எனக்கு குழந்தை இல்லையே – வருத்தம் கொண்ட எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரின் புகழுக்காக தோற்றுவிக்கப்பட்ட இந்த வலைப்பூவை தமிழ்மணம் நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டு தமிழ் மணத்தில் இணைத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு என் நன்றிகள்@.

– சகோதரன் ஜெகதீஸ்வரன்.

குழந்தைகளுடன் எம்.ஜி.ஆர்

தனக்குக் குழந்தை இல்லை என்ற குறை, எம்.ஜி.ஆரின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. ஒரு சிலரிடம் மட்டும் அவர் மனம் விட்டுப் பேசுவார். அவர்களில், வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஒருவர். “அன்பே வா”, “பெற்றால்தான் பிள்ளையா”, “வேட்டைக்காரன்”, “தாய் சொல்லைத் தட்டாதே” உள்பட எம்.ஜி.ஆர். நடித்த 14 படங்களுக்கு வசனம் எழுதியவர்.

எம்.ஜி.ஆர். தன்னிடம் கூறியதை, பின்னர் ஒரு கட்டுரையில் ஆரூர்தாஸ் எழுதியுள்ளார். ஆரூர்தாஸ் குறிப்பிட்டிருப்பதாவது:-

“ஒரு நாள், ஒப்பனை அறையில், நாங்கள் தனித்திருந்த வேளையில் எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்னார்: “பசி பட்டினியின் எல்லையையே பார்த்தவன் நான்! அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளின் சிகரத்தைத் தொட்டிருக்கிறேன். இதெல்லாம் கடந்த காலத்தில். இப்போது, புகழின் உச்சியில் இருக்கிறேன். வசதிக்கு பஞ்சம் இல்லை. தினமும் என் வீட்டில் மூணு வேளையும் குறைஞ்சது அம்பது அறுபது இலைங்க விழுது. ஆனாலும் ரெண்டே ரெண்டு குறைங்களை மட்டும் என்னிக்குமே என்னால போக்கிக்கவே முடியாது.

முதலாவது, குழந்தை வாரிசு இல்லாத குறை! ”

அப்போது நான் இடைமறித்து, “ஏன்? பெருந்தலைவர் காமராஜருக்குக் கூடத்தான் குழந்தைங்க _வாரிசு இல்லை. அதனால் ஒரு குறையும் இல்லையே” என்றேன்.

“அப்படி இல்லை. நீங்க சொல்றது சரி இல்லை. காமராஜருக்குக் கல்யாணமே ஆகாத காரணத்துனால குழந்தை இல்லை. ஆனா, எனக்கு ரெண்டு மூணு கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தைகூட பிறக்கலியே. `எந்த ஒரு புண்ணியவதியாவது என் குழந்தையை அவவயித்துல பத்து மாசம் சுமந்து பெத்து, என் கையிலே கொடுக்கமாட்டாளா அப்படிங்குற அந்த நிரந்தரமான ஏக்கம் என் நெஞ்சை விட்டு எப்பவுமே நீங்க மாட்டேங்குது.

ஜோதிடக் கலையில் நிபுணர்களான இரண்டு மூன்று பேர் ஒரே கருத்தைச் சொன்னார்கள். “இது பலதார ஜாதகம்! உங்கள் வாழ்க்கையில் பல பெண்கள் குறுக்கிடுவார்கள். அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் நீங்க குடுப்பீங்க. ஆனா அவங்க யாரும், உங்களுக்கு வேண்டிய ஒரு குழந்தையைக் கொடுக்கமாட்டாங்க. கொடுக்கவும் முடியாது” என்றார்கள்.

தன்னை குழந்தையை பாவிச்சிக்கும்படி `ஜானு’ (வி.என்.ஜானகி) எனக்கு ஆறுதல் சொல்லிச்சு. குழந்தையைப் பெத்துக்குடுக்க வேண்டிய மனைவியை, குழந்தையா நினைச்சுக்க முடியுமா என்ன?

என் அண்ணனுக்கு அத்தனை குழந்தைகளைக் கொடுத்த கடவுளுக்கு எனக்கு ஒரே ஒரு குழந்தையைக்கூட குடுக்க மனசு வரலே பாத்திங்களா? என் உடம்புல ஓடுற அதே ரத்தந்தானே அவர் உடம்புலேயும் ஓடுது! பின்னே ஏன் இப்படி?

போகட்டும். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!

என்னுடைய இரண்டாவது குறை என்னன்னா, ஏதோ ஒரு அடிப்படைக் கல்வி அறிவு என்கிட்டே இருக்கு. அதுவும் நானா, ஆர்வத்துல கத்து வளர்த்துக்கிட்டது. அதைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியா பெரிசா ஒண்ணும் நான் படிச்சுத் தெரிஞ்சிக்கலே. அதுக்கு எனக்கு இளமையிலே வறுமையின் காரணமா வசதியும் வாய்ப்பும் இல்லாமல் போயிடுச்சி.

மத்தவங்க ஆங்கிலத்துலேயும், நல்ல தமிழ்லேயும் சரளமாகப் பேசி அரிய பெரிய கருத்துக்களை எடுத்துச் சொல்றதைக் கேக்கும் போதும், அண்ணா, கிருபானந்த வாரியார் இவங்களோட சொற்பொழிவைக் கேட்கும் போதும், என்னால அவங்களை மாதிரி பேச முடியலியேன்னு நினைத்து எனக்கு நானே வருத்தப்படுவேன்.

ஆனாலும் எப்படியோ பேசிச் சமாளித்து, மத்தவங்களைச் சந்தோஷப்படுத்திடுவேன். ஆயிரந்தான் இருந்தாலும், குறை குறைதானே! அதிலேயும் பூர்த்தி செய்ய முடியாத குறை!

அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா, அதுலேயாவது, நான் பெரிய புள்ளைக்குட்டிக்காரனாகவும், சிறந்த கல்விமானாகவும் இருக்கணும்!”

இவ்வாறு எம்.ஜி.ஆர்.கூறியதாக ஆரூர்தாஸ் குறிப்பிட்டுள்ளார். எண்ணற்ற தமிழ் மக்கள் குழந்தையோடு மகிழ்ச்சியாக பொழுது கழிக்க நடித்தவரும், சரியான சட்டங்களை இயற்றி மகிழ்ச்சியை நிலை கொள்ள செய்தவருமான நமது எம்.ஜி.ஆரின் குறையை இறைவன், அடுத்தப் பிறவியில் நிச்சயம் நீக்கியிருப்பான்.

6 comments on “எனக்கு குழந்தை இல்லையே – வருத்தம் கொண்ட எம்.ஜி.ஆர்

 1. அபிஅப்பா சொல்கிறார்:

  உண்மைதான். எல்லோருக்கும் இருக்கும் கவலை தானே!

  திரு.எம் ஜி ஆர் அவர்கள் மறைந்து இத்தனை வருடம் ஆன பின்பும் அவரது புகழ் பாட இப்போதும் இருக்கும் உங்களை போன்ற உண்மையான தொண்டர்களே அவருடைய பலம். அவருடைய புகழ் எங்களை போன்ற திமுகவினரையே பல சமயம் ஆச்சர்ய பட வைக்கும் விஷயமாகும்.

  தொடர்ந்து அவரை பற்றிய குறிப்புகளை எழுதுங்கள் அன்பரே!

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   வேற்று கட்சி ஆள் என ஏன் தனித்துப் பார்க்கின்றீர்கள். உங்களுடைய தலைவர் கருணாநிதியின் நண்பர் என்று எண்ணிப் பாருங்கள். தான் முதல்வராக எம்.ஜி.ஆரே காரணம் என கருணாநிதியே ஒரு முறை கூறியுள்ளார். இருவரின் நட்பும் இறுதிவரை இருந்தன என்பது என் எண்ணம்.

   எம்.ஜி.ஆரைப் பற்றி குறிப்புகள் எழுதச் சொன்னமைக்கும், உங்கள் வருகைக்கும் நன்றிகள்

 2. selvarajmp சொல்கிறார்:

  குழந்தையைப் பெத்துக்குடுக்க வேண்டிய மனைவியை, குழந்தையா நினைச்சுக்க முடியுமா `எந்த ஒரு புண்ணியவதியாவது என் குழந்தையை அவவயித்துல பத்து மாசம் சுமந்து பெத்து, என் கையிலே கொடுக்கமாட்டாளா அப்படிங்குற அந்த நிரந்தரமான ஏக்கம் என் நெஞ்சை விட்டு எப்பவுமே நீங்க மாட்டேங்குது.

 3. assanrafeek சொல்கிறார்:

  intha ulaham ulla varai ponmanachammal puhal irukum.

 4. பிரபாகர் சொல்கிறார்:

  தலைவரின் முதல் குறையை நான் உணர்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s