விமர்சித்த பத்திரிகைகளுக்கு நன்றி

எம்.ஜி.ஆரை வியந்து போற்றும் பத்திரிக்கை

இனி, விமரிசனம் செய்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி கூற இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுகிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசையும், கொள்கைப் பிடிப்பும், நம்பிக்கையும் இருக்கும். சில சமயம் ஒருவருடைய நம்பிக்கை இன்னொருவருடைய நம்பிகையுடன் மோதுவதுமுண்டு. ஆனால், அதை மனதில் கொண்டு நல்லதைப் பாராட்டவோ, புகழவோ, வரவேற்கவோ கூடாது என்று எண்ணினால் பண்பாடு செத்துவிடும் வாழாது வளராது.

நாடோடி மன்னன் விமர்சனத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான ஒன்றிரண்டு ஏடுகளைத் தவிர மற்ற எல்லாப் பத்திரிகைகளும், படத்தின் போக்கு எப்படி இருக்க வேண்டுமென்று விளக்கிக்கூறுவது போன்ற குறைகளை எடுத்துக் காட்டி, குணத்தைப் போற்றிய செயலைப் பாராட்டித்தான் தீர வேண்டும்.

பத்திரிகைஆசிரியர்களும், அவரைச் சார்ந்தவர்களும் குறைகளைக் கண்டிக்கும் தந்தையைப்போலவும், அன்பு காட்டி அரவணைக்கும் அன்னையைப்போலவும் இருக்கவேண்டும். பத்திரிகாசியர்களும், கலைஞர்களும் நல்லதை ஆக்குபவர்களாக இருக்க வேண்டுமே தவிர அழிப்பவர்களாக இருக்கக் கூடாது.

ஆனால், ஒன்றிரண்டு ஏடுகள் இந்த நியதிக்கு மாறாக நல்லதை அழிக்கும் பணியிலேயே ஈடுபட்டிருக்கும் இந்த நேரத்தில், எந்த அரசியல் கட்சியினராக இருந்தாலும், எந்தக் கொள்கையைப் பிரசாரம் செய்தாலும், கலை – நல்லதற்காகப் பண்பு கெடாமல், ஒழுக்கத்திற்கும் மக்கள் வாழ்வுக்கும் பயன்படுத்தப்படுகிறதா என்று நடுநிலையில் நின்று ஆராய்ந்து விமர்சனம் செய்த ஆசிரியர்களின் பெருநோக்கு பத்திரிகை உலகிற்கே பத்திரிகை தர்மத்திற்கே மிகப் பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது என்று துணிந்து கூறமுடியும்.

நல்ல நியதியை மேலும் உறுதிப்படுத்தியதற்காக அந்த மரியாதைக்குரிய ஆசிரியப் பெருமக்களை வாழ்த்துகிறேன்; வணங்குகிறேன்.
நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் –

முழுமையான வழிகாட்டிக்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

One comment on “விமர்சித்த பத்திரிகைகளுக்கு நன்றி

  1. […] விமர்சித்த பத்திரிகைகளுக்கு நன்றி […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s