ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 1

எம்.ஜி.ஆர்! தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த ஆக்ஷன் ஹீரோ! அண்ணாவின் இதயக்கனி என்று போற்றப்பட்ட இவர் அரசியலிலும் ஹீரோவாகவே இருந்தார். சாதாரண போர் வீரனாக அறிமுகமாகி, சினிமாவுலகின் சக்கரவர்த்தியாக திகழ்ந்த எம்.ஜி.ஆர், ஏழைகளின் காவலனாக நடித்த படங்கள் ஏராளம். வெறும் நடிப்பாக இல்லாமல் நிஜமாகவே ஏழைகளிடம் அவர் காட்டிய அன்பு, அவருக்கு முதலமைச்சர் நாற்காலியை கொடுத்தது. இன்றைய ஜுஜுபி ஹீரோக்கள் கூட முதலமைச்சர் கனவோடு உலா வருவதற்கு இவர்தான் காரணம்.

சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்குத்தான் முதல் படம் என்றில்லை. படத்தில் வில்லனாக நடித்த டி.எஸ்.பாலையா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் முதல் படம். அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன் தமிழ் படங்களை இயக்க ஆரம்பித்ததும் இதன் மூலம் தான். இயக்குநர் (கிருஷ்ணன்) பஞ்சுவுக்கும் இது முதல் படம்.

ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசனின் சினிமா உலகப் பிரவேசம் இதில்தான் ஆரம்பமானது. அவர் ஆனந்த விகடன் இதழில் எழுதிய சதிலீலாவதி தொடர் நாவல்தான் படமாகியது. பெரும் வெற்றி பெற்ற சதிலீலாவதி மதுவின் மூலம் ஏற்படும் தீமையால் ஒரு பெரிய குடும்பமே நாசமாயிற்று என்பதை கதையின் மூலக் கருத்தாக வைத்து எடுக்கப்பட்ட படம். படம் பார்த்துவிட்டு ஏராளமான ரசிகர்கள் மதுவுக்கு அடிமையாகியிருந்த நாங்கள் இப்படம் பார்த்துவிட்டு திருந்திவிட்டோம் என்று எழுதியிருந்தார்களாம்.

எம்.ஜி.ஆருக்கு இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். சிறிய வேடம்தான். தட்சயக்ஞம் மகாவிஷ்ணு வேடத்தில் எம்.ஜி.ஆருக்கு மட்டுமன்றி தமிழ் சினிமாவுக்கு முதல் வெள்ளிவிழா படம். சாலி வாகனன் தொடர்ந்து சின்னஞ்சிறு வேடங்களிலேயே நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு 12-வது படமான இதில் குறிப்பிட்டு சொல்லும்படியான வேடம். படத்தில் கதாநாயகன் ரஞ்சன்தான் சாலி வாகனன். எம்.ஜி.ஆர். விக்ரமாதித்தனாகவும் அவரது மந்திரி பட்டியாக சாண்டோ சின்னப்பா தேவரும் நடித்தார்கள். படத்தில் ஒரு காட்சியில் ரஞ்சனும் எம்.ஜி.ஆரும் ரஜபுத்திர வாள்களுடன் மோதுவது படமானது.

கதையில் ரஞ்சனின் கை ஓங்கியிருக்க வேண்டும். ஆனால் கேமிரா ஓடிக் கொண்டிருக்கையில் ரஞ்சனை விட எம்.ஜி.ஆரின் வாள்வீச்சு வேகமாக இருந்தது. ரஞ்சனால் எம்.ஜி.ஆருக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அதனால் கேமராவை கட் சொல்லி நிறுத்திய ரஞ்சன், டைரக்டர் பி.என்.ராவிடம் எம்.ஜி.ஆர் வேண்டுமென்றே என்னை அடிக்கிறார் என்று புகார் செய்தார். டைரக்டர் எம்.ஜி.ஆரை அழைத்து விசாரிக்க, எம்.ஜி.ஆர் செய்தது சரி என்பதை விளக்கினார். அதன் பின்னர் ரஞ்சனை விட குறைவான வேகத்தில் வாள் வீசும்படி எம்.ஜி.ஆருக்கு டைரக்டர் யோசனை சொன்னார். எம்.ஜி.ஆர் மனம் நொந்தார். நம் உண்மையான திறமையை எப்படித்தான் வெளிப்படுத்துவது என்று சின்னப்ப தேவரிடம் கூறி வேதனையை வெளிப்படுத்தியபோது அவர் எம்.ஜி.ஆரிடம், உண்மையான திறமைக்கு என்றுமே மதிப்பு உண்டு. உங்களிடமுள்ள திறமை ஒரு நாள் உலகுக்குத் தெரியத்தான் போகிறது என்று சமாதானம் கூறினார். ஸ்ரீமுருகன் சிவனாக எம்.ஜி.ஆர் நடித்து ருத்ர தாண்டவம், ஆனந்த தாண்டவம், இரண்டும் ஆடி புகழ் பெற்றார். பார்வதியாக உடன் நடனமாடிய வி.என். ஜானகி ராஜகுமாரியில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

எம்.ஜி.ஆரின் நடனத்திற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு. அதனால் மாத சம்பளத்திற்கு நடித்து கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு இதில் கூடுதலாக பணம் தரப்பட்டது. ராஜகுமாரி தனது 15-வது படத்தில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க முடிந்தது. படத்தின் இயக்குநர் ஏ.ஏஸ்.சாமி. தொழில்நுட்பம் தெரிந்த கெடுபிடியான இயக்குநர். தான் நினைத்ததை சாதிக்க வேண்டுமென்ற உணர்வுடையவர். படம் வளர்ந்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரின் முகம் மட்டுமே நடிக்க வேண்டும். குளோஸ் அப் ஷாட் அது. நடிக்கும்போது முகத்தில் மட்டுமே பாவம் வரவேண்டும். உடல் அசையக்கூடாது என்றார் சாமி. எம்.ஜி.ஆர் முகத்தில் பாவம் காட்டியபோது உடலும் சேர்ந்து அசைந்தது. சாமி அதை கண்டித்தார்.

எம்.ஜி.ஆர் சாமியிடம் வந்து என்னால் முடியவில்லை. நீங்கள் நடித்து காட்டுங்கள் என்று சொல்லிவிட்டார். கடைசியில் எம்.ஜி.ஆர் நடித்தபடிதான் காட்சி படமானது. இப்படித்தான் வளர்ந்த காலத்திலேயே தன் தனித்தன்மையை நிரூபித்தார் எம்.ஜி.ஆர். அதற்கான தைரியமும் அவருக்கு இருந்தது. ராஜகுமாரி 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது. மருதநாட்டு இளவரசி ராஜகுமாரிக்கு பின் தொடர்ந்து ஐந்து படங்களில் கதாநாயக அந்தஸ்து இல்லாமல் நடித்த எம்.ஜி.ஆருக்கு இதில் மீண்டும் கதாநாயகன் வேடம்.

நன்றி –
தமிழ் சினிமா

9 comments on “ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 1

 1. butterfly Surya சொல்கிறார்:

  அருமை. தொடருங்கள்..

  வாழ்த்துகள்.

 2. யாழ் சொல்கிறார்:

  காலத்தால் அழியாத சரித்திர நாயகனின் வரலாறு. தொடரட்டும்.

  நன்றி
  யாழ்

 3. fan of lord mgr sir சொல்கிறார்:

  Come on boy, really my father likes this blogger,so please publish about lord mgr sir.please

 4. saravana kuamr சொல்கிறார்:

  nanraka unllathu. nantri nambarea

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s