ஜம்பம் இல்லாத ஜம்பு

படத்தின் உயிர்நாடி எடிட்டிங் (வெட்டி ஒட்டி இணைத்தல்) கதை,வசனம், பாடல்கள், நடிப்பு, காட்சி சோடனைகள் மற்றும் எல்லாம் எவ்வளவுதான் திறம்பட இருந்தாலும் எடிட்டிங் சரிவரச் செய்யாமற் போனால் படத்தின் தோல்வி நிச்சயமாகி விடும். ஆரம்பத்தில் திரு. ஆறுமுகம் என்பவர் இருந்தார். அவர் சில காரணத்தால் விலகினார். அதன் பிறகு திரு. பெருமாள் அந்தப் பொறுப்பை ஏற்றார். படத்தின் முடிவு நேரத்தில் அவரால் வேலை செய்ய முடியாமற் போன காரணத்தால் வேறொருவர் துணைக்கு நியமிக்கப்பட்டார் . அவரும் அதில் தோல்வியுறவே, கடைசியாக வண்ணப்பகுதிகளில் பெரும் பகுதியை எடிட் செய்து கொடுக்கும் பொறுப்பைத் திரு. ஜம்பு அவர்கள் ஏற்றார். அவருடைய விருப்பத்தின் படியும் வற்புறுத்தலின் படியும் தான் அவருடைய பெயரைப் படத்தில் வெளியிடவில்லை.

திரு.ஜம்பு அவர்கள் கடைசி நேரத்தில் செய்த பணிக்கும் அவருடைய நேர்மைக்கும் கிடைத்த பெரும் வெற்றி இது. இந்தக் காலத்தில் யாரும் செய்யாத தியாகத்தைச் செய்து தொகுப்பவர்களின் ஒற்றுமைக்கும், கடமை பெரிது ; விளம்பரமல்ல என்பதற்கும் வெற்றி தேடிந்தந்தவர் திரு.ஜம்பு அவர்கள்.

நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம் –

முழுமையான வழிகாட்டிக்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

3 comments on “ஜம்பம் இல்லாத ஜம்பு

  1. RV சொல்கிறார்:

    நாடோடி மன்னன் பற்றிய பல சுவாரசியமான விஷயங்களை உங்கள் வலைப்பூவில் பார்த்தேன். வாழ்த்துக்கள்!

    • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

      நன்றி நண்பரே!.

      இதெல்லாம் உங்களைப் போன்ற பெருந்தன்மையான பதிவர்களால் நிகழந்தது. நாடோடி மன்னன் விமர்சனத்தினை வலையுலகிற்கு வழங்கி, எங்களை கடன்காரணாக மாற்றி விட்டீர்கள்.

      நன்றி தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்!

ஜெகதீஸ்வரன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி