சாகும் வரை எம்.ஜி.ஆரை மறக்க மாட்டேன் – கலைஞர் கருணாநிதி

எம்.ஜி.ஆரைப் பற்றி அவரது நண்பரும், சக அரசியல்வாதியுமான தற்போதைய முதல்வர் கருணாநிதி பொதுக் கூட்டங்களிலும், முக்கிய நிகழ்வுகளிலும் மறக்காமல் சொல்லவார். சட்டமன்ற கட்டிடம் புதியதாக கட்டப்பட்ட பிறகு, பழைய சட்டமன்ற கட்டிட வளாகத்தில் இறுதிக் கூட்டத்தொடரில் எம்.ஜி.ஆர் தான் என்னை தி.மு.கவின் தலைவராக்கியவர். முதல்வராக அமர்த்தியவர் அவரே என்றும், அதனால் நன்றி மறவாமல் சாகும் வரை அவரை நினைத்துக்கொண்டிருப்பேன் எனவும் கருணாநிதி கூறினார்.

அந்தப் பேச்சு இங்கே,..

முதல்வரும் எம்.ஜி.ஆரின் நண்பருமான கருணாநிதி

எ‌ன்னை தி.மு.க. தலைவர் ஆக்கியதற்கும் முதலமைச்சர் ஆக்கியதற்கும் எ‌ம்.‌ஜி.ஆ‌ர் ஒரு முக்கிய காரணம் எ‌ன்று‌ம் அந்த நன்றிக்காக எம்.ஜி.ஆரை கடைசிவரை மறக்க மாட்டே‌ன் எ‌ன்று‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடர் புதிய சட்டமன்ற வளாகத்தில் நடைபெறும் என்று‌ம் முதலமைச்சர் சூசகமாக தெரிவித்தார். சட்டமன்றத்தில் இன்று தற்போதைய சட்டமன்றத்தின் வரலாறு குறித்து முதலமைச்சர் கருணாநிதி உருக்கமான உரையாற்றினார். அப்போது அவர் இந்த சட்டமன்றத்தின் வரலாறுகளையும் அதன் பெருமைகளையும் விரிவாக எடுத்துரைத்து பேசினார்.

தொடர்ந்து பே‌சிய முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி, இந்த சட்டமன்றத்தில் கடைசியாக நடைபெறும் கூட்டத்தொடர் இது. ஒரு இடத்திலிருந்து வெளியேறி புதிய இடத்தில் குடியேறும்போது கடந்த கால வரலாறுகளை திரும்பிப் பார்ப்பதுபோல இந்த சட்டமன்றத்தின் நிகழ்வுகளை திரும்பிப் பார்த்து நல்லவற்றை எடுத்துக்கொண்டு விரும்பத்தகாத நிகழ்வுகளை மறந்து புதிய இடத்தில் மக்கள் நலனுக்காக பாடுபட வேண்டும்.

புதிய சட்டமன்ற வளாகப் பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருவதை அறிவீர்கள். எதிர்க்கட்சித் தலைவர் இங்கே பேசிவிட்டு சென்றபோது கடைசியாக எம்.ஜி.ஆர் பாடிய ஒரு பாட்டை பாடிவிட்டு சென்றார். அவர் பேசியதற்கெல்லாம் நான் பதில் அளிக்க விரும்பவில்லை. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற பாட்டை எம்.ஜி.ஆர் என்னை மனதில் வைத்துத்தான் பாடினார்.

ஒரு தலைவன் இருக்கிறார் மயங்காதே என்றுதான் கூறினாரே தவிர தலைவி என்று எம்.ஜி.ஆர் கூறவில்லை. எனவே தலைவன் என்று அவர் என்னை கூறியதாகத்தான் நான் கருதுகிறேன். எம்.ஜி.ஆர் என்னுடைய 40 ஆண்டு கால நண்பர். என்னை தி.மு.க தலைவர் ஆக்கியதற்கும், முதலமைச்சர் ஆக்கியதற்கும் அவர் ஒரு முக்கிய காரணம். அந்த நன்றிக்காக எம்.ஜி.ஆரை நான் கடைசிவரை மறக்க மாட்டேன் என்று கருணாநிதி கூ‌றினா‌ர்.

நன்றி –

வெப்துனியா

One comment on “சாகும் வரை எம்.ஜி.ஆரை மறக்க மாட்டேன் – கலைஞர் கருணாநிதி

  1. அபிஅப்பா சொல்கிறார்:

    அருமை நண்பரே! உங்கள் எல்லா பதிவுகளும் நன்றாகவும், பல புதிய செய்திகளை கொண்டதாகவும் இருக்கின்றது. கலைஞர் எம்.ஜி.ஆர் மேல் கொண்ட பாசமும், எம்.ஜி.ஆர் அவர்கள் கலைஞர் மீது கொண்ட பாசமும் எப்போதும் இவர்கள் இருவரையும் அறிந்தவர்ள் உணர்ந்து பலமுறை சொல்லியும் எழுதியும் பார்த்திருக்கின்றேன்.

    அது போல சட்டசபையில் ஒரு அதிமுக உறுப்பினர் கருணாநிதி என சொன்ன போது அவர் கடிந்து கொண்டு கலைஞர் என சொல்ல சொல்லி அறிவுறுத்தியமையும் படித்திருக்கின்றேன். எம்.ஜி ஆர் ஒரு சகாப்தம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s