செட்டிற்கு வந்து வேலை செய்தனர். இவர்களின் அன்புப் பணியினால் நாடோடி மன்னனின் உச்ச நிலைக் காட்சிகளுக்கு உயிர் ஊட்டப்பட்ட தென்றால் போதாதா?….

இதைவிட இக்கலைஞர்களின் வெற்றிக்கு என்ன அத்தாட்சி வேண்டும்? திராவிட மொழிப்பாடலான நான்கு மொழிப் பாடல்களுக்கு நடனம் ஆடியவர்களிலும் பலர் இருக்கின்றனர், எதிர்கால நட்சத்திரங்களாகத் தகுதி பெற கூடியவர்கள். பயப்படாமல் துணிந்து முயற்சி செய்தால், புதுமுகங்கள் இல்லையே என்று கூறுகிறவர்கள் மகிழ்ச்சிப் பெருக்கிலே திளைக்கும் அளவுக்கு நல்ல நல்ல புதுமுகங்கள் கிடைப்பார்கள். இத்தகைய எண்ணத்தைத் தோற்றுவித்ததே போதும் இந் நடிகைகள் கலைத் திறமையை வெளிக் காண்பிப்பதில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பதற்கு.

<strong>நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் -</strong>

முழுமையான வழிகாட்டிக்கு செல்ல <a href=”https://lordmgr.wordpress.com/2010/06/30/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c/&#8221; target=”_blank”>இங்கு </a>சொடுக்கவும்.

2 comments on “முத்திரை பதித்த முத்துக்கள்

  1. […] முத்திரை பதித்த முத்துக்கள் […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s